இலக்கியன்
இலக்கியன் | |
|---|---|
| பிறப்பு | இராஜேந்திரன் சேலம், தமிழ்நாடு, இந்தியா |
| தொழில் | கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், திரைப்பட எழுத்தாளர் |
| தேசியம் | இந்தியர் |
| பெற்றோர் | காளியப்பன், பாக்கியம் |
இலக்கியன் (Ilakkiyan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியரும், திரைப்பட எழுத்தாளரும் ஆவார்.[1][2][3][4][5][6] தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் பாடலாசிரியராகவும், கதை, திரைக்கதை, வசன எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இலக்கியன் சேலத்தில் காளியப்பன் – பாக்கியம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் இராஜேந்திரன். தமிழ் இலக்கியத்தின் மேல் கொண்ட பற்றால் தமது பெயரை இலக்கியன் என்று வைத்துக்கொண்டார். சிறுவயதிலிருந்தே கவிதைகள், கதைகள் எழுதும் படைப்பாற்றல் பெற்றிருந்தார். திரைப்பட இயக்குநராகும் நோக்கத்தில் சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.
திரையுலக அனுபவம்
[தொகு]தமிழ்த் திரையுலகில் பிரியம் என்னும் படத்தில் உதவி இயக்குநராகத் தமது திரையுலக அனுபவத்தைத் தொடங்கினார். சம காலத்திலேயே ஆயுத பூஜை படத்தில் "நெய்க்காரப்பட்டிப் பொன்னம்மா" என்னும் பாடலை எழுதி அதன் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமானார். தொடர்ந்து பிரியம், கின்னஸ் சாதனை படைத்த படமான "சுயம்வரம்", அஜித் குமார் நடித்த ''ரெட்டை ஜடை வயசு'', மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த ''மகாத்மா'' போன்ற படங்களில் பாடல்கள் எழுதினார்.[7] சுயம்வரம் படத்தில் இடம் பெற்ற "சிவ சிவ சங்கரா" பாடலுக்கான பிரபு தேவா-ரோஜா நடனம் (வித்யாசாகர் இசையமைத்து, இலக்கியனின் வரிகளுடன், பிரபு தேவா முதன் முறையாகப் பாடியது) படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.[8]அதைத் தொடர்ந்து, கன்னடத் திரையுலகில் "ராஜ்குமாரி" படத்தின் திரைக்கதையும், "பக்கா சுக்கா" படத்தின் கதை, திரைக்கதையும் எழுதினார். மேலும், இயக்குநர் எஸ். நாராயண் இயக்கிய பல திரைப்படங்களுக்கு அவருடன் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.
திரைப்படவியல்
[தொகு]தமிழ்த் திரைப்படங்களில் பாடலாசிரியராக
[தொகு]தமிழ்த் திரைப்படங்களில் இலக்கியன் இயற்றிய பாடல்கள் [9][10][11][12][13][14][15][16][17][18][19][20][21][22]
| எண் | ஆண்டு | திரைப்படம் | பாடல்கள் |
|---|---|---|---|
| 1. | 1995 | ஆயுத பூஜை | நெய்க்காரப்பட்டிப் பொன்னம்மா |
| 2. | 1996 | பிரியம் | காதல் வலை விரிக்கும் |
| 3. | 1997 | ரெட்டை ஜடை வயசு | வெள்ளிப்பனி மலரே, |
| 4. | 1997 | ரெட்டை ஜடை வயசு | மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் |
| 5. | 1999 | சுயம்வரம் | சிவ சிவ சிவ சங்கரா |
| 6. | 2004 | ஜெய் | கனவு காணலாம் வரியா |
| 7. | 2014 | ஜெய்ஹிந்த் 2 | மழலை மலராக |
| 8. | 2016 | காதல் காலம் | தில்லு தில்லு சூப்பர் தில்லு |
மலையாளத் திரைப்படங்களில் பாடலாசிரியராக
[தொகு]மலையாளத் திரைப்படங்களில் இலக்கியன் இயற்றிய பாடல்கள் [23][24][25]
| எண் | ஆண்டு | திரைப்படம் | பாடல்கள் |
|---|---|---|---|
| 1. | 1996 | மகாத்மா | ஓகோ ஓகோ பிரம்மா |
கன்னடத் திரைப்படங்களில் எழுத்தாளராக
[தொகு]கன்னடத் திரையுலகில் இலக்கியன் கதை, திரைக்கதை எழுதிய படங்கள் [26][27][28]
| எண் | ஆண்டு | திரைப்படம் | எழுத்தாளர் |
|---|---|---|---|
| 1. | 2003 | பக்கா சுக்கா | கதை, திரைக்கதை |
| 2. | 2009 | ராஜ்குமாரி | திரைக்கதை |
| 3. | 2016 | ஸ்ரீ சத்யநாராயணா | கதை, திரைக்கதை, வசனம் |
திரைப்படப் பட்டியல்
[தொகு]| எண் | ஆண்டு | திரைப்படம் | மொழி | பணி | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
| 1. | 1995 | "ஆயுத பூஜை" | தமிழ் | பாடலாசிரியர் | |
| 2. | 1996 | "பிரியம்" | தமிழ் | பாடலாசிரியர் உதவி இயக்குநர் |
|
| 3. | 1996 | "மகாத்மா" | மலையாளம் | பாடலாசிரியர் | |
| 4. | 1997 | "ரெட்டை ஜடை வயசு" | தமிழ் | பாடலாசிரியர் | |
| 5. | 1999 | "சுயம்வரம்" | தமிழ் | பாடலாசிரியர் | கின்னஸ் சாதனை படைத்த படம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வாமணன் (2000). "இன்னொரு புதுப் பாடலாசிரியர் இலக்கியன்". திரைக் கவிஞர்கள் 2000 வரை (1 ed.). சென்னை: சக்தி பதிப்பகம். pp. 368–369. Retrieved 2025-11-06.
- ↑ Vaamanan (2000). "Another new lyricist Ilakkiyan". Thiraik Kavignargal 2000 Varai (திரைக் கவிஞர்கள் 2000 வரை) (1st ed.). Chennai: Kalaignan Pathippagam. pp. 368–369. Retrieved 2025-11-10.
- ↑ திருமாவேலன், ப. title=தமிழ் சினிமாவில் புதிய புலவர்கள் (4 ஜூலை 1999). (in ta)ஆனந்த விகடன்: pp. 22–23, 29–30 (மற்றும் பின் அட்டைப்படம்).
- ↑ பிஸ்மி, ஜெ. (1 நவம்பர் 1999). "அறிவுமதி – பழனிபாரதி தலைமையில் புதிய கவிஞர்களின் கலந்துரையாடல்" (in ta). சினிமா எக்ஸ்பிரஸ்: pp. 38–42.
- ↑ பிஸ்மி, ஜெ. (15 நவம்பர் 1999). "அறிவுமதி – பழனிபாரதி தலைமையில் புதிய கவிஞர்களின் சந்திப்பு" (in ta). சினிமா எக்ஸ்பிரஸ்: pp. 57–59, 62–64.
- ↑ இலக்கியன் (ஜனவரி 1995). "நாளைய ராஜாக்கள் (கவிதை)" (in ta). பிலிமாலயா: p. 6.
- ↑ வாமனன் (2000). "இன்னொரு புதுப் பாடலாசிரியர் இலக்கியன்". திரைக் கவிஞர்கள் 2000 வரை. சென்னை: கலைஞன் பதிப்பகம். pp. 368–369.
- ↑ "Swayamvaram (Movie Review)". Retrieved 30 October 2025.
- ↑ "Neikkarapatti ponnamma". Retrieved 15 November 2025.
- ↑ "Ayudha poojai". Retrieved 15 November 2025.
- ↑ "Kadhal Valai". Retrieved 15 November 2025.
- ↑ "Kadhal Valai". Retrieved 15 November 2025.
- ↑ "ilakiyan kadhal valai". Retrieved 15 November 2025.
- ↑ "vellipani malarae". Retrieved 15 November 2025.
- ↑ "ilakiyan vellipani malarae". Retrieved 15 November 2025.
- ↑ "rettai jadai vayasu". Retrieved 15 November 2025.
- ↑ "siva siva shankara". Retrieved 15 November 2025.
- ↑ "kanavu kaanalam". Retrieved 15 November 2025.
- ↑ "Mazhaye Malarage". Retrieved 15 November 2025.
- ↑ "mazhaye malarage". Retrieved 15 November 2025.
- ↑ "dhillu dhillu super dhillu". Retrieved 15 November 2025.
- ↑ "dhillu dhillu super dhillu". Retrieved 30 October 2025.
- ↑ "ഓഹൊഹൊഹോ ബ്രഹ്മ". Retrieved 15 November 2025.
- ↑ "lyricist ilakkiyan". Retrieved 15 November 2025.
- ↑ "Actors Ramya Krishnan". Retrieved 30 October 2025.
- ↑ "pakka chukka". Retrieved 15 November 2025.
- ↑ "Rajkumari". Retrieved 15 November 2025.
- ↑ "ilakkiyan". Retrieved 30 October 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]- ilakkiyan."blogspot.com".