இர்பான் கொலோதம் தோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இர்பான் கொலொதம் தோடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இர்பான் கொலோதம் தோடி
Irfan Kolothum Thodi
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியன்
பிறந்த நாள்8 பெப்ரவரி 1990 (1990-02-08) (அகவை 34)
பிறந்த இடம்மலப்புறம், கேரளா, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)நடையோட்டம்

இர்பான் கொலோதம் தோடி (Irfan Kolothum Thodi) ஒர் இந்திய நடையோட்ட வீரராவார். கேரள [1] மாநிலத்தின் மலப்புறத்தைச் சேர்ந்த இவர் 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று பிறந்தார். 20 கிலோமீட்டர் நடையோட்டத்தில் போட்டியிடும் இவர், 2012 ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றார்[2].

இப்போட்டியில் 20 கிலோமீட்டர் தொலைவை 1:20:21 மணி நேரத்தில் நடந்து முடித்து, போட்டியில் பத்தாவது இடம் பிடித்து ஒரு இந்திய தேசிய சாதனையை இவர் நிகழ்த்தினார். முன்னதாக பாட்டியாலாவில் நடைபெற்ற கூட்டமைப்புக் கோப்பை நடையோட்டப் போட்டியில் கலந்து கொண்டு 1:22:09 மணி நேரத்தில் நடந்து சாதனை படைத்திருந்தார். மார்ச்சு 2013 இல் சீனாவிலுள்ள தைகாங்கில் நடைபெற்ற அனைத்துலக தடகளக் கழகங்களின் கூட்டமைப்பு நடத்திய 20 கிலோமீட்டர் நடையோட்டப் போட்டியில் 5 ஆவது இடத்தைப் பிடித்தார்.

ஆங்கிலியன் பதக்க வேட்டை நிறுவனம் இவருக்கு முழு ஆதரவை அளித்தது

பிற சாதனைகள்[தொகு]

  • 2011-இல் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான முதுநிலை தேசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் 1:30:31 மணி நேரத்தில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • 2011- இல் நடைபெற்ற தேசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் 01:27:46 மணி நேரத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
  • 2011- இல் நடைபெற்ற கூட்டமைப்புக் கோப்பை முதுநிலை தடகள விளையாட்டுப் போட்டிகளில் 01:22:14 மணி நேரத்தில் நடந்து முடித்து தங்கப்பதக்கம் வென்றார். இந்நேரம், போட்டித் தொடரின் ஒரு புதிய சாதனையாகும்
  • 2011- இல் நடைபெற்ற அனைத்துலக நடையோட்டப் போட்டியில் 01:22:09 மணி நேரத்தில் நடந்து முடித்து 19 ஆவது இடம் பிடித்தார். இதன் மூலமாக 2012 ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.
  • மாசுகோவில் 2013- ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் பங்கேற்றார்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Irfan qualifies for Olympics in 20km walk.He completed the walk by touching the finish line at 10th position". dailysports.co. Archived from the original on 29 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Khushbir fails after Irfan qualifies for Olympics in 20km walk". Times of India. Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2 July 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. Irfan, KT. "KT Irfan, World Athletics Championships, Moscow". NDTV Sports இம் மூலத்தில் இருந்து 14 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130814035243/http://sports.ndtv.com/othersports/athletics/212223-indians-disappoint-in-mens-20km-race-walk-in-athletics-worlds. பார்த்த நாள்: 11 August 2013. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இர்பான்_கொலோதம்_தோடி&oldid=3543927" இலிருந்து மீள்விக்கப்பட்டது