இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழு
வகை | அரச அமைப்பு |
---|---|
தலைமையகம் | கொழும்பு, இலங்கை |
இணையத்தளம் | www.sec.gov.lk |
இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழு(Securities and Exchange Commission of Sri lanka)(SEC) என்பது இலங்கையில் பிணைக்களுக்கான சந்தையை ஒழுங்குபடுத்தல்,பங்கு பரிவர்த்தனை,பங்குத் தரகர்,அலகு பொறுப்பாட்சி நிறுவனம் என்பவற்றுக்கு அனுமதியளித்தல், கட்டுப்படுத்தல், வழிநடத்தல்,முதலீட்டாளர் நலன் பேணல் போன்ற நோக்கிற்காக நிறுவப்பட்டுள்ள ஒர் அரச அமைப்பாகும்.
இவ் ஆணைக்குழு பாராளமன்ற ஒதுக்கீட்டு நிதி,பங்குத் தரகர்,அலகு பொறுப்பாட்சி நிறுவனங்கள் என்பனவற்றின் செயற்பாட்டு நடவடிக்கைக்காக அறவிடும் நிதி,நன்கொடைகள்,மானியங்கள் போன்ற மூலங்களிலிருந்து நிதி ஈட்டுகின்றது.
அங்கத்தவர்கள்
[தொகு]இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் 10 பேர் இடம்பெறுகின்றனர்.இவர்களின் பதவிக்காலம் 3 வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.
- மத்திய வங்கி நியமிக்கப்பட்ட அவ் வங்கியின் பிரதி ஆளுனர் ஒருவர்.
- திறைசேரியின் செயலாளர்.
- கம்பனி பதிவாளர்.
- பட்டயக் கணக்காளர் நிறுவக தலைவர்.
- நிதியமைச்சினால் நியமிக்கப்படும் சட்ட,நிதி,வியாபார துறைகளில் திறமையுள்ள 6 பேர்.
குறிக்கோள்
[தொகு]இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் குறிக்கோள்கள் இலங்கை பாராளமன்றத்தினால் இயற்றப்படும் சட்டங்களால் வரையறை செய்யப்படும்.
- நீதியும்,நியாயமும் கொண்ட பிணைகளுக்கான சந்தையினை ஒழுங்கு செய்தல்.
- முதலீட்டாளர்களை பாதுகாத்தல்.
- நிதி நட்டமடையும் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு வழங்கல்.
- இலங்கையில் பிணைகளுக்கான சந்தையினை வளர்தெடுத்தல்.
- சீரற்ற பங்கு கைமாறலை தடுத்தல்,கணகாணித்தல்.
போன்ற குறிக்கோளை முதன்மையாகக் கொண்டுள்ளது.