இலங்கையின் பசுமை இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கையின் பசுமை இயக்கம் (Green Movement of Sri Lanka) என்பது இலங்கையிலுள்ள 147 அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஒரு கூட்டமைப்பாகும். இலங்கையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவது என்ற பொதுவான குறிக்கோளுடன் இவ்வமைப்பு செயல்படுகிறது.[1] அமைப்பின் உறுப்பு நிறுவனங்கள் இயற்கை வள மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு, சமூக மேம்பாடு, மனித உரிமைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் நிலையான விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபடுகின்றன. இலங்கை சமூகத்தில் உள்ள வறிய சமூகங்களை வலுப்படுத்துவதன் மூலம் இயற்கை வள அடிப்படையிலான நிலையான அபிவிருத்தியை இவ்வமைப்பு ஊக்குவிக்கிறது. இந்த இயக்கம் சுற்றுச்சூழல் கல்வி ஆதாரங்களை வழங்குகிறது. அவர்களின் நோக்கங்களை அடைவதற்கு சட்டரீதியான வழிகள் மற்றும் அரசியல் அழுத்தத் தந்திரங்களைப் பயன்படுத்துகிறது.[2] நிலையான வளர்ச்சியை நோக்கி முன்னேறுவது மற்றொரு நோக்கமாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arinma Holdings and Green Movement Sri Lanka spearhead mangrove conservation project in Kalpitiya". bizenglish.adaderana.lk. 2021-01-15 அன்று பார்க்கப்பட்டது.
  2. admin. "Forget Presidential Politics: Sri Lanka's Green Movement Is Its Best Hope Against China | Journal of Political Risk" (in ஆங்கிலம்). 2021-01-15 அன்று பார்க்கப்பட்டது.
  3. Planet, Lonely. "Wildlife & Environmental Issues in Sri Lanka". Lonely Planet (in ஆங்கிலம்). 2021-01-15 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]