இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனம்

இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation of Sri Lanka) 1971ம் ஆண்டு அரச கைத்தொழில் கூட்டுத்தாபன சட்டமூலத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இலாப நோக்கம் கொண்டு இயங்கி வரும் ஒரு நிருவனமாகும். இந்நிறுவனம் இலாப நோக்கம் கொண்டு இயங்குவதால் வருமானவரி திணைக்களத்துக்கும், திரைசேரிக்கான பங்கு இலாபத்தையும் சொலுத்துகின்றது. அரச மருந்தக கூட்டுத்தாபனமானது, மருந்துகளை விநியோகிக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது.

நோக்கம்[தொகு]

மக்களுக்கு தரத்தில் உயர்ந்ததும், பாதுகாப்பானதும், நேர்த்தியானதுமான மருந்துகளை நியாய விலையில் வழங்குதல்.

பிரதான குறிக்கோள்[தொகு]

ஒழிவு மறைவற்ற முறையில் கேள்விப்பத்திர கோரலின் மூலம் உயர்ந்தரக பதுகாப்பான மருந்துவகைகளை விலைக்கு வாங்கி,

  • சுகாதார விநியோகப் பிரிவின் மூலம் சுகாதார அமைச்சுக்கு வழங்குதல்.
  • அரச மருந்தகம் (Rajaya Osu Sala), முகவர் மருந்தகம் (Franchise Osu Sala), அனுமதி பெற்ற மருத்துவக் கடைகள் (Authorised Retailers), தனியார் பாமசி மூலம் மக்களுக்கு வழங்குதல்.

வெளி இணைப்புகள்[தொகு]