உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையின் கொலைக்களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கையின் கொலைக்களம்
Sri Lanka's Killing Fields
வகைஆவணப்படம்
இயக்கம்காலும் மெக்ரே
வழங்கல்ஜோன் ஸ்னோ
கதைசொல்லிஜோன் ஸ்னோ
பின்னணி இசைஉவைன் ரொபர்ட்ஸ்
நாடு ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம், தமிழ், சிங்களம்
அத்தியாயங்கள்1
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புகிறிஸ் ஷா
தயாரிப்பாளர்கள்காலும் மெக்ரே
படப்பிடிப்பு தளங்கள்இலங்கை, ஐக்கிய இராச்சியம்
ஓட்டம்49 நிமி.
தயாரிப்பு நிறுவனங்கள்ஐடிஎன் தயாரிப்பு
ஒளிபரப்பு
அலைவரிசைசேனல் 4
ஒளிபரப்பான காலம்சூன் 14, 2011 (2011-06-14)
Chronology
பின்னர்இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்
வெளியிணைப்புகள்
Sri Lanka's Killing Fields

இலங்கையின் கொலைக்களம் (Sri Lanka’s Killing Fields) என்பது ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த ஈழத்தமிழர் இனப்படுகொலை பற்றிய ஒர் ஆங்கில ஆவணப் படம் ஆகும். இதனை பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 சூன் 14, 2011 அன்று பொதுவில் ஒளிபரப்பியது. இலங்கையில் இனப்படுகொலை, போர் குற்றங்கள், மனித இனத்துக்கெதிரான குற்றங்கள், மீறல்கள் நடந்தற்கு ஒரு முக்கிய சாட்சியாக இது கருதப்படுகிறது.[1]. இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தின் இரண்டாவது பகுதி "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்ற தலைப்பில் 2012, மார்ச் 14 ஆம் நாள் சேனல் 4 வெளியிட்டது.

ஐ.நா மனித உரிமைகள் அவையில் ஒளிபரப்பு

[தொகு]

இலங்கையின் படுகொலைக்களம் பொதுவில் ஒளிபரப்பப்படும் முன்பு, இது ஐ.நா மனித உரிமைகள் அவையில் மனித உரிமைகள் அமைப்புகளின் வேண்டுதலால் சூன் 3 அன்று காண்பிக்கப்பட்டது.[2]

தாக்கம்

[தொகு]

இந்த ஆவணப் படம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய அரசு, இலங்கையில் போர்க் குற்றங்களுக்கான விசாரணை நடைபெற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது.[3]

தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்

[தொகு]

இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தின் இரண்டாவது பகுதி "இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" 2012, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மிகத் தெளிவான நான்கு சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் ஆராயப்பட்டுள்ளன. முதலாவது ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள இந்தக் காணொளியில் போர்க் குற்றங்களுக்கான மேலும் ஆதாரங்களைத் தான் வெளியிடுவதாகக் குறிப்பிடுகிறது. இக்காணொளியில் இறுதிக் கட்டப் போரின் போது நடைபெற்றதாக கூறப்படும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன[4].

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lifting the lid on Sri Lanka's war crimeskilling-fields-video-evidence-builds-case-for-war-crimes
  2. A War Without Witnesses?
  3. UK calls for Sri Lanka to probe 'Killing Fields' war crimes allegations
  4. 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள், சேனல் 4

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையின்_கொலைக்களம்&oldid=4374545" இலிருந்து மீள்விக்கப்பட்டது