உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கையில் பெண்கள்
இலங்கையைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள்.
பாலின சமனிலிக் குறியீடு[4]
மதிப்பு0.383 (2021)
தரவரிசை90/162
தாய் இறப்புவீதம் (100,000க்கு)36 (2017)[1]
நாடாளுமன்றத்தில் பெண்கள்5% (2021)[2]
உயர்நிலைக் கல்வி முடித்த பெண் 25 அகவையினர்99% (2010)[3]
பெண் தொழிலாளர்கள்34.1% (2014)
உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு[5]
மதிப்பு0.670 (2022)
தரவரிசை110/146 out of 136

இலங்கையில் பெண்கள் (Women in Sri Lanka) 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 52.09% இருந்தனர்.[6] பல பகுதிகளில், இலங்கைப் பெண்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்துள்ளனர். வரலாற்று ரீதியாக, இலங்கைப் பண்பாட்டில் ஆண்பால் சார்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் 1931 ஆம் ஆண்டு முதல் பெண்கள் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[7] அதிக பாலின சமத்துவத்தை அடைவதில் இலங்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் இன்னும் குறைந்த தரநிலையையே அனுபவிக்கின்றனர்.

2017 ஆம் ஆண்டில், நியூ வேர்ல்டு வெல்த் ஆராய்ச்சி குழு மேற்கொண்ட ஓர் ஆய்வில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை 11 ஆவது நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டது.[8]

வரலாறு

[தொகு]
Year ஆண்கள்
(மில்லியன்)
பெண்கள்
(மில்லியன்)
மொத்தம்
(மில்லியன்)
1960 5.18 4.69 9.87
1970 6.44 6.05 12.49
1980 7.68 7.36 15.04
1990 8.76 8.57 17.33
2000 9.38 9.40 18.78
2010 9.87 10.39 20.26
2020 10.50 11.42 21.92

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அரச மற்றும் உயர் பதவியில் இருந்த சிங்களப் பெண்கள், ஆண்களுடன் சமத்துவம் பெறுவதற்கு ஒப்பான சில தனிப்பட்ட சுதந்திரங்களையும் சமூக வாய்ப்புகளையும் அனுபவித்தனர். சிங்களப் பெண்கள் பல பொது நிகழ்ச்சிகளில் ஆண்களுடன் இணைந்து பங்கேற்றனர். பெண்களாகவும், தாய்மார்களாகவும் சுதந்திரமான தரத்தை அனுபவித்தனர். மேலும் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் ஓர் அடையாளத்தையும், ஒருவரின் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் பெற்றனர். புத்த மதம் நிறுவப்பட்ட பிறகு, அவர்கள் பொது வாழ்க்கையைத் துறந்து, துறவறம் பெறவும் மற்றொரு முற்போக்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். கி.மு. 300 ஆம் ஆண்டு முதல் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியாக அவர்கள் மேற்கொண்ட பயனுள்ள முன்னேற்றங்களுக்கு முதன்மையாக பௌத்த கோட்பாடுகள் மற்றும் பௌத்த நெறிமுறைகள் காரணமாக இருந்திருக்கலாம். பெரும் மனிதநேயத்தின் பயனாளிகளாகப் பெண்கள் பெருமளவில் அப்போது இருந்தனர். கடந்த காலத்தில் ஆறு ராணிகள் இத்தீவை ஆண்டதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. பிரபலமற்ற ராணி அனுலா (கிமு 47 – கிமு 42) முதல் கண்டியில் இருந்து நாட்டை ஆண்ட டான் கத்தரினா (குசுமாசனா தேவி) (1581) வரை. பராக்கிரமபாகு மன்னரின் (1153–1186) மனைவியான ராணி லீலாவதி (1197–1212), இலங்கைத் தீவின் நான்காவது ராணி ஆவார். அவர் இலங்கையின் இரண்டாவது இராச்சியமான பொலன்னருவாவிலிருந்து நாட்டை ஆண்டார்.[9]

இலங்கைச் சமூகத்தில் பெண்களின் பங்கு என்பது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு போராடப்பட்ட ஒரு தலைப்பாகும். உதாரணமாக, பிரித்தானிய காலனித்துவ காலத்தில், தேசியவாத, காலனித்துவ எதிர்ப்பு கிளர்ச்சியின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி, வீட்டிற்குள்ளும் வெளியேயும் இலங்கைப் பெண்களின் பங்கு மற்றும் தரத்தை மையமாகக் கொண்டிருந்தது. காலனித்துவ ஆட்சிக்குப் பிந்தைய மாற்ற ஆண்டுகளில், இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் இலவச சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகள் மற்றும் மானிய விலையில் உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சமூகக் கொள்கை தொகுப்பை அறிமுகப்படுத்தினர். இந்த அறிமுகம் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை வியத்தகு முறையில் மேம்படுத்தியது.[10] தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​இலங்கைப் பெண்கள் மிகவும் நலமாக உள்ளனர். இவர்களின் அதிகபட்ச ஆயுட்காலம் 80 ஆண்டுகள் ஆகும். கிட்டத்தட்ட உலகளாவிய கல்வியறிவு மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்கான அணுகலையும் அனுபவிக்கின்றனர். இவை துணைக்கண்டத்தின் மற்ற பகுதிகளில் கிட்டத்தட்ட ஒப்பிடமுடியாத நிலையாகும்.

பொருளாதார வளர்ச்சி

[தொகு]

கடந்த மூன்று பத்தாண்டுகளில் தெற்காசியாவில் நிபுணத்துவம் வாய்ந்த விவசாயமும் பெண்ணியம் சார்ந்த தொழிலாளர் சக்திகளும் கணிசமாக விரிவடைந்துள்ளன. இலங்கையில் பெண்களை விட ஆண்களுக்கு இரண்டு மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. (30-35%) நேபாளம், சீனா மற்றும் வங்காளதேசம் போன்ற பிராந்திய அண்டை நாடுகளை விட இலங்கையின் பெண் தொழிலாளர் பங்கேற்பு குறைவாக உள்ளது. உண்மையில், உலகில் தொழிலாளர் பங்கேற்பில் இலங்கை 20 ஆவது பெரிய பாலின இடைவெளியைக் கொண்டுள்ளது. ஆய்வின்படி, பெண் தொழிலாளர் பங்கேற்பு மற்றும் பெண்களின் ஊதியத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் இத்துடன் அதிக உற்பத்தித் துறைகளில் பெண்களைச் சேர்ப்பதன் மூலமும் 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை தனது ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% சேர்க்க முடியும். இந்தியாவுக்குப் பிறகு, இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய ஒப்பீட்டு ஆதாயமாகும். முதலீட்டுச் சந்தைகள் மற்றும் பலதரப்புக் கடன்களுக்கான அணுகல், அரசாங்கச் செலவினங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படும் இறையாண்மைக் கடனைத் திருப்பிச் செலுத்தாத சூழலில், இந்த அளவிலான பொருளாதார ஆதாயங்களை புறக்கணிக்க முடியாது. 2017 ஆம் ஆண்டில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 8.5 மில்லியன் பெண்களில், 3.1 மில்லியன் பெண்கள் மட்டுமே தொழிலாளர் படையில் இருந்தனர், அதே நேரத்தில் 2.9 மில்லியன் பேர் மட்டுமே பணிபுரிந்தனர். இதில், 1.5 மில்லியன் பெண்கள் முறைசாரா துறையில் பணிபுரிகின்றனர்.[11]

பெண்கள் இயக்கம்

[தொகு]

1904 ஆம் ஆண்டு இலங்கை பெண்கள் சங்கத்தின் கீழ் இலங்கையில் பெண்கள் இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது, 1925 ஆம் ஆண்டு முதல், மல்லிகா குலங்கன சமித்திய மற்றும் பின்னர் பெண்கள் உரிமைச் சங்கம் வெற்றிகரமாக பெண்கள் வாக்குரிமையை அறிமுகப்படுத்துவதற்காக பிரச்சாரம் செய்தது. இந்த இலக்கு 1931 இல் அடையப்பட்டது.[12]

வல்லுறவும் பாலியல் வன்முறையும்

[தொகு]

குடும்ப வன்முறை

[தொகு]

இலங்கையில் ஐந்து பெண்களில் இருவர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டுள்ளனர் என்று அரசாங்க கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.[13] ஓர் இணையால் நிகழ்த்தப்படும் உளவியல் வன்முறை, உணர்ச்சி ரீதியான வசை அல்லது பெண்களின் நடத்தையை கட்டுப்படுத்துதல் ஆகியவை 27.9% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த பத்தாண்டுகளில் அனைத்து வகையான வன்முறைகளிலும் மிக அதிகமாக இருந்தது. இணையர் குடிபோதையில் இருந்தபோது ஏற்படும் உடல்ரீதியான வன்முறைகள் பெரும்பாலும் தோட்டப் பகுதியிலும், அதைத் தொடர்ந்து முறையே கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களிலும் நிலவியதாக அறிக்கை கூறுகிறது. மிகவும் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் கனவுகளை அனுபவிப்பதாகவும், 4.5% பேர் பள்ளியை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்ட திடுக்கிடும் விவரங்களை அது கோடிட்டுக் காட்டியது. 15 மற்றும் 34 வயதுக்குட்பட்ட பெண்கள் அனைத்து விதமான வன்முறைகளுக்கும் பலியாக அதிக வாய்ப்பு இருந்துள்ளது.[14] 2012 முதல் 2020 வரை நாட்டில் 5,891 சிறுவர் தவறாடல் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஐ.நாவின் கருத்துப்படி, இலங்கையில் 90% பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர்.[15]

வல்லுறவு

[தொகு]

பதினாறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலியல் தொடர்பான உறவுக்கு சம்மதம் அளிக்க முடியாது என்று இலங்கையில் 16 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, 16 வயது அல்லது அதற்கு குறைவான வயதுடைய ஒருவருடன் பாலியல் உறவுகளில் ஈடுபடும் நபர் சட்டப்பூர்வமாக வல்லுறவு செய்ததாக அங்கீகரிக்கப்படுகிறார்.[16] 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டில் சட்டரீதியான கற்பழிப்பு வழக்குகள் 35% அதிகரித்துள்ளதாக, 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை காவல்துறையின் செயல்திறன் அறிக்கை வெளிப்படுத்துகிறது. 2020 ஆம் ஆண்டில் சுமார் 1,016 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் 361 ஆக அதிகரித்தது. [17]

ஆண்டு[18] வல்லுறவு பாலியல்
துன்புறுத்தல்
குழந்தைகளைத்
துன்புறுத்தல்
2012 1,728 674 863
2013 1,637 692 735
2014 1,565 624 772
2015 1,557 661 830
2016 1,565 562 800
2017 1,304 508 661
2018 1,284 520 755
2019 1,280 544 601
2020 1,016
2021 1,377

குழந்தைத் திருமணம்

[தொகு]

பன்னாட்டு அளவில் திருமண வயது ஆண், பெண் இருபாலருக்கும் 18 வயது ஆகும். இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் தெற்காசியாவில் ஆண், பெண் இருபாலரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளக்கூடிய குறைந்தபட்ச வயதை 18 ஆகக் குறிப்பிடுகின்றன. இலங்கையில் குழந்தை திருமணம் அரிதாக உள்ளது, தீவில் நடக்கும் திருமணங்களில் 2% குழந்தை திருமணங்கள். இருப்பினும், அந்த 2%, இழுத்தடிக்கப்பட்ட உள்நாட்டுப் போர் மற்றும் உறுதிப்படுத்தப்படாத சட்டங்களின் விளைவாகும்.[19]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maternal mortality ratio (modeled estimate, per 100,000 live births) - Sri Lanka | Data". data.worldbank.org. Retrieved 2022-10-03.
  2. "Proportion of seats held by women in national parliaments (%) - Sri Lanka | Data". data.worldbank.org. Retrieved 2022-10-03.
  3. "ICPD Sri Lanka" (PDF). www.unfpa.org. United Nations Population Fund. July 2012. p. 4.
  4. Nations, United (in en). Gender Inequality Index. https://hdr.undp.org/data-center/thematic-composite-indices/gender-inequality-index. 
  5. "Global Gender Gap Report 2022" (PDF). World Economic Forum. Retrieved 27 February 2023.
  6. "Gender Statistics". www.statistics.gov.lk. Department of Census and Statistics. 2012.
  7. "BeyondWomensDay: The Long Road To Gender Equality | History of Ceylon Tea". www.historyofceylontea.com (in ஆங்கிலம்). Retrieved 2022-10-03.
  8. Pash, Chris. "The 10 safest countries in the world for women". Business Insider (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-10-03.
  9. "Queen Anula - Unknown | Anuradhapura - (BC 47 - BC 42) - Sri Lankan History - Kings - Governors - Presidents - Ministers". www.mahawansaya.com. Retrieved 2022-10-04.
  10. "Life expectancy at birth, female". The World Bank Group. Retrieved 30 April 2022.
  11. "Advancing gender equality in Sri Lanka: A crucial balancing act | McKinsey". www.mckinsey.com. Retrieved 2022-10-03.
  12. Neloufer De Mel Women & the Nation's Narrative: Gender and Nationalism in Twentieth Century
  13. "Gender-Based Violence". UNFPA Sri Lanka (in ஆங்கிலம்). 2016-07-12. Retrieved 2022-10-03.
  14. DOMESTIC VIOLENCE FROM INTIMATE PARTNER (PDF) (in ஆங்கிலம்). Colombo, Sri Lanka: Demographic and Health Survey. 2016.
  15. Brief, Sri Lanka (2017-03-04). "90% of women have been subjected to sexual harassment on buses and trains in Sri Lanka. • Sri Lanka Brief". Sri Lanka Brief (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-10-04.
  16. "Sri Lanka Age of Consent & Statutory Rape Laws". www.ageofconsent.net. Retrieved 2022-10-04.
  17. ameresekere, Paneetha (2022-06-26). "Statutory rape cases climb". Ceylon Today (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-10-04.
  18. "A dire need for solutions". The Morning - Sri Lanka News (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-16. Retrieved 2022-10-04.
  19. "Marriage in Sri Lanka". U.S. Embassy in Sri Lanka (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-10-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_பெண்கள்&oldid=4210164" இலிருந்து மீள்விக்கப்பட்டது