இலங்கை ஆப்பிரிக்கர்
மொத்த மக்கள்தொகை | |
---|---|
சில ஆயிரங்கள் (2005)[1] ~1,000 (2009)[2] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
வடமேற்கு மாகாணம் | [2] |
நீர்கொழும்பு | [2] |
திருகோணமலை | [2] |
மட்டக்களப்பு | [2] |
மொழி(கள்) | |
இலங்கை காப்பிலி மொழி, சிங்களம், தமிழ், இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி | |
சமயங்கள் | |
ஆரம்பத்தில் இசுலாம், உரோமன் கத்தோலிக்கம், பௌத்தம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மொசாம்பிக், பரங்கியர், சிங்களவர், இலங்கைத் தமிழர் |
இலங்கை காப்பிலி அல்லது இலங்கை காபிர் அல்லது இலங்கை ஆப்பிரிக்கர் (Sri Lankan Kaffirs, போர்த்துக்கீச மொழி: cafrinhas, சிங்களம்: කාපිරි) எனப்படுவோர் 16ம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் போர்த்துக்கேயர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போது, ஆப்பிரிக்க அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின்னர் உள்ளூர் மக்களுடன் கலந்து கொண்ட இனத்தவரைக் குறிக்கும். இவர்களின் முன்னோர்களாக ஆப்பிரிக்கர்களும் போர்த்துக்கேய வணிகர்களும் காணப்படுகின்றனர். இன்று இவர்கள் எத்தனைப் பேர் இலங்கையில் வசிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின், சிரம்பியடி பகுதியிலும், சிறு எண்ணிக்கையானோர் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் உள்ளனர்.[3] இவர்கள் பேசியது போர்த்துக்கீசம் கலந்த காப்பிலி (ஆப்பிரிக்க) கிரியோல் மொழியாக இருந்தபோதிலும், தற்போது சிங்களமே இவர்களின் தாய்மொழியாக மாறிவிட்டது. புகழ்பெற்ற 'பைலா' என்ற இசை ஆட்டத்திலிருந்து 'கப்ரிஞ்சா' மற்றும் 'மஞ்சா' என்னும் அவர்களது ஆடல் பண்பாட்டுத் தனித்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது.
மக்கட்தொகைக் கணக்கெடுப்பு
[தொகு]இலங்கை மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இவர்களது இன அடையாளமான, ஆப்பிரிக்க வம்சாவளியினராக அல்லாமல், சிங்களவர்களாகவே கணக்கெடுக்கப்படுவதாகவும் செய்திகள் காணப்படுகின்றன.
புத்தளத்தில் ஆபிரிக்க கஃபீர் இன குடும்பங்கள் 50 அளவில் வாழ்கின்றன. திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். திருகோணமலையில் வாழும் ஆபிரிக்க கஃபீர்களுடன் இவர்களுக்குத் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால், மட்டக்களிப்பில் வாழும் ஆபிரிக்க கஃபீர்களுடனான தொடர்புகள் இவர்களுக்குக் குறைவு. மட்டக்களப்பில் வாழும் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்கள் தமிழ் மொழியையே பேசுகின்றனர்
தற்போது ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்கள் சிங்களவர்களுடன் கலப்புத் திருமணங்களை செய்து வருவதனால், அவர்களது இளம் தலைமுறையினரின் முகத் தோற்றத்தில் நாம் வித்தியாசங்களை அவதானிக்கலாம். ஆபிரிக்க இனத்தவர் என்பதற்கான அடையாளங்கள் இளம் தலைமுறையினரில் குறைந்தே வருகின்றது.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.lankalibrary.com/cul/kaffirs.htm
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 http://www.france24.com/en/node/4925462
- ↑ "இலங்கையில் ஆபிரிக்கர்கள்! அழிந்துவரும் ஓர் அடையாளம்". Archived from the original on 2013-01-30. பார்க்கப்பட்ட நாள் 2013-01-28.