இலங்கை நாடோடித் தெலுங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கை நாடோடித் தெலுங்கர்
Snake charmer(js).jpg
Sri Lankan Gypsy Snake Charmer
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இலங்கை
மொழி(கள்)
தெலுங்கு, சிங்களம், தமிழ்
சமயங்கள்
Animism, பௌத்தம், இந்து, கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இலங்கைத் தமிழர், சிங்களவர்

இலங்கை நாடோடித் தெலுங்கர் (Sri Lankan Gypsy Telugu people), இலங்கையில் வாழும் இனக்குழுவினர் ஆவர். தெலுங்கைத் தாய்மொழியாகப் பேசும் இவர்களின் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. நிரந்தரமாக ஒரே இடத்தில் இல்லாது இடம்பெயர்ந்து வாழும் இவர்களைப் பல தொண்டு நிறுவனங்கள் குடியமர்த்தி வருகின்றன. இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பரந்து வாழ்ந்தாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் பேர் வாழ்கின்றனர். சிங்களவர்களால் அகிகுண்டகா எனவும் இலங்கைத் தமிழர்களால் குறவர் எனவும் அழைக்கப்படுகின்றனர். ஆரூடம் சொல்வதையும் பாம்பு, குரங்குகளைக் கொண்டு வித்தைக் காட்டுவதையும் தொழிலாக செய்கின்றனர். வாழும் இடத்திற்கேற்ப தமிழையும் சிங்களத்தையும் பேசுகின்றனர். இவர்களில் பெரும்பானமையினர் இந்து சமயத்தையும் சிலர் கிறித்தவ, பௌத்த சமயங்களையும் பின்பற்றுகின்றனர்.[1][2][3][4]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]