இறப்பு வீதம்
Appearance
இறப்பு வீதம் (Mortality rate) மக்கள்தொகையில் (பொதுவாக, அல்லது குறிப்பிட்ட காரணத்தால்) நிகழும் இறப்புக்களை அளவிடும் முறையாகும். இது குறிப்பிட்ட நேர அலகில் மக்கள்தொகையின் அளவிற்கேற்ப கணிக்கப்படுகிறது. இது பொதுவாக ஆண்டுக்கு 1000 நபர்களுக்கு இத்தனை இறப்புக்கள் என குறிப்பிடப்படுகிறது. எனவே இறப்பு வீதம் 9.5 என்றால் ஓராண்டில் 1000 பேரில் 9.5 பேர் இறந்ததாக அல்லது மொத்த மக்கள்தொகையில் 0.95% இறந்ததாக குறிக்கும். இது மேலும் பலவாறாக வேறுபடுத்தப்படுகின்றது:
- செப்பனிடா இறப்பு வீதம் - ஓராண்டுக்கு 1000 பேரில் நிகழும் மொத்த இறப்புக்கள். சூலை, 2009இல் உலகம் முழுமைக்கும் செப்பனிடா இறப்பு வீதம் ஆண்டுக்கு ஆயிரம் பேருக்கு ஏறத்தாழ 8.37 ஆக இருந்ததாக நடப்பிலுள்ள சிஐஏ உலகத் தரவுநூல் குறிப்பிடுகிறது.[1]
- பேறுகால சேய் இறப்பு வீதம், ஓராண்டில் 1000 பிறப்புகளில் நான்கு மாதத்திற்கு குறைவான சேய்கள் மற்றும் கருக்குழவிகளின் (செத்துப் பிறத்தல்) மொத்த இறப்பைக் குறிப்பிடுகிறது.
- பேறுகால தாயிறப்பு வீதம், அதே காலகட்டத்தில் 100,000 உயிருடனான பிறப்புகளில் தாய்மார்கள் இறந்த எண்ணிக்கையை குறிக்கிறது.
- தாயிறப்பு வீதம் , மக்கள்தொகையில் கருத்தரிக்க வல்ல (பொதுவாக 15–44 அகவையினர்) 1000 தாய்மார்களில் நிகழும் தாயிறப்புகளைக் குறிக்கிறது.
- குழந்தை இறப்பு வீதம், ஓராண்டில் 1000 உயிருடனான பிறப்புகளில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
- குழந்தை இறப்பு , ஓராண்டில் 1000 உயிருடனான பிறப்புகளில் 5 அகவைக்கும் குறைவான குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையைக் குறிக்கிறது.
- சீர்தரப்படுத்தப்பட்ட இறப்பு வீதம் (SMR)- மக்கள்தொகை அகவை, பாலினம் போன்றவற்றில் சீர்தரப்படுத்தப்பட்டிருந்தால் நிகழ மதிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையுடன் ஒப்பிடப்பட்ட வீதம்.[2]
- வயது வகைச் சார் இறப்பு வீதம் (ASMR) - ஓராண்டுக்கு 1000 பேரில் ஒரு குறிப்பிட்ட அகவையினர் (காட்டாக, கடைசி பிறந்த நாளில் 62 அகவை எய்தியவர்) இறக்கும் எண்ணிக்கையை இது குறிக்கிறது.
புள்ளிவிவரங்கள்
[தொகு]ஆண்டுகள் | செஇவீ | ஆண்டுகள் | செஇவீ |
---|---|---|---|
1950–1955 | 19.5 | 2000–2005 | 8.6 |
1955–1960 | 17.3 | 2005–2010 | 8.5 |
1960–1965 | 15.5 | 2010–2015 | 8.3 |
1965–1970 | 13.2 | 2015–2020 | 8.3 |
1970–1975 | 11.4 | 2020–2025 | 8.3 |
1975–1980 | 10.7 | 2025–2030 | 8.5 |
1980–1985 | 10.3 | 2030–2035 | 8.8 |
1985–1990 | 9.7 | 2035–2040 | 9.2 |
1990–1995 | 9.4 | 2040–2045 | 9.6 |
1995–2000 | 8.9 | 2045–2050 | 10 |
2012 த வேர்ல்டு ஃபக்ட்புக் மதிப்பீட்டின்படி மிக உயரிய செப்பனிடா இறப்பு வீதம் கொண்ட முதல் பத்து நாடுகள்:[4]
தரவரிசை | நாடு | இறப்பு வீதம் (ஓராண்டுக்கான இறப்புகள்/1000 பேருக்கு) |
---|---|---|
1 | தென்னாப்பிரிக்கா | 17.23 |
2 | உக்ரைன் | 15.76 |
3 | லெசோத்தோ | 15.18 |
4 | சாட் | 15.16 |
5 | கினி-பிசாவு | 15.01 |
6 | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 14.71 |
7 | ஆப்கானித்தான் | 14.59 |
8 | சோமாலியா | 14.55 |
9 | பல்கேரியா | 14.32 |
10 | சுவாசிலாந்து | 14.21 |
உலக சுகாதார அமைப்பு குறிப்பிடும் 2002இல் இறப்பிற்கான தலையாய 10 காரணங்களாவன:
- 12.6% ஆக்சிசன் குறை இதய நோய்
- 9.7% பெருமூளை குருதிக்குழாய் நோய்
- 6.8% கீழ்நிலைச் சுவாசத் தொற்றுக்கள்
- 4.9% எய்ட்சு
- 4.8% நெடுங்கால சுவாச அடைப்பு நோய்
- 3.2% வயிற்றுப்போக்கு
- 2.7% காச நோய்
- 2.2% மூச்சுகுழல்/சுவாசப்பைக் குழாய்/நுரையீரல் புற்றுநோய்கள்
- 2.2% மலேரியா
- 2.1% சாலை விபத்து
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ CIA World Factbook -- Rank Order - Death rate பரணிடப்பட்டது 2018-02-28 at the வந்தவழி இயந்திரம் Search for "World".
- ↑ Everitt, B.S. The Cambridge Dictionary of Statistics, CUP. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-81099-X
- ↑ UNdata: Crude death rate (per 1,000 population)
- ↑ "CIA World Factbook - Death Rate". Archived from the original on 2018-02-28. பார்க்கப்பட்ட நாள் 2014-01-03.
பிற உசாத்துணைகள்
[தொகு]- Crude death rate (per 1,000 population) பரணிடப்பட்டது 2009-02-15 at the வந்தவழி இயந்திரம் based on World Population Prospects The 2008 Revision, ஐக்கிய நாடுகள் அவை. Retrieved 22 சூன் 2010
- Rank Order - Death rate பரணிடப்பட்டது 2018-02-28 at the வந்தவழி இயந்திரம் in CIA World Factbook
- Mortality பரணிடப்பட்டது 2014-03-06 at the வந்தவழி இயந்திரம் in The Medical Dictionary, Medterms. Retrieved 22 சூன் 2010
- "WISQARS Leading Causes of Death Reports, 1999 - 2007", US Centers for Disease Control Retrieved 22 சூன் 2010
- Edmond Halley, An Estimate of the Degrees of the Mortality of Mankind (1693)
வெளி இணைப்புகள்
[தொகு]- DeathRiskRankings: Calculates risk of dying in the next year using MicroMorts and displays risk rankings for up to 66 causes of death பரணிடப்பட்டது 2013-04-14 at Archive.today
- Data regarding death rates by age and cause in the United States (from Data360) பரணிடப்பட்டது 2017-12-16 at the வந்தவழி இயந்திரம்
- Complex Emergency Database (CE-DAT): Mortality data from conflict-affected populations
- Human Mortality Database: Historic mortality data from developed nations
- Google - public data: Mortality in the U.S.