இலங்கை தமிழர் நல உரிமை பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை தமிழர் நல உரிமை பேரவை என்ற அமைப்பு திமுக பெப்ரவரி 3, 2009 அன்று நடாத்திய செயற்குழு கூட்டத்தில் அமைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் பாமக, மதிமுக, விசி, இந்திய பொதுவுடமைக் கட்சி போன்ற கட்சிகளின் கூட்டாக அமைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு இருந்து விலகி திமுக இந்த அமைப்பை முன்னெடுக்கிறது. திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணியும் இந்த அமைப்பில் இடம்பெறுகிறார். கனிமொழி உட்பட இதர திமுக உறுப்பினர்கள் பல இக்குழுவில் இடம்பெறுகின்றனர்.

விமர்சனம்[தொகு]

"இலங்கை விவகாரத்தில் திமுக செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்களை வெட்கப்பட வைத்துள்ளது. இது, காதில் பூ சுற்றும் வேலை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்."[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை தமிழர் நல உரிமை பேரவைக்கு துணைக் குழு". 2009-02-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-02-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)