இலங்கையில் தமிழர் - ஒரு இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கையில் தமிழர் - ஒரு இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு
நூல் பெயர்:இலங்கையில் தமிழர் - ஒரு இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு
ஆசிரியர்(கள்):கா.இந்திரபாலா
வகை:வரலாறு
துறை:இலங்கைத் தமிழர் வரலாறு
காலம்:2006
இடம்:கொழும்பு
மொழி:தமிழ்
பக்கங்கள்:418
பதிப்பகர்:குமரன் புத்தக இல்லம்
பதிப்பு:2006

இலங்கையில் தமிழர் - ஒரு இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு என்பது இலங்கையில் தமிழர்களுடைய வரலாறு கூறும் நூல் ஆகும். இந்நூலில், யாழ்ப்பாண இராச்சியம் தோன்றுவதற்கு முற்பட்ட காலம், குறிப்பாக பொ.ஆ.மு 300 தொடக்கம் பொ.ஆ 1200 வரையிலான காலப்பகுதி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.[1] இந்த ஆய்வு நூலை கா. இந்திரபாலா எழுதியுள்ளார். குமரன் புத்தக இல்லம் பதிப்பித்த[2] இந்நூலின் முதற்பதிப்பு 2006 ஆம் ஆண்டில் வெளியானது.

பின்னணி[தொகு]

இந்த நூல் 40 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆய்வுகளின் விளைவாக உருவானது என்பதை இந்நூலுக்கான நூலாசிரியரின் முன்னுரையில் இருந்து அறிய முடிகிறது. நூலாசிரியரின் மேற்படிப்போடு தொடர்புடைய ஆய்வுகள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களும், அதன் பின்னர் அண்மைக் காலம் வரை கிடைத்த தகவல்களுமே இந்நூலுக்கான அடிப்படை. இந்த நூலுக்கு உதவிய தரவுகளை முன்வைத்து இதே விடயம் சார்ந்ததும் இதே நூலாசிரியரால் எழுதப்பட்டதுமான ஆங்கில நூல் ஒன்று 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

நோக்கம்[தொகு]

இலங்கையில் சிங்களவரும் தமிழரும் நீண்ட காலமாகவே இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வாறு, இலங்கையின் வரலாற்றுக் காலத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழர்களைப் பற்றியும், ஆரம்பத்தில் தீவின் பல பகுதிகளிலும் பரந்து வாழ்ந்த இவர்கள் பிற்காலத்தில் வடக்கு, வடமேற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் செறிந்து ஒரு தமிழ் பேசும் சமூகமாக உருவான வரலாறு குறித்தும் ஆராய்வதே இந்த நூலின் நோக்கமாக இருந்துள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

அறிமுக உரையைத் தொடர்ந்து வரும் இந்நூல் எட்டுப் பிரிவுகளாகப் பின்வரும் தலைப்புக்களில் அமைகின்றது.

  1. மக்கள் வருகை
  2. ஆதி இரும்புக்காலம்
  3. ஆரியரும் திராவிடரும்
  4. இளமக்களும் தமிழ் மக்களும்
  5. ஆதி வரலாற்றுக்காலம்
  6. ஹெள மக்களும் தமிழ் மக்களும்
  7. ஹெளவரும் தமிழரும்
  8. சிங்களரும் தமிழரும்

இவற்றின் பின்னர் பின்னுரையும் அதைத் தொடர்ந்து பிற்சேர்க்கைப் பகுதியில் இலங்கைத் தமிழர் வரலாற்றோடு தொடர்புடைய 9 பிற்சேர்க்கைகள் தரப்பட்டுள்ளன. இவை, சமஸ்கிருதமயமாக்கக் கதைகள், ஆனைக்கோட்டை முத்திரை, கந்தரோடை முத்திரை, கந்தரோடை பிராமிக் கல்வெட்டு, ராஜராஜப் பெரும்பள்ளி, சைவ வெண்கலச் சிற்பங்கள், ஈழம் எனப்பட்ட தெங்கு, அனுராதபுரத்தில் உள்ள தமிழ்க் கல்வெட்டுக்கள், தென்னிலங்கை என்னும் தலைப்புக்களில் அமைந்தவை.

இவற்றோடு சிறப்புச் சொல் விளக்கம், தமிழ் ஆங்கில மொழிகளிலான நூற் பட்டியல், சொல்லடைவு ஆகிய பகுதிகள் உள்ளன. நூலின் இறுதியில் 5 நிலப்படங்களும், 36 படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1. "இலங்கையில் தமிழர்-ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, பொது ஆண்டிற்கு முன்(கி.மு) 300 முதல் பொது ஆண்டு (கி.பி) 1200 வரை' ! பேராசிரியர் இந்திரபாலா அவர்களின் நூல் அறிமுகம்!". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 18, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஈழப்போராட்டம் பேசும் நூல்கள்". பார்க்கப்பட்ட நாள் மார்ச் 18, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]