உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடராஜா ரவிராஜ்

யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் நவம்பர் 10, 2006 அன்று இலங்கை இந்திய நேரம் காலை எட்டு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத ஆயுததாரியினால் கொழும்பில் அவரது இல்லத்தில் இருந்து அலுவலகத்தை நோக்கி செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரவிராஜ் காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.

மாமனிதர் விருது

[தொகு]

மறைந்த நடராஜா ரவிராஜூக்கு நவம்பர் 11, 2006 அன்று தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கப்பட்டது.[1]

ரவிராஜின் இறுதி நேர்காணல்

[தொகு]

ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை "தெரண" தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனை பற்றியும் தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்தார்[2].

கொழும்பில் பாரிய கண்டனப் பேரணி

[தொகு]

ரவிராஜ் படுகொலையைக் கண்டித்து கொழும்பில் திங்கட்கிழமை நவம்பர் 13, 2006 நடைபெற்ற பாரிய கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இப்பேரணியில் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த அரசியல், மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்[3].

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ரவிராஜூக்கு "மாமனிதர்" விருது". Archived from the original on 2021-05-08. பார்க்கப்பட்ட நாள் 2006-11-11.
  2. "ரவிராஜின் இறுதி நேர்காணல்". Archived from the original on 2006-11-16. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.
  3. "கொழும்பில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பாரிய கண்டனப் பேரணி". Archived from the original on 2006-11-16. பார்க்கப்பட்ட நாள் 2006-11-15.

வெளி இணைப்புக்கள்

[தொகு]