இலங்கை செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் படுகொலை, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் படுகொலை
இலங்கையில் அமைவிடம்
இடம்கொழும்பு, இலங்கை
நாள்சூன் 1, 2007 (+6 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இலங்கைத் தமிழர்
தாக்குதல்
வகை
சுட்டுக் கொலை
ஆயுதம்துப்பாக்கிகள்
இறப்பு(கள்)2
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
இலங்கைக் காவல்துறை

இலங்கை செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் படுகொலை 2007 சூன் 1 அன்று இடம்பெற்றது. இரண்டு இலங்கைத் தமிழ் நிவாரணப் பணியாளர்கள் 2007 சூன் 1 இல் கொழும்பில் வைத்து காவல்துறையினர் எனத் தம்மை அடையாளம் காட்டிக் கொண்ட இருவரால் கைது செய்யப்பட்டனர். இவர்களது இறந்த உடல்கள் சூன் 2 அன்று கொழும்பில் இருந்து 95 கிமீ தொலைவில் இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்டது.[1][2]

நிகழ்வு[தொகு]

கிழக்கிலங்கையைச் சேர்ந்த இரண்டு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள், சின்னராஜா சண்முகநாதன், 38, கார்த்திகேசு சந்திரமோகன், 28, ஆகியோர் ஆழிப்பேரலைப் பயிற்சித் திட்டம் தொடர்பாக தலைநகர் கொழும்பு வந்தனர். செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் வசந்தராஜாவின் அறிக்கைப் படி, மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கு மே 30 இல் அனுப்பப்பட்ட 6 பணியாளர்களில் இந்த இருவரும் அடங்குவர்.[1][2]

மே 30 முதல் சூன் 1 வரை இடம்பெற்ற பயிற்சித் திட்டத்தை முடித்துக் கொண்ட இந்த அறுவரும் மட்டக்களப்பு திரும்புவதற்காக சூன் 1 மாலை 06:30 மணியளவில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இரவு 07:15 மணிக்குப் புறப்படும் தொடருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது தம்மைக் காவல்துறையினர் என அடையாளம் காட்டிய இருவர் ஆறு பேரின் தேசிய அடையாள அட்டைகளை பரிசோதித்தனர். பின்னர் அவர்கள் சண்முகநாதனையும், சந்திரமோகனையும் மேலதிக விசாரணைக்கெனக் கூறி கைது செய்து வெள்ளை வானில் ஏற்றிச் சென்றனர்.[1][2] சண்முகநாதன் 1997 முதலும், சந்திரமோகன் 1999 முதலும் மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றுகின்றனர்.[1]

தாக்கங்கள்[தொகு]

செஞ்சிலுவைச் சங்கம்[தொகு]

கடத்தல் குறித்து அறிந்த பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் கோட்டைக் காவல்துறையிலும், காவல்துறை மா அதிபருக்கும் முறைப்பாடு செய்ததாக அறிவித்தது.

இரத்தினபுரியில், கிரியெல்ல என்ற இடத்தில் உள்ள தும்பறை தோட்டத்தில் இருவரின் இறந்த உடல்களையும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் அடையாளம் காட்டினர்.[3][4][5]

இலங்கை அரசு[தொகு]

கிரியெல்ல காவல்துறை அதிகாரி, "வேறு இடம் ஒன்றில் கொல்லப்பட்ட பின்னர் உடல்கள் தும்பறைத் தோட்டத்தில் போடப்பட்டிருக்கலாம்" எனத் தெரிவித்தார். இதே பகுதியில் முன்னரும் வேறு உடல்கள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஐந்து காவல்துறை அணிகள் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்தார்.[3][4]

ஏனையோர்[தொகு]

இந்த இரட்டைப் படுகொலைகளை பிரித்தானிய தூதுவராலயம்,[6] மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன கண்டித்து அறிக்கை வெளியிட்டன.[6]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Sri Lanka Red Cross staff killed". பிபிசி (2007-06-03). மூல முகவரியிலிருந்து 4 சூலை 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-06-04.
  2. 2.0 2.1 2.2 "Two Sri Lankan Red Cross workers abducted in central Colombo". World Socialist Web Site (14 சூன் 2007). பார்த்த நாள் 3 சூன் 2016.
  3. 3.0 3.1 "Sri Lanka Red Cross demands volunteer murder probe". Alertnet. பார்த்த நாள் 2007-06-04.
  4. 4.0 4.1 "Bodies of Red Cross workers found in estate". Daily Mirror. மூல முகவரியிலிருந்து 2007-09-30 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-06-04.
  5. படங்கள்
  6. 6.0 6.1 "Britain condemns killing of Red Cross workers in Sri Lanka". International Herald Tribune. பார்த்த நாள் 2007-06-08.

வெளி இணைப்புகள்[தொகு]