இறப்பு விசாரணை அறிக்கை (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இறப்பு விசாரணை அறிக்கை அல்லது மரண விசாரணை அறிக்கை அல்லது பிரேத விசாரணை அறிக்கை (Inquest report), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 174-இன் படி, சந்தேகத்திற்கு முறையில் இறந்தவர் குறித்தான விசாரணை அறிக்கை காவல் துறை அதிகாரியால் பதிவு செய்யப்படும்.

தற்கொலை அல்லது பிறரால், அல்லது விலங்குகளால் அல்லது இயந்திரக் கருவியால், அல்லது விபத்தால், அல்லது சந்தேகத்திற்குரிய முறையில் இறந்தவரின் உடலை, இறந்தவரின் உறவினர்கள் அல்லது அப்பகுதியில் வாழும் அல்லது தொழில் செய்யும் நான்கு நபர்கள் முன்னிலையில், காவல் துறை அதிகாரிகள் இறந்தவரின் உடலில் காணப்படும் எலும்பு முறிவுகள், தோற்காயம், கன்றிப்போன காயம், இரத்தம் கட்டிய உடற்பகுதிகள், ஆயுதங்களால் உடல் தாக்குண்டத்திற்கான அடையாளங்கள், இறந்தவரின் அங்க அடையாளங்கள், நிறம், உயரம், வயது, அணிந்திருந்த ஆடைகளின் நிறங்கள் குறித்து அறிக்கையாக பதிவு செய்யப்படுகிறது. இறப்பு விசாரணை அறிக்கையில் காவல் துறை அதிகாரி மற்றும் நான்கு சாட்சிகளின் கையொப்பங்கள் பெற்று, இறப்பு விசாரணை அறிக்கையை மாவட்ட நீதிபதி அல்லது உட்கோட்ட நீதிபதிக்கு அனுப்பப்படும்.[1][2]

இறப்பு விசாரனை அறிக்கை பதிவு செய்த பின்னரே இறந்தவரின் உடலை காவல் துறையினரால், பிணக்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படும்.[3][4]

திருமணமாக பெண்கள்[தொகு]

  • திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் எக்காரணத்தினாலும் தற்கொலை கொண்ட பெண்கள் விசயத்திலும் மற்றும் திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் இறந்த பெண்ணின் உறவினர்கள், அப்பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையினரிடம் புகார் அளித்தால், காவல்துறையினர் கட்டாயமாக இறப்பு விசாரணை அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Inquests and inquest reports
  2. Inquest report
  3. Section 174 in The Code Of Criminal Procedure, 1973
  4. Inquest report - Object and scope

வெளி இணைப்புகள்[தொகு]