இலகுமல் ஹிரானந்த் ஹிரானந்தனி
லகுமல் ஹிரானந்த் ஹிரானந்தனி | |
|---|---|
| பிறப்பு | செப்டம்பர் 1917 தட்டா, பம்பாய் மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா |
| இறப்பு | 5 செப்டம்பர் 2013 (அகவை 95–96) மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
| மற்ற பெயர்கள் | லகுமல் ஹிரானந்த் கியாரா |
| பணி | காது, மூக்கு, தொண்டை நிபுணர் |
| செயற்பாட்டுக் காலம் | 1947–2013 |
| அறியப்படுவது | காது, மூக்கு, தொண்டை மருத்துவம் சமூகச் செயல்பாடு நற்பணிகள் |
| வாழ்க்கைத் துணை | காந்தா |
| பிள்ளைகள் | நவீன் ஹிரானந்தனி நிரஞ்சன் ஹிரானந்தனி சுரேந்திர ஹிரானந்தனி |
| விருதுகள் | பத்ம பூஷண் தன்வந்தரி விருது AAO-HNS தங்க விருது SAARC மில்லினியம் விருது FICCI சுகாதாரத் துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது |
லகுமல் ஹிரானந்த் ஹிரானந்தனி (1917–2013) ஓர் இந்திய காது, மூக்கு ,தொண்டை மருத்துவ நிபுணரும், சமூக ஆர்வலரும், கொடையாளியும் ஆவார்.[1] இவர் பல முன்னோடி அறுவை சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தினார்; இவை பிற்காலத்தில் 'டாக்டர் ஹிரானந்தனியின் அறுவை சிகிச்சைகள்' என்று அறியப்பட்டன. இந்தியாவில் இரண்டு பள்ளிகளை நிர்வகிக்கும் 'ஹிரானந்தனி அறக்கட்டளையின்' நிறுவனத் தலைவராக இருந்த இவர், இந்தியாவில் உறுப்பு வணிகத்திற்கு எதிரான சமூக இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்[2]. 'அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஓட்டோலரிங்கோலஜி - ஹெட் அண்ட் நெக் சர்ஜரி' அமைப்பின் 'கோல்டன் அவார்ட்' விருதைப் பெற்ற இவர், இவ்விருதைப் பெறும் முதல் இந்தியரும், ஒட்டுமொத்தமாக ஐந்தாவது நபரும் ஆவார்.[3] மருத்துவம் , சமூகத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, 1972-ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதான 'பத்ம பூஷண்' விருதை வழங்கி கௌரவித்தது.[4]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]ஹிரானந்தானி அமெரிக்கத் தலை , கழுத்து அறுவை சிகிச்சை சங்கத்தின் உறுப்பினராக இருந்தார், மேலும் அச்சங்கத்தில் சேர்க்கப்பட்ட முதல் இந்தியர் இவரே.[5]அமெரிக்க காது, மூக்கு, தொண்டை , தலை, கழுத்து அறுவை சிகிச்சை அகாதமியின் தங்க விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இவ்விருதைப் பெற்ற முதல் இந்தியர் , ஐந்தாவது நபர் ஆனார்.[6]
இந்திய அரசு 1972-ல், மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூஷன் விருதிற்காக, இவரை குடியரசு தின கௌரவப் பட்டியலில் சேர்த்தது.[7]
1988-இல் 'தன்வந்திரி மருத்துவ அறக்கட்டளை'யின் தன்வந்திரி விருதை இவர் பெற்றார்; ஒரு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணருக்கு இவ்விருது வழங்கப்பட்டது அதுவே முதல் முறையாகும்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dr LH Hiranandani: A life well lived". Indian Express. 8 October 2013. Retrieved 7 April 2016.
- ↑ Subhadra Anand (1 January 2004). Dr. L H Hiranandani: Born to Heal. Rupa & Company. ISBN 978-81-291-0580-6.
- ↑ "Works, Achievements and Accolades". Hiranandani Hospital. 2016. Archived from the original on 14 April 2016. Retrieved 7 April 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 3 January 2016.
- ↑ "Our Chairman". Hiranandani Hospital. 2016. Archived from the original on 14 April 2016. Retrieved 7 April 2016.
- ↑ "Renowned ENT surgeon Dr L H Hiranandani dies". Mumbai Mirror. 6 September 2013. Retrieved 7 April 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 3 January 2016.
- ↑ "Dr LH Hiranandani: A life well lived". Indian Express. 8 October 2013. Retrieved 7 April 2016.