இறபீக் சாமி
இறபீக் சாமி Rafik Schami | |
---|---|
பிறப்பு | 23 சூன் 1946 திமிஷ்கு, சிரியா |
தொழில் | எழுத்தாளர், கதைசொல்லி |
தேசியம் | செருமன், சிரியர் |
காலம் | 20ம்–21ம் நூற்றாண்டு |
இணையதளம் | |
Rafik Schami |
இறபீக் சாமி (Rafik Schami رفيق شامي, பிறப்பு: சூன் 23, 1946) சிரிய, ஜெர்மனிய எழுத்தாளர். அத்துடன் இவர் ஒரு கதைசொல்பவரும்,[1] விமர்சகரும், வேதியியல் பட்டதாரியும் ஆவார். இவர் ஜெர்மனியின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்.[2][3] இவரது படைப்புகள் 28 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. இரபிக் சாமி என்பது இவரது புனைபெயர். இவரது இயற்பெயர் சுகைல் பாடெல். இவர் 2002 இலிருந்து ஜெர்மனியில் பவாரியன் நுண்கலை அக்கடமியின் உறுப்பினராக உள்ளார்.
வாழ்க்கை
[தொகு]இவர் டமாஸ்கஸில், கிறிஸ்தவ-அரமேய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர். இவர் இராணுவச் சேவையை விரும்பாததால் 1971 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்தார்.[4] தற்சமயம் ஜெர்மனியில், கியர்கைம்போலாடனில் தனது பவாரியன் மனைவியுடனும், மகனுடனும் வாழ்கிறார். இவருக்கு இரண்டு நாட்டு குடியுரிமைகளும் இருக்கின்றன.
கல்வி
[தொகு]இவர் தனது ஆரம்பக்கல்வியை வடக்கு லெபனானில் உள்ள ஒரு கிறிஸ்துவ அவையினரின் கான்வென்ட் உறைவிட பள்ளியில் கற்றார். அதன் பின் திமிஷ்குவில் வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் படித்தார். 1979 ஆம் ஆண்டில் ஜெர்மனிய ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் கற்று இரசாயனவியல் பட்டதாரி ஆனார். ஜெர்மனியில் படிக்கும் போது தொழிற்சாலைகளிலும், மற்றும் பல்பொருள் அங்காடிகளிலும், உணவகங்களிலும் கட்டுமானத்தளங்களிலும் தற்காலிகத் தொழிலாளியாக வேலை செய்தார்.
எழுத்துலகில்
[தொகு]இவர் 1965 ஆம் ஆண்டிலிருந்து அரபு மொழியில் கதைகளை எழுதினார். 1964 இலிருந்து 1970 வரை `அல் மண்டலாக்´ என்ற பத்திரிகையை டமாஸ்கஸில் நிறுவி அதன் ஆசிரியராகவும் இருந்தார். 1977 இலிருந்து ஜெர்மனிய மொழியில் இவர் எழுதிய பல படைப்புகள் ஜெர்மனியப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகின. இதே நேரத்தில் இவர் அராபிய மொழியிலும் அராபியப் பத்திரிகைகளுக்கு எழுதிக் கொண்டிருந்தார். 1980 இல் இருந்து 1985 வரை ஜெர்மனியில் சுய்ட்விண்ட் (Südwind) இலக்கியஅமைப்பின் இணை நிறுவனராகவும், எழுத்தாளராகவும் இருந்தார்.[5] 1982 இலிருந்து ஜெர்மனியின் ஒரு தன்னிச்சையான எழுத்தாளராக இயங்கிக் கொண்டிருக்கிறார்.[6]
இறபீக் சாமியின் படைப்புகள்
[தொகு]- 1982: Das Schaf im Wolfspelz - அந்த ஆடு ஓநாய் கம்பளிக்குள்
- 1984: Das letzte Wort der Wanderratte - நோர்வே எலியின் கடைசி வார்த்தை
- 1985: Der Fliegenmelker und andere Erzählungen aus Damaskus
- 1985: Der erste Ritt durchs Nadelöhr - ஊசித்துவாரத்தினூடு முதல் சவாரி
- 1985: Weshalb darf Babs wieder lachen? - ஏன் பாப்ஸ் மீண்டும் சிரிக்க வேண்டும்?
- 1986: Bobo und Susu - போபோவும் சூசுவும்
- 1987: Eine Hand voller Sterne - ஒரு கை நிறைய நட்சத்திரங்கள்
- 1987: Malula
- 1988: Die Sehnsucht fährt schwarz
- 1989: Erzähler der Nacht - இரவின் கதை சொல்லி
- 1990: Der Wunderkasten
- 1991: Vom Zauber der Zunge - நாக்கின் மாயங்கள்
- 1991: Der fliegende Baum
- 1992: Der ehrliche Lügner - நேர்மையான பொய்யர்
- 1993: Märchen aus Malula
- 1994: Das ist kein Papagei - அது ஒரு கிளி அல்ல
- 1994: Der brennende Eisberg - எரியும் பனிப்பாறை
- 1995: Der Schnabelsteher
- 1995: Reise zwischen Nacht und Morgen - இரவுக்கும் பகலுக்கும் இடையிலான பயணம்
- 1996: Fatima und der Traumdieb
- 1996: Loblied und andere Olivenkerne
- 1997: Gesammelte Olivenkerne - சேகரித்த இலுப்பைக்காய்கள்
- 1997: Milad
- 1997: Der erste Kuss nach drei Jahren - முதல் முத்தம் மூன்று வருடங்களின் பின்
- 1998: Damals dort und heute hier - அப்போது அங்கே இப்போது இங்கே
- 1999: Albin und Lila - அல்பினும் லீலாவும்
- 1999: Der geheime Bericht über den Dichter Goethe
- 1999: Sieben Doppelgänger
- 1999: Wie kam die Axt in den Rücken des Zimmermanns
- 2000: Zeiten des Erzählens
- 2000: Die Farbe der Worte - வார்தைகளின் நிறம்
- 2000: Die Sehnsucht der Schwalbe
- 2000: Angst im eigenen Land - சொந்த நாட்டிலேயே பயம்
- 2002: Mit fremden Augen - வேற்றுக் கண்களுடன்
- 2002: Damaskus, der Geschmack einer Stadt
- 2003: Wie ich Papa die Angst vor Fremden nahm
- 2003: Das große Rafik Schami Buch
- 2004: Die dunkle Seite der Liebe - காதலின் இருண்ட பகுதி
- 2006: Der Kameltreiber von Heidelberg
- 2006: Damaskus im Herzen und Deutschland im Blick
- 2008: Das Geheimnis des Kalligraphen
- 2008: Was ich schaffe, überdauert die Zeit
- 2011: Die Frau, die ihren Mann auf dem Flohmarkt verkaufte: Oder wie ich zum Erzähler wurde
- 2012: Das Herz der Puppe - பொம்மையின் இதயம்
- 2013: »Hast du Angst?«, fragte die Maus
- 2013: Meister Marios Geschichte
- 2013: Eine deutsche Leidenschaft namens Nudelsalat
- 2013: Der Mut, die Würde und das Wort: Von der Verpflichtung, den Mund aufzumachen
- 2015: Sechs Sterne – Reisen - ஆறு நட்சத்திரங்கள் - பயணம்
- 2015: Sophia oder Der Anfang aller Geschichten - சோபியா அல்லது கதைகளின் தொடக்கம்
விருதுகள்
[தொகு]- 1991 மில்றெட் எல். பற்செல்டர் விருது (Mildred L. Batchelder Award) (ஒரு கை நிறைய நட்சத்திரங்கள் - ஜெர்மன் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நூலுக்காக - A Hand Full of Stars)[7]
- 2015 அறக்கட்டளை விருது விவிலியம் மற்றும் கலாச்சாரம் (Preis der Stiftung Bibel & Kultur)[8][9][10]
வெளி இணைப்புகள்
[தொகு]- இறபீக் சாமியின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2015-11-05 at the வந்தவழி இயந்திரம்
- இறபீக் சாமியின் நூல்கள் பரணிடப்பட்டது 2016-01-09 at the வந்தவழி இயந்திரம்
- Die Zeit der Versöhnung ist vorbei பரணிடப்பட்டது 2015-11-05 at the வந்தவழி இயந்திரம் நேர்காணல் Andrea Pollmeier
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இறபீக் சாமி கதை சொல்லும் பிரபலமான ஒளிப்பேழைகள்
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ [2]
- ↑ Die Herrscher in Damaskus sind sehr unsicher geworden | ZEIT ONLINE | September 15, 2011 | Britta Beeger
- ↑ Co-founder of the literary group "Südwind" and the Literature and Art organisation "PoLiKunst"[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Rafik Schami | Biographie | booksection
- ↑ "A Hand Full of Stars by Rafik Schami (translated from Grman)" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-12.
- ↑ Stiftung "Bibel und Kultur" ehrt Rafik Schami | Das Biblewerk | 08. Juni 2015[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Rafik Schami erhält den Preis der Stiftung Bibel und Kultur
- ↑ Rafik Schami erhält den Preis von Annette Schavan