இர்பான் கொலோதம் தோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இர்பான் கொலோதம் தோடி
Irfan Kolothum Thodi
Irfan Kolothum Thodi 2013.jpg
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியன்
பிறந்த நாள்8 பெப்ரவரி 1990 (1990-02-08) (அகவை 30)
பிறந்த இடம்மலப்புறம், கேரளா, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)நடையோட்டம்

இர்பான் கொலோதம் தோடி (Irfan Kolothum Thodi) ஒர் இந்திய நடையோட்ட வீரராவார். கேரள [1] மாநிலத்தின் மலப்புறத்தைச் சேர்ந்த இவர் 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று பிறந்தார். 20 கிலோமீட்டர் நடையோட்டத்தில் போட்டியிடும் இவர், 2012 ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றார்[2].

இப்போட்டியில் 20 கிலோமீட்டர் தொலைவை 1:20:21 மணி நேரத்தில் நடந்து முடித்து, போட்டியில் பத்தாவது இடம் பிடித்து ஒரு இந்திய தேசிய சாதனையை இவர் நிகழ்த்தினார். முன்னதாக பாட்டியாலாவில் நடைபெற்ற கூட்டமைப்புக் கோப்பை நடையோட்டப் போட்டியில் கலந்து கொண்டு 1:22:09 மணி நேரத்தில் நடந்து சாதனை படைத்திருந்தார். மார்ச்சு 2013 இல் சீனாவிலுள்ள தைகாங்கில் நடைபெற்ற அனைத்துலக தடகளக் கழகங்களின் கூட்டமைப்பு நடத்திய 20 கிலோமீட்டர் நடையோட்டப் போட்டியில் 5 ஆவது இடத்தைப் பிடித்தார்.

ஆங்கிலியன் பதக்க வேட்டை நிறுவனம் இவருக்கு முழு ஆதரவை அளித்தது

பிற சாதனைகள்[தொகு]

  • 2011-இல் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான முதுநிலை தேசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் 1:30:31 மணி நேரத்தில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • 2011- இல் நடைபெற்ற தேசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் 01:27:46 மணி நேரத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
  • 2011- இல் நடைபெற்ற கூட்டமைப்புக் கோப்பை முதுநிலை தடகள விளையாட்டுப் போட்டிகளில் 01:22:14 மணி நேரத்தில் நடந்து முடித்து தங்கப்பதக்கம் வென்றார். இந்நேரம், போட்டித் தொடரின் ஒரு புதிய சாதனையாகும்
  • 2011- இல் நடைபெற்ற அனைத்துலக நடையோட்டப் போட்டியில் 01:22:09 மணி நேரத்தில் நடந்து முடித்து 19 ஆவது இடம் பிடித்தார். இதன் மூலமாக 2012 ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.
  • மாசுகோவில் 2013- ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் பங்கேற்றார்[3].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இர்பான்_கொலோதம்_தோடி&oldid=2719063" இருந்து மீள்விக்கப்பட்டது