இலங்கையில் கோல்புறூக் விதந்துரைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோல்புறூக் ஆணைக்குழுவினர் இலங்கையில் பிரித்தானிய ஆட்சிமுறையின் கீழ் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள பிரித்தானிய முடியினால் 1829 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.

காரணங்கள்[தொகு]

  • பிரித்தானியர் ஆட்சி ஆரம்பத்திலிருந்து நிர்வாகச் செலவினங்கள் அதிகரித்திருந்தமை
  • கண்டி இராச்சியத்தில் தற்காலிக ஆட்சிமுறை காணப்பட்டமை
  • நிர்வாகத்திற்கும், நீதித்துறைக்கும் இடையில் அதிருப்தியான தொடர்புகள் நிலவியமை

விதந்துரைப்புகள்[தொகு]

அரசியல்[தொகு]

  • கண்டி கரையோர இராச்சியங்கள் இணைக்கப்பெற்று ஒற்றையாட்சி அமைப்புக்குள் இலங்கையைக் கொண்டுவரல்
  • இலங்கையில் சட்டநிரூபண சபையொன்றை அமைத்தல்
  • இலங்கையை 5 மாகாணங்களாகப் பிரித்தல்
  • ஆங்கில மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்குதல்

பொருளியல்[தொகு]

  • இலங்கையில் நிலவிய இராஜகாரிய முறையை ஒழிக்கப்பட்டமை
  • வர்த்தக ஏகபோக உரிமை முறையை ஒழிக்கப்பட்டமை
  • இலங்கையில் பெருந்தோட்டத்துறை அறிமுகப்படுத்தபட்டமை
  • நேர்வரிகளை நீக்குதல்
  • சுதந்திர பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டமை.
  • அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் நீக்கப்பட்டு சம்பளம் குறைக்கப்பட்டு, அவர்கள் பெருந்தோட்டத் துறையில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டமை.
  • வெளிநாட்டார் குடியேறவும் காணிகளைக் கொள்வனவு செய்யவும் இருந்த வரையறை அகற்றப்பட்டமை.

நீதி[தொகு]

  • நாட்டில் நிலவிய பல்வேறு நீதிமுறைகள் ஒழிக்கப்பட்டு, ஒரே நீதி அமைப்பு உருவாக்கப்பட்டமை.

உசாத்துணை[தொகு]

  • மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
  • புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998