இலங்கை ஊடகத்துறைச் சுதந்திரமும் முடக்கமும்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இலங்கையில் ஊடகம் என்பது தமிழரின் நிலைப்பாட்டைப் பொருத்தவரை உண்மைகளை முடக்கும் முகமானதாகவும், உண்மை நிலைக்கு மாறான பரப்புரைகளை நிகழ்த்துவோருக்கு சுதந்திரமானதாகவுமே இருக்கின்றது. உண்மைச் செய்திகளைத் திரட்டி வெளியிட மறுப்பதை அல்லது தடுப்பதை ஊடக முடக்கம் எனலாம். ஊடக முடக்கம் செய்யப்படும் போது ஊடகச் சுதந்திரமும் அந்நாட்டில் அற்றுப் போய் விடுகின்றது.
ஊடகத் தர்மம்
[தொகு]ஒரு சம்பவம் என்றால், சம்பவ இடத்திற்குச் சென்று உண்மைகளை ஆய்ந்து அதை ஆதாரப் பூர்வமாக செய்திகளை வெளியிடுவதே ஊடகத் தர்மமாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரும் அன்றாட நிகழ்வுகள் முதல் அண்டம் வரையிலான தகவல்களை செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி மற்று இணையத்தளங்கள் வாயிலாகவே அறிந்துகொள்கின்றோம். எனவே மக்களுக்கு உண்மைகளை ஆதாரப் பூர்வமாக அறியத் தரவேண்டிய தார்மீகப் பொருப்பு ஊடகங்களுக்கு உண்டு. அதன் பொருப்பை சரிவரச் செய்வதே ஊடகத் தர்மமாகும்.
இலங்கை ஊடகச் சுதந்திரம்
[தொகு]இலங்கையைப் பொருத்தவரை சுதந்திரமாக செய்திகள் சேகரிப்பதற்கோ, சம்பவ இடங்களுக்கு சென்று உண்மை நிலவரத்தை ஆய்வு செய்யவோ, பாதிக்கப் பட்ட மக்களிடம் உண்மைகளை கேட்டறியவோ முடியாத நிலையே இருக்கின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இலங்கைச் செய்தி்களின் நம்பகத்தன்மை எவ்வாறானதாக இருக்கும்.
சர்வதேச மட்டத்தில் பிரசித்திப் பெற்ற ஊடகவியலாளர்களே கொல்லப்படும் பொழுது, சாதாரண ஊடகவியலாளர்களின் நிலை எத்தகையதாக இருக்கும்? சாதாரண மக்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வாறானதாக இருக்கும்? எனும் கேள்விகள் தொடர்கின்றது. இலங்கை அரசக் கட்டுப்பாட்டில் வசிக்கும் தமிழ் மக்களின் எந்தக் கருத்துக்களும் நிலைப்பாடுகளும் வெளியுலகம் அறியமுடியாதவாறு ஒரு ஊடக முடக்கம் இலங்கையில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது உண்மைகளை அறிவிக்கும் ஊடகங்களின் ஊடகச் சுதந்திரம் அற்ற நிலையாகும்.
அன்மையில் சக்தி எப் எம் வானொலி, எம் டி வி தொலைக்காட்சி நிலையங்கள் தீக்கிரையாக்கப்படல் போன்ற நிகழ்வுகளும் குறிப்பிடத்தக்கன.
ஊடகவியலாளர் அச்சுறுத்தல்
[தொகு]இலங்கையில் உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு “ஊடகச் சுதந்திரம்” மறுக்கப்பட்டுள்ளதோடு, கொலை அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் உள்ளன. உண்மை நிலைப்பாடுகளை மக்களுக்கு அறியத்தர முற்படும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இலங்கையில் தமிழர்களால் நடாத்தப்படும் ஊடகங்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் உள்ளாகி வருகின்றது. ஊடகவியலாளர்கள் கைது, காணாமல் போதல், கொலைச் செய்யப்படல் போன்றவை தொடர்கின்றன.
பல ஊடகவியலாளர்கள் கொலைச் செய்யப்பட்டும் உள்ளனர். கொலை செய்யப்பட்ட இலங்கையின் ஊடகவியலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனால் பல ஊடகவியலாளர்கள் இலங்கையை விட்டு வெளியேற முற்பட்டுள்ளனர்.[1]
லசந்த விக்கிரமதுங்க கொலைச் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மக்களின் குரல்
[தொகு]"இலங்கை சனநாயக் சோசலிச குடியரசு நாடு" என அறியப்படும் இலங்கைத் தீவில் எவ்வித சனநாயக விதிமுறைகளோ, சோசலிசக் கோட்பாடுகளோ எதிலும் காண்பதற்கு இல்லை. அப்பாவித் தமிழ் மக்கள் வாய் பேசா ஊமைகளாக மௌனிகளாக வாழத் தலைப்பட்டுள்ளனர். இலங்கை அரச அமைச்சர்வையில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள், ஊடகத் துறையினர் போன்றவற்றிற்கே தொடர் அச்சுறுத்தல் தொடரும் போது, இலங்கை அரச இராணுவ இயந்திரத்தின் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் மக்களின் குரல் எப்படி வெளிவரும்? அவர்களின் அபிலாசைகள் யாரால் எப்படி, எங்கே, எப்பொழுது வெளிவரும் என்பவைகள் இன்றையக் காலத்தின் கேள்விகளாகும்.
ஊடகச் சுதந்திரம்
[தொகு]இலங்கை தமிழ் மக்களின் பேச்சுச் சுதந்திரம் இவ்வாறு இருக்க, அவர்களது எதிர் நோக்கும் உண்மையானப் பிரச்சினைகளை, வாழ்வியல் நிலைப்பாட்டு உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகங்களின் செய்தி சேகரிப்புக்கு “ஊடக முடக்கம்” தொடர்கின்ற இவ்வேளையில், இலங்கை அரசுக்கு சார்பான, உண்மைகளை மறைக்கும் மறிதலிக்கும் ஊடகங்களுக்கோ முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. அரசக் கட்டுப் பாட்டு பகுதிகளில் முகாம்களில் வசிக்கும் தமிழ் மக்கள் அரச ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரின் ஆயுத முனையில், அப்பப்போது சில செய்திகளை தமிழ் மக்கள் வாயாலேயே சொல்ல வைத்து, அவற்றைக் காட்சிப்படுத்தி உண்மைக்கு மாறான பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.[2]. அவ்வாரான பொய் பரப்புரைகளி்ற்கு முன்னுரிமை கொடுக்கும் ஊடகங்களிற்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சுதந்திரத்தையும் அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி இலங்கை அரச மற்றும் தனியார் ஊடகங்கள் மற்றும் அரசியல் இலாபங்களுக்காக அரசுடன் சார்பாக இயங்கும் அமைப்புகள் தொடர்ந்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பிவருகின்றன. அத்துடன் சில புலி எதிர்ப்பாளர்களின் கருத்துக்களையும் தம்மோடு உள்வாங்கி தமிழரது நலனுக்கு எதிரான கருத்துக்களை விதைத்து வருகின்றன. சிங்கள அரச இராணுவத்தால் மேற்கொள்ளப் பட்ட தமிழ் இனப் படுகொலைகளையும் புலிகளுக்கு எதிராக சித்தரித்து சிங்களர்வர்களையும் சர்வதேசச் சமுதாயத்தையும் நம்பச் செய்து தொடர்ந்த ஏமாற்றவும் முயற்சிக்கின்றன.[3]
இந்தியப் பார்வையில் இலங்கை ஊடகம்
[தொகு]இவ்வாறு தமிழர் தொடர்பான செய்தி சித்தரிப்புக்களையும் பொய் பரப்புரைகளையும் புலி எதிர்ப்பு எனும் போர்வையில் எவ்வித ஆய்வும் இன்றி, உண்மை நிலை உணராது சில இந்திய “இந்து” போன்ற [4] செய்தி ஊடகங்கள் இலங்கை அரசின் சித்தரிப்புக்களை அப்படியே உள்வாங்கி இந்தியா முழுதும் பரப்பி வருகின்றன. உண்மையை மூடி மறைத்து வருகின்றன. இது அடிப்படையில் ஊடகத் தர்மத்தையே அவமதிக்கும் செயலாகும்.
இதற்கு இலங்கை அரசு விருதுகளும் கொடுத்து கௌரவித்து வருகின்றன.[5] இதனால் இலங்கை அரசுக்கு சார்பாக செய்திகளை திரிபு படுத்தும் ஊடகங்கள் மேலும் ஊக்கத்துடன் எழுதுகின்றன. இச் செய்திகளை பார்க்கும் பலர் உண்மை நிலை அறியாது குழப்பம் அடையும் நிலையே தொடர்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கையில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேறுகிறார்கள்". Archived from the original on 2009-01-21. பார்க்கப்பட்ட நாள் 2009-01-20.
- ↑ Fleeing civilian youths misused to fabricate SLA propaganda
- ↑ பொய் பரப்புரைகள்
- ↑ இந்து
- ↑ சிறி லங்கா விருது
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- இலங்கையில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேறுகிறார்கள் பரணிடப்பட்டது 2009-01-21 at the வந்தவழி இயந்திரம்
- எம்.ரி.வி,சக்தி,சிரச தொலைக்காட்சி தலைமையகம் மீது தாக்குதல் பரணிடப்பட்டது 2009-01-09 at the வந்தவழி இயந்திரம்
- Sri Lanka ranked as 3rd most dangerous place for media
- 'Drop' in S Lanka press freedom - BBC
- Stop the War on Journalists in Sri Lanka says World Press Freedom Community பரணிடப்பட்டது 2009-01-18 at the வந்தவழி இயந்திரம்
- International media abetted death of journalism in Sri Lanka
- Stop the War on Journalists in Sri Lanka
- Letter to Mahinda Rajapaksha - PDF பரணிடப்பட்டது 2009-02-20 at the வந்தவழி இயந்திரம்
- சிறிலங்காவிலிருந்து அரச வன்முறைகளால் "அகதிகளாகும்" ஊடகவியலாளர்கள்
- Fleeing civilian youths misused to fabricate SLA propaganda