உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் பாலின சமத்துவமின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயத்த ஆடை நிறுவனத்தில் இலங்கை பெண் பணியாளர்கள்

இலங்கையில் பாலின சமத்துவமின்மை (Gender inequality in Sri Lanka) என்பது இலங்கையின் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் எழும் ஏற்றத்தாழ்வுகளை மையமாகக் கொண்டது. குறிப்பாக, இந்த ஏற்றத்தாழ்வுகள் பெண்களின் வாழ்க்கையின் பல அம்சங்களை பாதிக்கின்றன. பாலின-தெரிவு கருக்கலைப்பும் ஆண் விருப்பத்தேர்வுகளும், கல்வி, பள்ளிப்படிப்பு, வேலை வாய்ப்புகள், சொத்து உரிமைகள், ஆரோக்கியம் , அரசியல் பங்கேற்பு ஆகியவற்றை பாதிக்கும். பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை பல பாலின சமத்துவ குறியீடுகளில் நல்ல தரவரிசையில் இருந்தாலும், இந்த குறியீடுகளின் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் சில ஆதாரங்களும் உள்ளன.[1] இருப்பினும், உலகளவில், பாலின சமத்துவ குறியீடுகளில் இலங்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.[2] சுழற்சி ஆய்வு மற்றும் பேரழிவு மற்றும் பெண்களின் பங்கு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் படிக்கும் ஒரு பேரிடர் சமூகவியலாளர் டாக்டர் எலைன் எனர்சன், ஒட்டுமொத்தமாக, சமூக வரலாற்றின் இந்த முறை பெண்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, பெண்களை குறைத்து மதிப்பிடும் சுழற்சியை உருவாக்குகிறது, இது சுகாதார பராமரிப்பு மற்றும் பள்ளிக்கல்விக்கு இரண்டாம் நிலை அணுகலை வழங்குகிறது

இதனால் உயர் மட்ட வேலைகள் அல்லது பயிற்சிகளை பெறுவதற்கான குறைந்த வாய்ப்புகள், பின்னர் குறைந்த அரசியல் பங்கேற்பு மற்றும் குறைக்கப்பட்ட சமூக உரிமைகள் பிரச்சினை அதிகரிக்கிறது எனக் குறிப்பிடார்.[3]

வரலாறு

[தொகு]
சோவியத் ஒன்றியத்தின் பிரதமர் அலெக்ஸி கோசைஜினுடன் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா

1960ஆம் ஆண்டில், உலகின் முதல் பெண் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்காவை இலங்கையின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுத்தது.

இலங்கையின் வரலாறு முழுவதும், பெண்களின் உரிமைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 1975இல் அனைத்துலக பெண்கள் ஆண்டும் 1976 முதல் 1985 வரை பெண்களுக்கான ஐக்கிய நாடுகள் தசாப்தத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்த பல கொள்கைகளும், சட்டங்களும் இயற்றப்பட்டன.[4] 1981ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான மாநாடு நடைபெற்றது. மேலும், அடிப்படை உரிமைகள் குறித்த அரசியலமைப்பின் மூன்றாவது அத்தியாயமும் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[4] அத்தியாயத்தின் பிரிவு 12, "எந்த குடிமகனும் இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து, பிறந்த இடம் அல்லது அது போன்ற எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டக்கூடாது".[5] இந்த சட்டத்தின் மீது சில விமர்சனங்கள் உள்ளன. ஏனெனில் பெண்கள் குறிப்பாக சுயாதீனமாக கூடுதல் உரிமைகளுக்கு தகுதியுடையவர்கள் என்று குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக மற்ற பின்தங்கிய நிலைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.[4]

மேலும், முன்னேற்றங்கள் 1996இல் பெண்கள் மற்றும் மகளிர் சாசனத்திற்கான தேசிய செயல் திட்டத்தின் நிறுவலை உள்ளடக்கியது. 2005ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பெண்களின் நிலை குறித்த ஆணையத்தின் மீதான ஐக்கிய நாடுகள் அவைக் கூட்டத்தின் விளைவாக பெண்களுக்கான தேசிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. சட்டரீதியான மாற்றங்கள் மூலமும், கொள்கை திட்டங்கள் மூலமும் பாலின சமத்துவத்தை அடைவதே இதன் நோக்கமாகும். மேலும், திட்டத்தில் கையெழுத்திட்ட அனைவரும் இலக்கை அடைய உறுதிபூண்டனர்.[6]

இலங்கையின் வரலாறு முழுவதும், குறிப்பாக அரசியல் மற்றும் முந்தைய ஆயுத மோதல்கள் என்று வரும்போது, பெண்கள் பெரும் பங்கு வகித்தனர்.[7] எவ்வாறாயினும், பாலின சமத்துவமின்மை இன்னும் இலங்கையில் ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது.

வேலை செய்யும் இலங்கை பெண்

ஆணாதிக்கம் என்பது "சமூக அமைப்பாகும், இதில் அதிகாரம் ஆண்களால் நடத்தப்படுகிறது, கலாச்சார விதிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மூலம் ஆண்களுக்கு சாதகமானது மற்றும் பெண்களுக்கான வாய்ப்பை தடுத்து நிறுத்துகிறது".[8]

வரதட்சணை

[தொகு]

மேலும், வரதட்சணை மற்றும் சில வரம்புக்குட்பட்ட திருமணச் சட்டங்கள் உட்பட சட்டரீதியான மற்றும் சட்டவிரோதமான கலாச்சார நடைமுறைகளால் பாலின சமத்துவமின்மை தொடர்கிறது.[9] வரதட்சணையானது , பெண்கள் மீது நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. ஒருபுறம் அவர்கள் திருமணத் திறனை மேம்படுத்தி சமூக அந்தஸ்தைப் பெற அனுமதிக்கிறது. இது மணமகனின் குடும்பத்திற்கு போதுமான நிதியை வழங்குவதற்கு மணமகளின் குடும்பத்திற்கு அதிக அளவு மன அழுத்தத்தை அளிக்கிறது.[10] வழக்கமாக, மகளுக்கு திருமணத்திற்காக பொருள்கள் பரிசுகள் வழங்கப்படும்.[10] வரதட்சணை போதுமானதாக இல்லை என்று கணவர் அல்லது அவரது குடும்பத்தினர் நம்பும்போது இது பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் வீட்டு உபாதைகளுக்கு வழிவகுக்கிறது.[11]

இதையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dijkstra, A. Geske (1 July 2006). "Towards a Fresh Start in Measuring Gender Equality: A Contribution to the Debate". Journal of Human Development 7 (2): 275–283. doi:10.1080/14649880600768660. பன்னாட்டுத் தர தொடர் எண்:1464-9888. 
  2. "United Nations Statistics Division - Demographic and Social Statistics". unstats.un.org. Archived from the original on 8 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 9 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. ILO, Elaine Enarson, Crisis Response and Reconstruction (1 September 2000). Gender and natural disasters. http://www.ilo.org/employment/Whatwedo/Publications/WCMS_116391/lang--en/index.htm. பார்த்த நாள்: 2 November 2015. 
  4. 4.0 4.1 4.2 "Dossier 29: Human Rights & Gender Equality | Women Reclaiming and Redefining Cultures". www.wluml.org. Archived from the original on 1 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 23 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "The Constitution of Sri Lanka: Chapter III - Fundamental Rights". www.priu.gov.lk. Archived from the original on 13 November 2015. பார்க்கப்பட்ட நாள் 23 November 2015.
  6. "SAARC". www.saarcgenderinfobase.org. Archived from the original on 23 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 November 2015.
  7. Jordan, Kim; Denov, Myriam (2013-01-09). ""Birds of Freedom?" by Kim Jordan and Myriam Denov". Journal of International Women's Studies 9 (1): 42–62. http://vc.bridgew.edu/jiws/vol9/iss1/3/.. பார்த்த நாள்: 9 October 2015. 
  8. "the definition of patriarchy". Dictionary.com. பார்க்கப்பட்ட நாள் 19 October 2015.
  9. "Dowry Tradition Prevails in Sri Lanka, Preys on Women". The Women's International Perspective. பார்க்கப்பட்ட நாள் 9 October 2015.
  10. 10.0 10.1 "The Impact of Displacement on Dowries in Sri Lanka". The Brookings Institution. 4 February 2015. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
  11. Mason, Robin; Hyman, Ilene; Berman, Helene; Guruge, Sepali; Kanagaratnam, Pushpa; Manuel, Lisa (1 December 2008). ""Violence is an international language": Tamil women's perceptions of intimate partner violence". Violence Against Women 14 (12): 1397–1412. doi:10.1177/1077801208325096. பன்னாட்டுத் தர தொடர் எண்:1077-8012. பப்மெட்:19008545. https://archive.org/details/sim_violence-against-women_2008-12_14_12/page/1397.