இலங்கை மகாபோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை மகா போதி மையம் (ஆங்கிலம்: Sri Lanka Maha Bodhi Centre) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ஓர் இலங்கை நிறுவனம் ஆகும். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்பின் அடையாளமாகத் திகழும் இந்நிறுவனம் இலங்கையின் மகா போதி சங்கம் நடத்துகிறது.

இந்திய மகா போதி சங்கம்[தொகு]

மகா போதி சங்கத்தின் தலைமையகம் கொழும்பில் அமைந்துள்ளது.[1] அனகாரிக தர்மபாலா இந்தியாவின் மகா போதி சங்கத்தை 1891 ஆம் ஆண்டு தோற்றுவித்தார். கயா மற்றும் சாரநாத் போன்ற இடங்களில் பண்டைய புத்த ஆலயங்களை மீட்டெடுப்பது இச்சங்கம் தொடங்கியதற்கான முக்கியமான நோக்கமாகும். புத்த கயாவுக்கு ஆண்டுதோறும் வருகை தரும் பக்தர்களுக்கு தங்குமிடம், உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு சங்கத்தின் முதல் மையத்தை புத்த கயாவிலும், சென்னை உள்ளிட்ட உள்ள பல்வேறு நகரங்களிலும் நிறுவினார். இலங்கையைச் சேர்ந்த மகா போதி சங்கத்தின் ஆதரவுடன் சர் கென்டிடமிருந்து கடன் வாங்கிய பணத்துடன் சென்னை மையம் நிறுவப்பட்டது.[2]

புத்தர் கோயில்[தொகு]

இலங்கை மகா போதி மையம் எழும்பூர் இரயில் நிலையத்திற்கு எதிரே கென்னத் பாதையில் அமைந்துள்ளது. இந்தியாவின் மகா போதி சங்கக் கட்டிடத்தின் உள்ளே புத்த விகார் என்று பெயரிடப்பட்ட புத்தரின் சிறிய கோயில் அமைந்துள்ளது. சென்னையில் உள்ள ஒரே புத்த கோவில் இதுவாகும். இந்த கோவிலின் பிரதான மண்டபத்தில் நிற்கும் தோரணையில் (அப்ய முத்ரா) புத்தரின் 18 அடி சிலை உள்ளது. வெசாக் திருவிழா ஆண்டுதோறும் மே மாதத்தில் கொண்டாடப்படுகிறது அப்போது கலாச்சார நிகழ்ச்சிகள் மையத்தில் நடத்தப்படுகின்றன.[3] மையத்தில் ஒரு இலவச ஓமியோபதி மருத்துவமனையும் உள்ளது, சென்னை மையத்தின் இயக்குனர் இம்மருத்துவமனையைத் தொடங்கினார். வென் எல்லாவலா நந்தீசுவர நாயக தெரா என்பவரும் கோவிலைக் கட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார்.[4]

இலங்கையிலிருந்து வருகைதரும் புனிதப் பயனிகள் தங்குவதற்கான மகா போதி நிக்கேதானயா என்ற தங்கும் விடுதி 2011 ஆம் ஆண்டு இம்மையத்தில் நிறுவப்பட்டது. புத்தர் ஞானம் பெற்ற 2600 ஆவது சிறீ சம்புத்தத்வா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்தங்கும் விடுதி மையத்தில் ஏற்படுத்தப்பட்டது.[5] 65 மில்லியன் ரூபாய் செலவில் ஐந்து அடுக்குகளாக இக்கட்டடம் கட்டப்பட்டது. இங்கு 32 அறைகள் உள்ளன.[1] மகா போதி மையத்திலுள்ள தேராவாடா கோயில் வழிபாட்டிற்கு பிரபலமான கோயிலாக வணங்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 120,000 முதல் 150,000 மக்கள் வருகை தருகிறார்கள்.[2][6]

தாக்குதல்கள்[தொகு]

1983 ஆம் ஆண்டில், இலங்கையில் இன மோதலின் உச்சத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் ஒரு குண்டு வளாகத்தில் வீசப்பட்டது.[6] 2011 ஆம் ஆண்டு சனவரி மாதம் இம்மையம் 10 முதல் 15 அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Lanka, India Mahabodhi Societies join to mark Sambuddhatva Jayanthi". Tops (Tops.lk). 11 May 2011. http://www.tops.lk/article36513-lanka-india-mahabodhi-societies-join-to-mark-sambuddhatva-jayanthi.html. பார்த்த நாள்: 18 Feb 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 Pathirana, Jeewani (2 February 2012). "Mahabodhi Centre’s contribution to Buddhism". Daily News (Daily News). http://www.dailynews.lk/2012/02/02/fea40.asp. பார்த்த நாள்: 18 Feb 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Worship Buddha". Madura Welcome. பார்த்த நாள் 18 Feb 2012.
  4. Bodhipala, Bhikkhu (5 May 2002). "Tribute to Ven. Ellawala Nandisvara Nayaka Thera". Sunday Observer (Sunday Observer). Archived from the original on 4 மார்ச் 2016. https://web.archive.org/web/20160304061038/http://www.sundayobserver.lk/2002/05/05/fea23.html. பார்த்த நாள்: 18 Feb 2012. 
  5. "Lodging facility for Buddhist pilgrims". The Hindu (Chennai: The Hindu). 15 May 2011. http://www.thehindu.com/news/cities/Chennai/article2019487.ece. பார்த்த நாள்: 12 Feb 2012. 
  6. 6.0 6.1 "Sri Lankan Buddhist centre attacked in Chennai". Deccan Herald (Deccan Herald). 25 January 2011. http://www.deccanherald.com/content/132124/sri-lankan-buddhist-centre-attacked.html. பார்த்த நாள்: 18 Feb 2012. 
  7. Patranobis, Sutirtho (25 January 2011). "Three Lankan monks hurt in attack on Chennai Buddhist shrine". Hindustan Times (Chennai: WorldWide Religious News). http://wwrn.org/articles/34850/?&place=sri-lanka-maldives. பார்த்த நாள்: 12 Feb 2012. "https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_மகாபோதி&oldid=3364286" இருந்து மீள்விக்கப்பட்டது