இலங்கா பொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கா பொடி (Lanka Podi) அல்லது இலங்கா புடி (பொருள்: இலங்கா எரிப்பு) என்பது இந்தியாவின் மேற்கு ஒடிசாவின் சுபர்ணபூர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். சுபர்ணபூர் பசிசிமா இலங்கா என்று அழைக்கப்பட்டது என்பதற்கு இந்த பண்டிகை மேலும் ஒரு சான்று என்று பலர் கூறுகின்றனர். இது ஆண்டுதோறும் பத்ரா அமாவாசை அன்று அனுசரிக்கப்படுகிறது. பாரம்பரிய இந்து நாட்காட்டியின்படி பொதுவாகச் சப்தபுரி அமாபஸ்யா என்று அழைக்கப்படுகிறது.

திருவிழா[தொகு]

இத்திருவிழா இராமநவமி அன்று தொடங்கி 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய ஈர்ப்பு அசுரனான இராவணனை வதம் செய்வதாகும். இது ‘ராவன் பொடி’ என்று அழைக்கப்படும். இராவணனின் பெரிய உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்துவது இந்நிகழ்வின் சிறப்பாக கருதப்படுகிறது.[1]

கொண்டாட்டங்கள்[தொகு]

இலங்கா என்ற சொல்லுக்கு இந்திய பேச்சுவழக்குகளில் தீவு என்று பொருள். இதில் நதி தீவுகளும் அடங்கும். சோனேபூர் என்றால் இராவணனின் இலங்கையினைக் குறிக்கும் தங்க நகரம் என்று பொருள். இது இராவணனின் தங்க நகரம் என்று இப்பகுதி மக்கள் நம்பினர். மழைக்கால அமாவாசை இரவில் (பத்ர அமாவாசை) குழந்தைகளுக்கு அனுமனின் களிமண் பொம்மைகள் வழங்குவார்கள். இவை இலை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படும். திருவிழா இரவில், இந்த பொம்மைகளை வண்டிகளில் வைத்து அக்கம் பக்கம் எடுத்துச்செல்வர். பின்னர் இவற்றின் வால்களில் எண்ணெய் கலந்த துணியினைச் சுற்றி தீயிட்டு கொழுத்துவர். கிராமங்களில், இளைஞர்கள் இரவு முழுவதும் உண்ணாவிரதம் இருப்பார்கள். இவர்கள் அழகான அனுமான் முகமூடிகளை அணிந்துகொண்டு, அனுமான் இலங்கையைக் கைப்பற்றியதை நினைவு கூறும் விதமாக நெருப்பில் நடப்பார்கள். இங்குள்ள இராவணன் முகமூடிகளை மது மற்றும் மீன் கொண்டு வழிபடுவர். இது தந்திர வேர்களைக் குறிக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "People fondly celebrate famous Lanka Podi festival in Odisha" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.
  2. "Burning Lanka in Odisha". Devdutt (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-06-13. பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கா_பொடி&oldid=3651741" இலிருந்து மீள்விக்கப்பட்டது