உள்ளடக்கத்துக்குச் செல்

இர்மா பிரிசில்லா அர்திசூர்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இர்மா பிரிசில்லா அர்திசூர்யா
அழகுப் போட்டி வாகையாளர்
பட்டம்மிசு இந்தோனேசியா 1969
தலைமுடி வண்ணம்கருமை முடி
விழிமணி வண்ணம்கருப்பு
முக்கிய
போட்டி(கள்)
மிசு இன்டர்நேசனல், 1969
மிசு ஆசியா குவெசுட்டு
மிசு பிரெண்ட்சிப்பு

இர்மா அர்திசூர்யா (Irma Hardisurya) (பிறப்பு: ஜூலை 6, 1947) இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆலோசகரும், எழுத்தாளரும், செய்தியாளரும் மற்றும் அழகு ராணியும் ஆவார். இர்மா பிரிசில்லா அர்திசூர்யா என்ற பெயராலும் அறியப்படுகிறார். இவர் 1969 ஆம் ஆண்டில் முதல் மிஸ் இந்தோனேசியாவாக முடிசூட்டப்பட்டார். 1970 ஆம் ஆண்டு பிலிப்பீன்சில் நடந்த மிஸ் ஆசியா குவெசுட்டு அழகுப் போட்டியில் இந்தோனேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மிஸ் பிரெண்ட்சிப்பு பட்டத்தை வென்றார்.[1] சப்பானின் தோக்கியோவில் நடைபெற்ற மிசு இன்டர்நேசனல் 1969 போட்டியிலும் அர்திசூர்யா பங்கேற்றார். ஆனால் அரையிறுதிக்கு முன்னேறவில்லை.[2] மிசு இன்டர்நேசனல் மற்றும் மிசு ஆசியா குவெசுட்டு ஆகிய இரண்டு சர்வதேச அழகுப் போட்டிகளில் இந்தோனேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே இந்தோனேசிய பெண் அர்திசூர்யா ஆவார்.

நாகரீக பாணி உலகில் இந்தோனேசிய நாகரீகத்தின் குறியீடாக அர்திசூர்யா அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு புகழ்பெற்ற நாகரீக பாணி பத்திரிகையாளரும், நாகரீக பாணி வடிவமைபு போட்டியின் நிறுவனரும் ஆவார்.[3]

தொழில்

[தொகு]
1969-1972 அழகுப் போட்டி ஆண்டுகள்

1969 ஆண்டு, ஆகத்து மாதம், 15 ஆம் தேதி அன்று, இர்மா அர்திசூர்யா முதல் மிசு இந்தோனேசியாவாக முடிசூட்டப்பட்டார். இந்தோனேசியாவின் உள்ள இராமாயண அறையில் இந்தப் போட்டி நடைபெற்றது. பின்னர் சப்பானின் டோக்கியோவில் நடந்த மிசு சர்வதேச அழகுப் போட்டியில் மிசு இந்தோனேசியாவாகப் பங்கேற்றார். அங்கு இவருக்கு இந்தோனேசிய முதல் பெண்மணி டியென் சோகார்டோ முடிசூட்டினார்

ஜகார்த்தா-சிங்கப்பூர் பயணம் செய்வதற்கான பெல்னி சுற்றுப்பயண அனுமதிசீட்டை அர்திசூர்யா பரிசாகப் பெற்றார். இதைத் தவிர ஆத்திரேலியாவுக்கான விமானப் பயணத்தையும் பரிசாகப் பெற்றார். செனரல் மோட்டார்சு நிறுவனம் ஆத்திரேலியாவில் ஒரு கிளையைக் கொண்டிருப்பதால் இதற்கான நிதியுதவியை செய்தது. ஒரு லாம்ப்ரெட்டா மோட்டார் சைக்கிளையும், இந்தோனேசிய விடுதி விருதினர் அறையில் தங்கும் வசதியையும் அர்திசூர்யா பரிசாக வென்றார்.[4]

1970 ஆம் ஆண்டு, பிலிப்பீன்சு நாட்டின் கியூசான் நகரில் நடந்த மிசு ஆசியா குவெசுட்டு போட்டியில் அர்திசூர்யா ஆசிய மிசு பிரெண்ட்சிப்பாக முடிசூட்டப்பட்டார்.[5] 1972 ஆம் ஆண்டு, ஆலிவுட்டு அணிவகுப்பில் பங்கேற்க ஆலிவுட்டுக்கும் அழைக்கப்பட்டார். இங்கு இவர் மிசு டூரிசம் ஆலிவுட்டு சர்வதேச விருதைப் பெற்றார்.[6]

நாகரீக பாணி உலகின் தொடக்கம்

[தொகு]

1972 ஆம் ஆண்டு பெமினா என்ற பத்திரிகை அறிமுகத்தின் போது, ​​அதன் முன்னோடி நாகரீக பாணி ஆசிரியராக பணிபுரிய கேட்டுக் கொள்ளப்பட்டதன் காரணமாக, ​​அர்திசூர்யா ஒரு நாகரீக பாணி எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[3] அன்று முதல் இவர் முக்கியமாக நாகரீக பாணி போக்குகள் மற்றும் சர்வதேச நாகரீக பாணி நிகழ்ச்சிகளை கட்டுரைகளாக்கி வருகிறார். நகல் எழுதுவதோடு மட்டுமல்லாமல், தனது கட்டுரைகளுக்கான சமீபத்திய நாகரீக பாணி போக்குகளின் ஓவியங்களையும் இவர் தயாரித்தார். பெமினா பத்திரிகையில் அர்திசூர்யாவின் முதல் கட்டுரை "கெலுயுரன் டி புசாட் மோட் நியூயார்க்" என்ற தலைப்பில் வெளியானது. இக்கட்டுரை நியூயார்க்கை நாகரீக பாணியின் தலைநகராகவும் 1973 ஆம் ஆண்டிற்கான நவீனப் போக்கு முன்னறிவிப்பாகவும் அமைந்திருந்தது.

1977 ஆம் ஆண்டில், பெமினா பத்திரிகையின் நிறுவனர்களான பியா அலிசுசக்பனா மற்றும் மிர்தா கர்தோகடிபிரோட்சோ ஆகியோருடன் இணைந்து, அர்திசூர்யா, பிரெட்-எ-போர்ட்டர் பாரிசை அதிகாரப்பூர்வ நாகரீக பாணி பத்திரிகையாளராகப் பதிவு செய்யத் தொடங்கினார்.

1979 ஆம் ஆண்டில், பெமினா பத்திரிகையில் பணிபுரிந்தபோது, அர்திசூர்யா இந்தோனேசிய நாகரீக பாணி துறையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார், இது ஆங்காங் விழாவால் ஈர்க்கப்பட்டு, பின்னர் ஆங்காங் நாகரீக பாணி வாரமாக உருவான நாகரீக பாணி வடிவமைப்பு போட்டியை தொடர்ந்து ஏற்பாடு செய்வதன் மூலம் ஒரு முன்னோடியாக அமைந்தது.[3][7]

அர்தி சூர்யா 1990 ஆம் ஆண்டு வரை பெமினா பத்திரிகையில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dukung Puteri Indonesia di ajang Miss Universe - #vintagemoment Irma Hardisurya berkompetisi dengan Busana Renang di Pemilihan Miss Indonesia 1969 yg digelar di Ramayana Room, Hotel Indonesia Jakarta. Gadis asal Bandung itu pada akhirnya memenangkan kontes tersebut dan ditunjuk untuk mewakili Indonesia di ajang Miss International 1969 dan Miss Asia Pacific 1970. Di ajang Miss Asia Pacific Irma mendapakan gelar Miss Friendship. Sc : Facebook Hotel Indonesia Kempinski Jakarta | Facebook". www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 2024-09-13.
  2. Amini, Mutiah (2005). "Dinamika Pemilihan "Putri Indonesia" pada Masa Orde Baru". Laporan Penelitian (யோக்யகர்த்தா). https://www.geocities.ws/konferensinasionalsejarah/mutia_amini_makalah_putri_indonesia_.pdf. 
  3. 3.0 3.1 3.2 "Tribute To Irma Hardisurya". Jakarta Fashion Week. 3 November 2014. Retrieved 13 September 2024.
  4. "Detail Encyclopedia Irma Priscilla Hardisurya". jakarta.go.id. Archived from the original on 17 September 2017. Retrieved 17 September 2017.
  5. "Miss Asia Quest 1970". Veestarz. Archived from the original on 17 September 2017. Retrieved 17 September 2017.
  6. "Color & Image Consultant". Tokoh Indonesia. Retrieved 13 September 2024.
  7. "Irma… Congratulations !". FashionPro Magazine. 27 November 2014. Archived from the original on 17 September 2017. Retrieved 15 February 2015.