உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்சன் சந்தக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலக்சன் சந்தக்கன்
Lakshan Sandakan
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பத்தம்பெருமா அராச்சிகே டொன் இலக்சன் ரங்கிக்கா சந்தக்கன்
பிறப்பு10 சூன் 1991 (1991-06-10) (அகவை 33)
இராகமை, இலங்கை
பட்டப்பெயர்லக்கீ
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைமெதுவான இடக்கை
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 136)26 சூலை 2016 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு13 ஆகத்து 2016 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
கொழும்பு துடுப்பாட்டக் கழகம்
சராசென்சு கழகம்
சதர்ன் எக்சுபிரசு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே முத ப.அ இ20
ஆட்டங்கள் 3 34 10 15
ஓட்டங்கள் 33 527 65 13
மட்டையாட்ட சராசரி 16.50 12.54 16.25 4.33
100கள்/50கள் -/- -/- -/- -/-
அதியுயர் ஓட்டம் 19* 49 30 6*
வீசிய பந்துகள் 430 5758 427 280
வீழ்த்தல்கள் 9 155 15 16
பந்துவீச்சு சராசரி 23.00 23.18 28.46 25.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 9 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 0
சிறந்த பந்துவீச்சு 4/58 7/70 5/40 4/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 24/- 2/– 3/-
மூலம்: கிரிக்கின்ஃபோ, ஆகத்து 17 2016

இலக்சன் சந்தக்கன் (Lakshan Sandakan, பிறப்பு: சூன் 10, 1991) இலங்கையின் தொழில்-சார் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியில் தேர்வுப் போட்டிகளிலும், உள்ளூரில் முதல் தர ஆட்டங்களிலும் விளையாடி வருகிறார்.[1] இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

சர்வதேச போட்டிகள்

[தொகு]

2016 சூலையில் இவர் ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இலங்கைத் தேர்வு அணியில் சேர்க்கப்பட்டார்.[2] 2016 சூலை 26 இல் தனது முதலாவது தேர்வுப் போட்டியை ஆத்திரேலிய அணிக்காக விளையாடி,[3] தனது முதலாவது தேர்வு இலக்காக ஆத்திரேலியாவின் மிட்செல் மார்சை வீழ்த்தினார். முதலாவது தேர்வில் இவர் மொத்தம் 7 இலக்குகளைக் கைப்பற்றினார்.[4] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 21 ஓவர்கள் வீசி 58 ஓட்டங்கள்விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார்.[5] துடுப்பாட்டத்தில் 21 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை எடுத்தார். இதன் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 25 ஓவர்கள் வீசி 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். இதில் 8 ஓவர்களை மெய்டனாக வீசினார். இதில் 7 பந்துகளில் 9 ஓட்டங்களை எடுத்தார்.[6]

ஆகஸ்டு 21, 2016 கொழும்பில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இவர் வீசிய முதல் ஓவரில் மேத்யூ வேடின் இலக்கினை வீழ்த்தினார்.[7] இந்தப் போட்டியில் 5 ஓவர்கள்வீசி 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.[8]

சனவரி, 2017 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். 22 சனவரி , 2017 இல் இந்த அணிக்கு எதிராக அறிமுகமானார். இவர் வீசிய முதல் பந்திலேயே இலக்கினைக் கைப்பற்றினார். இதன்மூலம் முதல்பந்திலேயே இலக்கினைக் கைப்பற்றிய முதல் இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார்.[9] இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 5.75 ஆகும்.[10][11] இந்தப் போட்டியில் 3 இலக்குகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

சூலை 2, 2017 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 52 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[12] இந்தப் போட்டியில் முதல்முறையாக ஆட்டநாயகன் விருது பெற்றார். முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்று தேர்வுத் துடுப்பாட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தத் தொடரில் இரண்டாவது போட்டியில் முதல்முறையாக 5 இலக்குகளைக் கைப்பற்றினார்[13]. ஆனால் இந்தப் போட்டியில் இலஙகை அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. மேலும் இலங்கையை அதன் சொந்த மண்ணில் முதல்முறையாக தொடரை முழுமையாக வென்றது.[14]

புது தில்லியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். காற்றின் மாசு காரணமாக இந்தப் போட்டி இரண்டு நாள்களிலேயே முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் தினேச்ந்ஹ் சந்திமால் 150 ஓட்டங்கள் அடிப்பதற்கு உதவினார்.[15][16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lakshan Sandakan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2016.
  2. "Siriwardana left out of Sri Lanka squad for first Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2016.
  3. "Australia tour of Sri Lanka, 1st Test: Sri Lanka v Australia at Pallekele, Jul 26-30, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2016.
  4. Jayaraman, Shiva. "Sandakan creates history as left-arm spinners take stage". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2016.
  5. "1st Test, Australia tour of Sri Lanka at Kandy, Jul 26-30 2016 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-22
  6. "1st Test, Australia tour of Sri Lanka at Kandy, Jul 26-30 2016 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-22
  7. "Australia tour of Sri Lanka, 1st ODI: Sri Lanka v Australia at Colombo (RPS), Aug 21, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.
  8. "1st ODI (D/N), Australia tour of Sri Lanka at Colombo, Aug 21 2016 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-22
  9. "Records: Twenty20 Internationals: Bowling records: Wicket with first ball in career". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 January 2017.
  10. "Sri Lanka tour of South Africa, 2nd T20I: South Africa v Sri Lanka at Johannesburg, Jan 22, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 January 2017.
  11. "Sri Lanka pick uncapped Thikshila de Silva for SA T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
  12. "Hasaranga hat-trick, Sandakan four; Zimbabwe 155". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 July 2017.
  13. "Pandya's maiden ton headlines 15-wicket day". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 August 2017.
  14. "A rare clean sweep away from home". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 August 2017.
  15. "Delhi pollution interrupts India-Sri Lanka Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
  16. "Kohli's 243 hands India massive advantage". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்சன்_சந்தக்கன்&oldid=2947528" இலிருந்து மீள்விக்கப்பட்டது