இலங்கையில் தொலைத்தொடர்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொலைபேசி மற்றும் நகரும் தொலைபேசி இணைப்புக்கள்[தொகு]

தொலைபேசி[தொகு]

இலங்கையில் கம்பித் தொலைபேசி (Wired Telephone) இணைப்புக்களை ஸ்ரீ லங்கா டெலிகொம் வழங்குகிறது. இது தற்சமயம் 2,678,739 தொலைபேசிப் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. இலங்கையில் சிடிஎம்ஏ(CDMA) தொழில் நுட்பம் 2005 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இப்போது சண்டெல், லங்காபெல்,டயலொக் ஆகிய நிறுவனங்களுடன் இலங்கைத் தொலைத் தொடர்புநிலையமும் இச்சேவையினை வழங்குகின்றன். இச்சேவையானது இலங்கையில் போரினாலும் சுனாமியாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் தவிர இலங்கையின் ஏனைய எலாப் பகுதிகளிலும் இவை அறிமுகம் செய்யப் பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையின் இலங்கையின் தொலைத்தொடர்பில் மிகவும் பின்தங்கியுள்ளது.

நகரும் தொலைபேசி[தொகு]

இலங்கையில் பரந்த வலையமைப்பாக 600க்கு மேற்பட்ட கோபுரங்கள் உள்ள மோபிட்டல்(ஸ்ரீ லங்கா டெலிகொம்) மற்றும் டயலாக் விளங்குகின் இது தவிர ஹட்ச் இலங்கை, எயார்டெல் இலங்கை, எடிசலட் இலங்கை சேவைகளை வழங்குகின்றன. இவற்றில் பெரும்பான்மையான நிறுவனங்கள் போட்டிகாரணமாக வெளிநாடுகளிற்கான கட்டணத்தைவிட ஒர் வலையமைப்பில் இருந்து பிறிதோர் வலையமைப்பிற்குக் கூடுதலான கட்டணத்தை அறவிடுகின்றன.

தொலைபேசி[தொகு]

நிலையான தொலைபேசி இணைப்புகள்: 2,678,739 (டிசம்பர், 2014)

நகரும் தொலைபேசி இணைப்புகள்: 22,123,000 (டிசம்பர் 2014)

  • தொலைபேசி அடர்த்தி (100 பேருக்கு நிலையான தொலைபேசிகள்) : 13.0 (டிசம்பர், 2014)
  • நகரும் தொலைபேசி பாவனையாளர்கள் 100 பேருக்கு : 107 (டிசம்பர், 2014)

இணையம்[தொகு]

நிலையான இணைய சேவை வழங்குனர்கள்[தொகு]

வர்த்தகக் குறி இயக்குபவர் தொழில்நுட்பம்
டயலொக் டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் WiMAX, 4G LTE, Wi-Fi
லங்காபெல் லங்காபெல் WiMAX, 4G LTE
ஸ்ரீ லங்கா டெலிகொம் ஸ்ரீ லங்கா டெலிகொம் ADSL2+, VDSL2, 4G LTE, FTTH, Wi-Fi

நகரும் இணைய சேவை வழங்குனர்கள்[தொகு]

வர்த்தகக் குறி இயக்குபவர் தொழில்நுட்பம்
டயலொக் டயலொக் அக்சியாடா பீஎல்சீ GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+, DC-HSPA+, 4G LTE
மோபிட்டல் மொபிடெல் (பிரைவேட்) லிமிடெட் GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+, DC-HSPA+, 4G LTE
எடிசலட் எட்டிசலட் லங்கா (பிரைவேட்) லிமிடெட் GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+, DC-HSPA+
ஹட்ச் ஹட்சின்சன் தொலைத்தொடர்பு (பிரைவேட்) லிமிடெட் GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+
எயார்டெல் பார்த்தி ஏர்ட்டெல் லங்கா (பிரைவேட்) லிமிடெட் [GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+


உற்பத்தி[தொகு]

ஏற்கனவே முன்னணி சந்தையில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தொலைத்தொடர்புக் கருவிகளை குறிப்பாக திறன்பேசிகளை உற்பத்தி செய்ய இலங்கை ஆரம்பித்துள்ளது.[1]

ஆதாரம்[தொகு]


இலங்கையின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் {{{படிம தலைப்பு}}}
லங்காபெல் | ஹட்ச் | எட்டிசலட் | ஸ்ரீ லங்கா டெலிகொம் | டயலொக் | மோபிட்டல் | எயார்டெல் | டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்