உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை திமில் மூக்கு குழிவிரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை திமில் மூக்கு குழிவிரியன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
வைப்பரிடே
பேரினம்:
கைப்னாலே
இனம்:
கை. நேப்பா
இருசொற் பெயரீடு
கைப்னாலே நேப்பா
(Laurenti, 1768)
வேறு பெயர்கள் [2]
  • கொலுபெர் நேப்பா லாரெண்டி, 1768
  • கைப்னாலே நேப்பா – குந்தர், 1864
  • குரோடேலசு கைப்னாலே நேப்பா
    – கிக்கிங்சு, 1873
  • கைப்னாலே வாலி – கிளையாட், 1977
  • அனிசுடுரோடான் நேப்பா – மா. ஆ. சுமித், 1937
  • Agkistrodon நேப்பா – டெய்லர், 1950
  • கைப்னாலே நேப்பா – கிளையாட், 1977

இலங்கை திமில் மூக்கு குழிவிரியன் எனும் கைப்னாலே நேப்பா (Hypnale nepa), இலங்கையில் காணப்படும் ஒரு நச்சுப் பாம்பு சிற்றினமாகும், இது சிங்களத்தில் முகலன் தெலிசா (මූකලන් තෙලිස්සා) என்று அழைக்கப்படுகிறது.[3]கைப்னாலே வாலியும் கைப்னாலே நேப்பாயும் இரண்டு தனித்துவமான சிற்றினங்கள் என்று முன்பு கருதப்பட்டது. ஆனால் இப்போது இவை இரண்டும் ஒரே சிற்றினம் என்றும் கைப்னாலே வாலி என்பது ஒரு ஒத்த பெயர் என்றும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒப்பீட்டளவில் சிறியதாக, இவை வலுவாக உயர்த்தப்பட்ட மூக்கால் வேறுபடுகின்றன. தற்போது எந்த துணையினமும் இச்சிற்றினத்தில் அங்கீகரிக்கப்படவில்லை.[4]

விளக்கம்

[தொகு]

முதிர்வடைந்த இலங்கை திமில் மூக்கு குழிவிரியனின் மொத்த நீளம் 30 முதல் 35 செ. மீ. வரை வளரும். வால் (1921) என்பவரின் கூற்றுப்படி, அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட நீளம் ஆண் பாம்பில் 38.1 cm (15.0 அங்) பெண் பாம்பில் இது 38.1 செ.மீ. ஆகும். தெரணியகலாவின் (1955) கூற்றுப்படி, கொழும்பு அருங்காட்சியகத்தில் இருந்த மிகப்பெரிய மாதிரியின் நீளம் மொத்த நீளத்தில் வால் அளவோடு 39.2 செ. மீ. ஆகும். இதில் வாலின் நீளம் மட்டும் 5.9. செ.மீ. ஆகும். பொதுவாக, வாலின் நீளம், மொத்த உடல் நீளத்தில் 13-18% ஆகும். உடல் மிதமான மெல்லியதாகவும், கழுத்திலிருந்து தெளிவாகத் தெரிந்த ஒரு தலையுடன் இருக்கும்.[3]

இந்த சிற்றினம் கை. கைப்னாலேவிலிருந்து வலுவாக உயர்த்தப்பட்ட முனையைக் கொண்ட மூக்கால் வேறுபடுகிறது. இது ஒரு நீட்டிக்கப்பட்ட நாசிச்செதிலால் ஏற்படுகிறது. இதில் 7 முதல் 14 மிகச் சிறிய செதில்களால் மூடப்பட்ட ஒரு உயர்த்தப்பட்ட மருக்கள் போன்ற கூம்பால் ஆனது. மேலும், ஆண் இனப்பெருக்க கலவி உறுப்பில் தெளிவான முட்களைக் கொண்டுள்ளது.[3]

செதிலமைவில், முதுகுப்பகுதியில் உடலின் நடுவில் 17 வரிசையில் செதில்கள் உள்ளன. இவை பலவீனமாக இணைப்புச் செய்யப்பட்டவை அல்லது மென்மையானவை. வயிற்றுப் பகுதியில் 124-142 வயிற்றுப்புறச் செதில்களும் 33 முதல் 41 வாலடிச் செதில்களும் காணப்படும்.[3]

வண்ண வடிவம் வெளிர் பழுப்பு நிறத்திலிருந்து அடர் பழுப்பு முதல் வெளிர் ஆலிவ் தரை நிறம் வரை புள்ளிகளுடன் அல்லது பலவண்ணங்களுடன் வேறுபடும்.[3]

புவியியல் வரம்பு

[தொகு]

கைப்னாலே நேப்பா இலங்கையின் தாழ்நில மழைக்காடுகளிலிருந்து 1,800 m (5,900 அடி) மீ (5,900 ) உயரம் வரை காடுகள் முழுவதும் காணப்படுகிறது. இதன் வகையிடம் "ஆப்பிரிக்கா" எனத் தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஹோக்கும் உரோமானோ-ஹோக்கும் (1981) "இலங்கை" என்று திருத்தினர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ukuwela, K., de Silva, A., Kannishka, S., Pushpamal, V. & Kandambi, D. (2021). "Hypnale nepa". IUCN Red List of Threatened Species 2021. https://www.iucnredlist.org/species/178661/123308135. பார்த்த நாள்: 18 November 2021. 
  2. 2.0 2.1 McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Howard K. Gloyd, Roger Conant. 1990. Snakes of the Agkistrodon Complex: A Monographic Review. Society for the Study of Amphibians and Reptiles. 614 pp. 52 plates. LCCN 89-50342. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-916984-20-6.
  4. "Hypnale nepa". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). Retrieved 8 August 2008.

மேலும் காண்க

[தொகு]
  • Josephus Nicolaus Laurenti, 1768. Specimen Medicum, Exhibens Synopsin Reptilium Emendatum Cum Experimentis Circa Venena Et Antidota Reptilium Austriacorum. "Joan. Thom." Vienna. 214 pp. + Plates I.-V. (Coluber nepa, p. 97.)

வெளியிணைப்புகள்

[தொகு]