இறுதித் தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோப்பாவில் உள்ள ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழகத்தில் இறுதித் தேர்வை எழுதும் மாணவர்கள்

இறுதித் தேர்வு (Final examination) ஆண்டுத் தேர்வு, அல்லது இறுதி நேர்காணல் என்பது, படிப்பு அல்லது பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தேர்வாகும் . உடல் பயிற்சியின் பின்னணியில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படலாம் என்றாலும், இது பெரும்பாலும் கல்விச் சூழலில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஒரு குறிப்பிட்ட கல்விக் காலத்தின் முடிவில், பொதுவாக காலாண்டு அல்லது கல்லூரிப் பருவத்தின் இறுதியில் தேர்வுகளை நடத்துகின்றன.[1]

நோக்கம் மற்றும் பொதுவான நடைமுறை[தொகு]

தேர்வின் நோக்கம் அந்த பாடத்திட்டத்தின் இறுதி மதிப்பாய்வு மற்றும் அனைத்துப் பாடம் குறித்த ஒவ்வொரு மாணவரின் அறிவை மதிப்பீடு செய்வதும் ஆகும். இறுதித் தேர்வு என்பது "அலகுத் தேர்வின்" பெரிய வடிவமாகும்.

இங்கிலாந்தில், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் முழுப் பட்டப் படிப்பின் முடிவில் "இறுதித் தேர்வை" நடத்துகின்றன. ஆஸ்திரேலியாவில், இறுதித் தேர்வுக் காலம் மாறுபடும், உயர்நிலைப் பள்ளிகளில் பொதுவாக இறுதித் தேர்வுகள் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் நடைபெறுகின்றன. ஆனால், பல்கலைக்கழகத் தேர்வுகள் (சில நேரங்களில் "தேர்வு வாரம்" அல்லது "தேர்வுகள்" என்று அழைக்கப்படுகிறது) அதிகபட்சம் மூன்று வாரங்கள் வரை நடைபெறுகிறது.

கால அட்டவணை[தொகு]

சில சந்தர்ப்பங்களில், மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் வகையில் அந்தந்த கல்வி நிலையங்கள் அட்டவணையில் மாற்றங்கள் செய்துகொள்கின்றன. இருப்பினும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இது அவசியம் இல்லை.[சான்று தேவை]

சான்றுகள்[தொகு]

  1. "தமிழ்நாட்டின் பொதுத் தேர்வு காலம்". Archived from the original on 2021-05-10. பார்க்கப்பட்ட நாள் 2022-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறுதித்_தேர்வு&oldid=3623044" இலிருந்து மீள்விக்கப்பட்டது