இலங்கை மலை நாகணவாய்
| இலங்கை மலை நாகணவாய் | |
|---|---|
| ஆண் மேலே, பெண் கீழே | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | துருனிடே
|
| பேரினம்: | |
| இனம்: | கி. பிடிலோஜெனிசு
|
| இருசொற் பெயரீடு | |
| கிராகுலா பிடிலோஜெனிசு பிளைத், 1887 | |
இலங்கை மலை நாகணவாய் (Sri Lanka hill myna) அல்லது சிலோன் நாகணவாய் (கிராகுலா பிடிலோஜெனிசு) என்பது ஒரு நாகணவாய் பறவைச் சிற்றினம் ஆகும். இது துரினிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த பறவை இலங்கையில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரி.
விளக்கம்
[தொகு]இந்த குருவி வரிசையினைச் சேர்ந்த பறவை, பொதுவாக காடுகளிலும் சாகுபடி பகுதிகளிலும் காணப்படுகிறது. இலங்கை நாகணவாய் ஒரு பொந்துக்குள் கூடு கட்டுகிறது. சாதாரண ஒரு இனப் பெருக்க பருவத்தில் இரண்டு முட்டைகள் வரை இடும்.
இலங்கை மலை நாகணவாய் 25 செமீ நீளமுள்ளது. பறவைகள் பச்சை நிறத்தில் பளபளக்கும் கருப்பு நிற இறகுகளைக் கொண்டுள்ளன. தலை, கழுத்து ஊதா நிறத்தில் உள்ளன. பெரிய வெள்ளை இறக்கை திட்டுகள் உள்ளன. இவை பறக்கும் போது தெளிவாகத் தெரியும். வலுவான கால்கள் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் உள்ளன. மேலும் கழுத்தில் மஞ்சள் தொங்கு சதைகள் உள்ளன.
தொங்கு சதையின் மாறுபட்ட வடிவம், நிலை, தடிமனான் ஆரஞ்சு-சிவப்பு அலகு இந்த சிற்றினத்தை இலங்கை காடுகளில் காணப்படும் தெற்கு மலை நாகணவாயிலிருந்து வேறுபடுத்துகின்றன. பாலினங்கள் இறகுகளில் ஒத்தவை; ஆனால் கருவிழியின் நிறத்தால் வேறுபடுத்தி அறியலாம். இது பெண்களில் வெளிர் நிறமாகவும் ஆண்களில் இருண்ட நிறமாகவும் இருக்கும். இளம் வயதினர் மந்தமான அலகினையும் சிறிய தொங்கு சதையினையும் கொண்டுள்ளன. மேலும் ஒட்டுமொத்தமாக குறைவான பளபளப்பைக் கொண்டுள்ளனர்.
பெரும்பாலான நாகணவாய்களைப் போலவே, இலங்கை நாகணவாயும் பழங்கள், தேன், பூச்சிகளை உண்கின்றது.
கலாச்சாரத்தில்
[தொகு]இலங்கை நாகணவாய் சிங்கள மொழியில் செலா லஹினியா, மால் கவடியா, கம்பாதியா உள்ளிட்ட பல பெயர்களில் அறியப்படுகிறது.[2] செலா லிஹினியா என்ற பெயர் பெரும்பாலும் கவிதைகள் மற்றும் பிற ஒத்த இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. மேலும் இதன் மெல்லிய ஓசை போன்ற ஒலிக்காக மேற்கோள் காட்டப்படுகிறது. இந்த பறவை 10 ரூபாய் இலங்கை அஞ்சல் தலைகளில் அச்சிடப்பட்டுள்ளது.[3] இது இலங்கை ரூபவாஹினி கழகத்தின் ஊடக சின்னமாகவும் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2020). "Gracula ptilogenys". IUCN Red List of Threatened Species 2020. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22710988A181567926.en. https://www.iucnredlist.org/species/22710988/181567926. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Anonymous (1998). "Vernacular Names of the Birds of the Indian Subcontinent". Buceros 3 (1): 53–109. http://www.bnhsenvis.nic.in/pdf/vol%203%20(1).pdf.
- ↑ "Birds on stamps: Sri Lanka".
- Birds of India by Grimmett, Inskipp and Inskipp, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-04910-6
