இறகுப் பேனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இறகுப் பேனாவும் தாளும்
இறகுப் பேனா செய்யப்பட்ட நிலையில் இறகுகள்
மை போத்தலும் இறகுப் பேனாவும்
இறகு பேனாவின் முழுத் தோற்றம்

இறகுப் பேனா அல்லது இறகு எழுதுகோல் (quill pen) என்பது பறவையின் இறகைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு எழுது கருவி ஆகும். இந்த இறகு எழுதுகோலானது நனை பேனா, தூவல், குமிழ்முனைப் பேனா போன்றவை கண்டு பிடிப்பதற்கு முன் வழக்கில் இருந்த ஒரு பேனா ஆகும். இந்த இறகு பேனாவின் முனையை மையில் நனைத்து தாளில் எழுதிவந்தனர். இவை கையால் வெட்டி செய்யப்பட்ட எழுது கருவியாகும்.

விளக்கம்[தொகு]

இறகின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் இருக்கிறது. இலையில் இருப்பதைப் போல் நடுவில் உள்ள கோட்டுக்கு ஈர் என்று பெயர். அதன் இரு பக்கமும் இருக்கூம் தூவிகளை விசிறி என்று அழைக்கிறார்கள். கீழ்பகுதியின் பெயர், முருந்து.

இறகை எடுத்து அதை சுத்தம் செய்து, குறிப்பாக முருந்து என்னும் கீழ்ப் பகுதி சுத்தம் செய்வர். அடுத்து, அதன் முனையை கத்தரிப்பார்கள், அப்போது அது குழாய் போல் இருக்கும். அந்த குழாய்ப் பகுதியில் ஒரு கூரான கம்பியை நுழைத்து உள்ளே உள்ள தூசிகளை வெளியேற்றுவார்கள்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் மணலைப் பரப்புவார்கள். மணல் நன்றாகக் சூடு ஏறியதும், இறகை எடுத்து அதற்குள் சூடான மணலை நிரப்புவார்கள். அடுத்து, அந்த இறகை மணலோடு சேர்த்து மணலில் புதைத்துவிடுவர். இதனால் அது இன்னும் நன்றாகச் சூடாகும். சிறிது நேரம் கழிந்து எடுத்துப் பார்க்கும்போது. அடிப்பகுதி மெல்லிய மஞ்சள் நிறத்தில் மாறியிருந்தால் அடுப்பை அணைத்துவிட்டு இறகை வெளியில் எடுத்து மணலை அகற்றுவர். இவ்வாறு செய்வதால் தண்டுப் பகுதியின் கீழ் பகுதி உறுதியாக மாற்றப்படுகிறது. அடுத்து இறகின் அடிப்பகுதியில் சிறு கத்தியைக் கொண்டு ஒரு கோடு கிழிப்பர். மை பேனாவில் உள்ள நிப் போல் அந்தக் கோடு இருக்கும்.

இதன் பிறகு ஒரு மைக்கூட்டை எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு. விசிறி பகுதி மேலே இருக்குமாறு. முனை உள்ள பகுதி கீழே உள்ளவாறு. பேனா பிடிப்பதைப் போலவே இறகை எடுத்து அதன் அடிப்பகுதியைப் புட்டிக்குள் நுழைத்து மையைத் தொட்டுப் பிறகு எழுதுவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மருதன் (2018 பெப்ரவரி 14). "பேனா தயாரிப்பது எப்படி?". கட்டுரை. தி இந்து தமிழ். 14 பெப்ரவரி 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறகுப்_பேனா&oldid=3200444" இருந்து மீள்விக்கப்பட்டது