இலங்கா பண்டாரநாயக்க
இலங்கா பண்டாரநாயக்க | |
|---|---|
| பிறப்பு | 21 மே 1982 அனுராதபுரம், இலங்கை |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 1998 முதல் தற்போது வரை |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாரம்பரியம் (2016) |
இலங்கா பண்டாரநாயக்க (Lanka Bandaranayake) இலங்கைத் திரைப்படத் துறையில் முக்கியமாகப் பணியாற்றும் ஒா் இலங்கைத் திரைப்படப் படைப்பாளி, தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகை மற்றும் நாடகக் கலைஞர் ஆவார். இவர் 'பாரம்பரியம்' (2016) என்ற குறும்படத்திற்காக அறியப்படுகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]இலங்கா இலங்கையின் அனுராதபுரத்தில் பிறந்தார். 2016ஆம் ஆண்டில், இவர் இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.[1] இவர் 2021இல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்கத்தில் தனது முதுகலைப் பட்டத்திற்காக செவனிங் உதவித்தொகையைப் பெற்றார். இதை இவர் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[2]
தாெழில்
[தொகு]இலங்கா 1998இல் ஒரு நாடகக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, 2016இல் திரைப்படத் துறைக்கு வந்தார். இவர் நாடகம், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடிகையாகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.[3]
2008இல், கெவாகே பண்டுலா இயக்கிய 'செக்யூரிட்டி' என்ற ஒரு சிறு நாடகத்தில் இவர் நடித்தார். இது 2008இல் கொழும்பு இளம் பார்வையாளர்களுக்கான நாடக விழாவில் மேடையேற்றப்பட்டது.[4]
இவரது முதல் குறும்படமான 'டிரேடிசன்', 40இக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[5][6][7][8][9][10][11][12]
2019இல், இவர் தனது இரண்டாவது குறும்படமான 'இன்கெரிட்டன்சு' (2020)ஐ இலங்கையின் பிரித்தானிய சபையுடன் இணைந்து இயக்கினார்.[13]
2020இல், இலங்கா 'குட்நைட் கொழும்பு' என்ற தொகுப்புத் திரைப்படத்தில் "தி டெலிவரி" என்ற அத்தியாயத்தை இயக்கினார்.[14]
இவரது மூன்றாவது குறும்படமான மகாசோனா (2021), பல்வேறு திரைப்பட விழாக்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[15][16][17]
2021இல், இவரது முதல் முழு நீளத் திரைப்படமான தி கெய்ல், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ஒரு சர்வதேச திரைப்பட நிபுணர்களுக்கான கலாச்சார பரிமாற்ற மற்றும் வழிகாட்டுதல் நிதி ஆதரவுத் திட்டத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது.[18][19] இந்தத் திட்டத்தின் போது, இவர் தனது முதல் முழு நீளத் திரைப்படத் திட்டமான தி கெய்ல் என்பதை உருவாக்கினார்.[2]
விருதுகளும் அங்கீகாரங்களும்
[தொகு]- புஞ்சி ஜானெலயா - தேசிய இளைஞர் விருது விழா 2009 இல் நடுவர் சிறப்பு விருதுகள் (தயாரிப்பு).[20]
- டிரேடிசன் - யூரோ கினோ செக் IIFF 2017, செக் குடியரசு இல் சிறந்த ஒளிப்பதிவு.[11]
- டிரேடிசன் - 12வது ஜோக்ஜா-நெட்பேக் ஆசிய திரைப்பட விழா 2017, இந்தோனேசியாவில் சிறந்த குறும்படம்.[3]
- டிரேடிசன் - 9வது சார்க் திரைப்பட விழா 2019, இலங்கையில் சிறப்பு நடுவர் அங்கீகாரம்.[21]
- இன்கெரிட்டன்சு - கொழும்பு சர்வதேச மகளிர் திரைப்பட விழா 2020, இலங்கையில் சிறப்பு நடுவர் விருது.[22]
- செவனிங் ஆண்டின் சிறந்த முன்னாள் மாணவர் 2024.[23]
- இங்கிலாந்தின் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தின் சர்வதேச முன்னாள் மாணவர் விருது 2024 வெற்றியாளர்.[24]
- ஸ்டடி யுகே முன்னாள் மாணவர் விருதுகள் இலங்கை 2024 இல் கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் பிரிவில் வெற்றியாளர்.[25]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Exposing Patriarchal Practices: Lanka Bandaranayake". ARTRA: 8. December 2020. https://www.artra.lk/visual-art/exposing-patriarchal-practices. பார்த்த நாள்: 2022-12-16.
- 1 2 "The Hail". Film Independent (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-11-16. Retrieved 2023-11-16.
- 1 2 Valentina, Vitali (2020). "Interview with Lanka Bandaranayake". BioScope: South Asian Screen Studies 11 (1): 101–104. doi:10.1177/0974927620935762.
- ↑ "'Colombo Theatre Fest' for young audience". www.sundaytimes.lk. Archived from the original on 2023-11-19. Retrieved 2023-11-19.
- ↑ Weheraduwa, Nisanka (July 16, 2018). "ලංකා බණ්ඩාරනායක සහ ජූඩ් රත්නම් ලොකර්නෝ යති". Cinema LK இம் மூலத்தில் இருந்து 6 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230806122512/http://cinema.lk/%E0%B6%BD%E0%B6%82%E0%B6%9A%E0%B7%8F-%E0%B6%B6%E0%B6%AB%E0%B7%8A%E0%B6%A9%E0%B7%8F%E0%B6%BB%E0%B6%B1%E0%B7%8F%E0%B6%BA%E0%B6%9A-%E0%B7%83%E0%B7%84-%E0%B6%A2%E0%B7%96%E0%B6%A9%E0%B7%8A-%E0%B6%BB/?fbclid=IwAR0FJ2_3BI-GGF_QhJcUBu9aWFGlz-bYDg6msXoOQ3-y2h2r58hJVB8JVNE.
- ↑ Guidicelli, Sara Rossi (6 August 2018). "Il cinema che apre le porte". Azione. https://www.azione.ch/cultura/dettaglio/articolo/il-cinema-che-apre-le-porte-1.html?fbclid=IwAR3iw8HGRAftIJEg8fUTZD8sqbzGzfGeljXo5sksadapN1MYxDbm95iI_y8.
- ↑ कोसेली. "लोकार्नो डायरी महोत्सव". Ekantipur இம் மூலத்தில் இருந்து 6 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230806122513/https://ekantipur.com/koseli/2018/09/01/15357720394849931.html?fbclid=IwAR1N0A-aPJV9RcihVSx_Ate9yrhGAebcb3uCDPA_xBykATpq1CTsVpMjInU.
- ↑ "Revisit the 2017 Toronto Reel Asian International Film Festival" (PDF). 9 November 2017. Archived (PDF) from the original on 18 November 2023. Retrieved 18 November 2023.
- ↑ "Ivy Film Festival 2017 Official Program by Ivy Film Festival - Issuu". issuu.com (in ஆங்கிலம்). 2017-04-08. p. 24-25. Archived from the original on 2023-11-18. Retrieved 2023-11-18.
- ↑ "2017 – Filmfest Düusseldorf" (in ஜெர்மன்). Archived from the original on 2023-11-18. Retrieved 2023-11-18.
- 1 2 "Tradition: Survival Of A Soul With Scars". asianmirror.lk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2023-11-17. Retrieved 2023-11-17.
- ↑ "Film Festival: Contemporary South Asian Films by Women". FACT (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2019-12-09. Archived from the original on 2022-12-16. Retrieved 2023-11-18.
- ↑ "Female Filmmakers First". British Council Sri Lanka. Archived from the original on 7 November 2023. Retrieved 18 November 2023.
- ↑ "Film Forum Online: Goodnight Colombo - Goethe-Institut Sri Lanka". @GI_weltweit (in ஆங்கிலம்). Archived from the original on 2023-11-18. Retrieved 2023-11-18.
- ↑ "ලංකාගේ 'මහසෝනා' මෙවර කාන් සිනමා උලෙළට". The Leader. 6 June 2021. Archived from the original on 2023-01-27. Retrieved 2023-08-06.
- ↑ "ලොවවටා ගිය ලංකාගේ "සම්ප්රදාය" YouTube අවකාශයට". Cinema.lk. 6 June 2021. Archived from the original on 2023-11-21. Retrieved 2023-08-06.
- ↑ "TRADITION (LANKA BANDARANAYAKE) IMAGINEINDIA 2018". Imagine India International Film Festival. 9 October 2017. Archived from the original on 2023-06-02. Retrieved 2023-08-07.
- ↑ "ලංකා බණ්රඩාණායකට හොලිවුඩයෙන් ශිෂ්යත්වයක්". Mirror Arts. 4 October 2022. Archived from the original on 2023-11-21. Retrieved 2023-09-13.
- ↑ "Sri Lankan director gets opportunity in Hollywood". THE LEADER. 4 October 2022. Archived from the original on 2023-11-21. Retrieved 2023-09-13.
- ↑ "National Youth Services Council" (PDF). Archived (PDF) from the original on 2023-11-24. Retrieved 2023-11-16.
- ↑ "Ninth SAARC Film Festival Award Winners |" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-11-17. Retrieved 2023-11-17.
- ↑ Boyle, Asvajit (2021-01-09). "2nd Edition of the Colombo International Women's Film Festival". Agenda 14 (in ஆங்கிலம்). Archived from the original on 2023-11-16. Retrieved 2023-11-16.
- ↑ "Chevening Alumni of the Year Awards 2024". 24 June 2024. https://www.cheveningalumnialliance.com/post/chevening-alumni-of-the-year-awards-2024-chevening-alumni-alliance.
- ↑ "Lanka Bandaranayake: International Alumni Award Winner 2024". https://www.bournemouth.ac.uk/collaborate/alumni/alumni-year-awards-2024/lanka-bandaranayake-international-alumni-award-winner-2024.
- ↑ "Winners of Study UK Alumni Awards announced in Sri Lanka". 11 March 2024. https://businesscafe.lk/business-news/education/item/14978-winners-of-study-uk-alumni-awards-announced-in-sri-lanka.