இலகு தொடருந்துச் சேவை (ஹொங்கொங்)
இலகு தொடருந்துச் சேவை (Light Rail (MTR)) அல்லது Light Rail Transit (LRT) LRT என்பது இலகு தொடருந்து ஹொங்கொங், புதிய கட்டுப்பாட்டகம் நிலப்பரப்பில் யுன் லோங் மாவட்டம் மற்றும் சுன் மூன் மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும் ஓடும் ஒரு வகை சிறிய (இரண்டு பெட்டிகளை மட்டுமே கொண்ட) தொடருந்து சேவையாகும். இதனை "இலகு தொடருந்து சேவை" என்று அழைக்கப்படுகின்றது. இந்த தொடருந்து சேவை முன்னர் கவுலூன் - கெண்டன் தொடருந்து நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இதனை எம்.டி.ஆர் தொடருந்துச் சேவை நிறுவனம் வாங்கியதன் பின்னர் தற்போது இதனை எம்டிஆர் இலகு தொடருந்து (MTR Light Rail) என்றும் அழைக்கப்படுகின்றது. இது தற்போது 36.2 கிலோ மீட்டர் தூரங்களைக் கொண்ட வலைப்பின்னலாக இயங்குகிறது. இந்த வலைப்பின்னல் தண்டவாளத்தின் நீளம் 1435 மீ ஆகும்.[1]
வரலாறு
[தொகு]ஹொங்கொங் பிரித்தானியர் ஆட்சியில் இருந்தக் காலத்தில் 1988 செப்டம்பர் 18 ஆம் திகதி இந்த இலகு தொடருந்து சேவை அறிமுகமானது. இந்த இலகு தொடருந்துச் சேவை 68 நிலையங்களை கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Transport" (PDF). Hong Kong: The Facts. ஆங்ககங் அரசு. பார்க்கப்பட்ட நாள் 05 நவம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)