இலங்கையில் தரிசு நிலச்சட்டம் - 1840
பயிர் செய்யப்படாது விடப்பட்டுள்ள நிலமே தரிசு நிலம் எனப்படும். கோப்பிச் செய்கைக்காக ஆங்கிலேயருக்குப் பரந்த அளவிலான நிலத்தேவை ஏற்பட்டது. இராஜகாரிய முறை ஒழிப்பு மூலம் இதனைப் பெற்றுக் கொள்ள நாடினர். இதற்காக 1840 இல் இயற்றப்பட்டதே தரிசு நிலச்சட்டமாகும்.
கோப்பித் தோட்டங்கள்
[தொகு]மலைநாட்டுக் கிராமங்கள் அனைத்தும்
- வயல்,
- தோட்டம்,
- புல்,
- காட்டு நிலம்
என வகுக்கப்பட்டிருந்தன. முதலில் ஆங்கிலேயர் காட்டு நிலங்களையும் புற்றரைகளையும் கோப்பித் தோட்டங்களாக மாற்றினர்.
காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கை
[தொகு]ஆங்கிலேயால் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்டங்களுக்கு இடையிடையே கிராமங்கள் அமைந்திருந்தமை தோட்டச் செய்கையாளருக்கு இடையூறாக அமைந்தது. இதனால் இவற்றை சுவீகரிக்க இயற்றப்பட்டதே தரிசு நிலச்சட்டமாகும். இதன்படி ஒருவர் அந்நிலத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்ததற்கான எழுத்து மூல அத்தாட்சியைக் காண்பிக்க முடியாதவிடத்து அவரிடமிருந்து அந்நிலம் பறிக்கப்பட்டு, அது பெருந்தோட்டத் துறையினருக்கு வழங்கப்பட்டது. இராஜகாரிய முறை நிலவிய ஒரு பிரதேசத்தில் எழுத்து மூலமான உரிமை வழங்கப்படுவது அபூர்வமாகும்.
விளைவு
[தொகு]- பாரிய தோட்டங்கள் உருவாகின.
- நிலமற்ற மக்கள் சமூகமொன்று முதன்முறையாக உருவானது
- வாழ்வாதார விவசாய முறை வீழ்ச்சியுற்றது
- 1848ம் ஆண்டு கலவரத்திற்கு வழிவகுத்தது
வெளி இணைப்புகள்
[தொகு]- மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
- புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998