இலக்கண நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்கணம் என்பது தமிழில் மொழிப்பாங்கை உணர்த்தும் நூல். ஒரு வகையில் மொழியியல் என்னும், தமிழியல் என்றும் கூறத்தக்கவை. இன்று தமிழில் கிடைத்துள்ள பழமையான முழுமையான நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தில் என்ப, என்மனார் புலவர் முதலான தொடர்களால் அதற்கு முன்பே இருந்த தமிழ் இலக்கண நூல்கள் சுட்டப்பட்டுள்ளன.

தமிழில் உள்ள இலக்கண நூல்களைத் தொகுப்பிலக்கண நூல்கள், தனியிலக்கண நூல்கள் எனவும் பாகுபடுத்திக் காணமுடிகிறது. இந்த வகையில் அமைந்துள்ள இலக்கண நூல்கள் தமிழ் இலக்கண நூல்கள் என்னும் தலைப்பில் தனி நூலாக வெளிவந்துள்ளது. [1] அன்றியும் மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்களும், சில பால்கள் மட்டும் உரைநூல்களில் கிடைக்கப்பெற்றுத் தொகுக்கப்பட்டுள்ள இலக்கண நூல்களும் உள்ளன.

தொகுப்பிலக்கண நூல்கள்[தொகு]

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பிரபந்தம், புலமை என்றெல்லாம் பாகுபடுத்திக்கொண்டு தமிழ் இலக்கண நெறி விரிந்துள்ளது. இவற்றில் சில பகுதிகளைத் தொகுத்துக் கூறும் இலக்கண நூல்களைத் தொகுப்பிலக்கண நூல்கள் என்று வகைப்படுத்திக் கொண்டுள்ளோம்.

நூல் காலம் (நூற்றாண்டு) இலக்கணப் பகுப்புப் புலங்கள்
தொல்காப்பியம் கி.மு.4 எழுத்து, சொல். பொருள் (யாப்பு, அணி பகுதிகள் உள்ளன. வாய்மொழி, பிசி போன்ற சிற்றிலக்கிய (பிரபந்த) வகைகள் பற்றிய குறிப்பும் பொருளதிகாரத்தில் உள்ளடக்கம்) (3 புலம்)
நன்னூல் கி.பி.13 எழுத்து, சொல், (2 புலம்)
நேமிநாதம் 12 எழுத்து, சொல் (2 புலம்)
முத்துவீரியம் 19 எழுத்து, சொல், பொருள், யாப்பு, (பிரபந்தங்கள் உள்ளடக்கம்) அணி (பொருள்கோள் உள்ளடக்கம்) (5 புலம்)
குவலயானந்தம் (மாணிக்கவாசகர் இயற்றியது) 19 உறுப்பியல், அணியியல், சித்திரவியல் (3 புலம்)
அறுவகை இலக்கணம் 19 எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமை (6 புலம்)

தனி-இலக்கண நூல்கள்[தொகு]

தமிழ் மொழியின் இலக்கணப் பகுதிகளில் ஒரே ஒரு இலக்கணப் பகுதியை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள் தனித்தனியே தோன்றியுள்ளன.

நூல் காலம் (நூற்றாண்டு) நூல் விளக்கும் இலக்கணப் பகுதி
இறையனார் அகப்பொருள் கிறித்துவுக்கு முன் அகப்பொருள்
புறப்பொருள் வெண்பாமாலை 9 புறப்பொருள்
நம்பி அகப்பொருள் 12 அகப்பொருள்

சிதைந்த இலக்கண நூல்கள்[தொகு]

முழுமையாகக் கிடைக்காத நூல்களைச் சிதைந்த இலக்கண நூல்கள் என்று இங்குக் குறிப்பிடுகிறோம். பிற இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் உரையோடு தொடர்புடைய சில இலக்கண நூற்பாக்களை நூலின் பெயருடன் ஆங்காங்கே குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். பிற்கால அறிஞர்கள் அவற்றை ஒன்று திரட்டி உரிய நூலின் பெயரைத் தலைப்பாக்கி அவற்றை நூலாக்கிக் காட்டியுள்ளனர். இவை சிதைந்த இலக்கண நூல்கள்

நூலின் பெயர் காலம்
நூற்றாண்டு
நூலைப்பற்றிய குறிப்பு
அகத்தியம் தொல்காப்பியம்
நூலுக்கு முன்
அவிநயம் 6 இதனை முதன்முதலில் தொகுத்தவர் மயிலை சீனி வேங்கடசாமி
காக்கை பாடினியம் 6

மறைந்த தமிழ் இலக்கண நூல்கள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. சுப்பிரமணியன், முனைவர் ச. வே., பதிப்பாசிரியர், தமிழ் இலக்கண நூல்கள், மூலம் முழுவதும் - குறிப்பு விளக்கங்களுடன், மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கண_நூல்கள்&oldid=1635835" இலிருந்து மீள்விக்கப்பட்டது