இர. திருச்செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இர. திருச்செல்வம்
படிமம்:இர.திருச்செல்வம் செம்மொழி மாநாடு.jpg
பிறப்புசூலை 4, 1962(1962-07-04)
பாரிட் புந்தார், பேராக், மலேசியா
பெற்றோர்இரத்தினர், தேவகி
வாழ்க்கைத்
துணை
சுப. வெற்றிச்செல்வி

இர. திருச்செல்வம் (Ira. Thiruchelvam, பிறப்பு: 4 சூலை 1962) மலேசியாவைச் சேர்ந்த தமிழியல் ஆய்வறிஞர்.

கல்வி[தொகு]

ஆங்கில-மலாய்வழி அடிப்படைக் கல்வி. ஆசிரியப் பட்டயக் கல்வி. கல்வி மேலாண்மை அறிவியல் துறையில் பட்டக் கல்வி பெற்றவர்.இர.திருச்செல்வம் கடந்த 25 ஆண்டுகளாக ஆய்வியல் நோக்கிலேயே தமிழைக் கற்றுத் தேர்ந்தவர். தமிழகத்துக்கு அப்பால் வேர்ச்சொல் ஆய்வுத்துறையில் ஆழ்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். இதுவரை வேர்ச்சொல்லாய்வு தொடர்பான 4 நூல்களை எழுதி வெளியிட்டிருப்பவர்.[1]

படிமம்:திருச்செல்வம் நூல்கள் 2016.jpg
இர.திருச்செல்வத்தின் நூல்கள் 2016

எழுதிய நூல்கள்[தொகு]

 • இவற்றை இப்படித்தான் எழுதவேண்டும் (இலக்கண வழிகாட்டி நூல், 2000)[2]
 • சொல் அறிவியல் (10 தொகுதிகள், 2004)[3][4]
 • ஏன் ஒரே சொல்லில் இத்தனை கருத்துகள்? (தமிழ் மொழி ஆய்வு, 1999)[5]
 • யார் தமிழர் (தமிழ் வாழ்வியல் மீட்பு நூல், 2016)[6]
 • தமிழர் வரலாறு (தமிழ் வாழ்வியல் மீட்பு நூல், 2016)[6]
 • தமிழ்ப் புத்தாண்டு (தமிழ் வாழ்வியல் மீட்பு நூல், 2016)[6]
 • பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம் (தமிழ் வாழ்வியல் மீட்பு நூல், 2016)[6]
 • ஒளிநெறியே தமிழ்ச்சமயம்
 • நாள் வழிபாடு
 • வடசொல்-தமிழ் அகர முதலி
 • ஆயிமாயிரம் அழகுதமிழ்ப் பெயர்கள்
 • பொது வழக்கு அகரமுதலி
 • தமிழ் ஆண்டு ஓர் அறிவியல் விளக்கம் (2008)

உசாத்துணை[தொகு]

 1. "திருச்செல்வம், இர". விருபா இணையத்தளம். 10 மே 2015 அன்று பார்க்கப்பட்டது.
 2. [1]
 3. [2]
 4. [3]
 5. [4]
 6. 6.0 6.1 6.2 6.3 [5]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இர._திருச்செல்வம்&oldid=3093551" இருந்து மீள்விக்கப்பட்டது