இரைப்பை புடைப்பு
இரைப்பை புடைப்பு Gastroschisis | |
---|---|
சிறப்பு | medical genetics |
இரைப்பை புடைப்பு (Gastroschisis) என்பது பிறக்கும் குழந்தையின் பிறவிக் குறைபாடாகும். குழந்தையின் தொப்புள் துளைக்கு அருகிலுள்ள துளை வழியாக இரையகக் குடற்பாதை வயிற்றுக்கு வெளியே நீண்டிருப்பதை இரைப்பை புடைப்புக் குறைபாடு என்றழைக்கிறார்கள் [1]. துளையின் அளவு குழந்தைக்கு குழந்தை மாறுபடுகிறது. வயிறு மற்றும் கல்லீரல் உள்ளிட்ட பிற உள்ளுறுப்புகளும் குழந்தையின் உடலுக்கு வெளியே புடைத்துத் தெரியவும் வாய்ப்புண்டு[2]. உணவளிக்கும் பிரச்சினைகள், குறைப்பிரசவம் குடல் அடைப்பு மற்றும் கருப்பையக வளர்ச்சியில் குறைபாடு உள்ளிட்டவை இதனால் உண்டாகும் சிக்கல்களில் அடங்கும் [2].
புடைப்பு நோய் தோன்றுவதற்கான காரணம் பொதுவாக தெரியவில்லை[3][2]. புகைபிடிக்கும், மது அருந்தும் அல்லது 20 வயதுக்கு குறைவான தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் இந்நோய் தோன்றும் விகிதங்கள் அதிகம் காணப்படுகின்றன[3][2]. கர்ப்ப காலத்தில் மீயொலிப்பட பரிசோதனையின் மூலம் இந்நோயை கண்டறியலாம்[2]. இல்லையெனில் குழந்தை பிறந்த பின்னர்தான் நோயை அறியமுடியும்[2]. மற்றொரு பிறவிக் குறைபாடான உந்திப்பிதுக்க நோயிலிருந்து இரைப்பை புடைப்பு நோய் வேறுபடுகிறது, இந்நோயில் நீண்டிருக்கும் இரைப்பைக்கு மேலாக மூடு சவ்வு ஏதும் இருப்பதில்லை[3].இரைப்பை புடைப்பு நோய்க்கான சிகிச்சை அறுவை சிகிச்சையை உள்ளடக்கியதாகும்[2]. இச்சிகிச்சை பொதுவாக குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது[2]. வயிறு மற்றும் கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகள் வெளியில் தெரியும் பெரிய குறைபாடுகள் உள்ளவர்களுக்கு வெளிப்படும் உறுப்புகளை ஒரு சிறப்புப் பொருளால் மூடி மெதுவாக மீண்டும் அடிவயிற்றுக்குள் நகர்த்தப்படும் சிகிச்சை அளிக்கப்படுகிறது[2]. இந்த குறைபாடு புதியதாகப் பிறக்கும் 10,000 குழந்தைகளில் நான்கு குழந்தைகளைப் பாதிக்கிறது[3]. ஆனால் தற்போது நோயின் தாக்குதல் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.[2]
அறிகுறிகள்
[தொகு]கர்ப்ப காலத்தில் எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை. இரைப்பை புடைப்பு உள்ள குழந்தைகளில் சுமார் அறுபது சதவீதம் குழந்தைகள் முன்கூட்டியே பிறக்கின்றன[4]:1141–1142 பிறக்கும்போது, குழந்தையின் வயிற்று சுவரில் பொதுவாக தொப்புளுக்கு வலதுபுறம் சுமார் 4 செ.மீ அளவில் இத்துளை காணப்படுகிறது.[5]. குடல்களின் சிறுபகுதி பொதுவாக உடலுக்கு வெளியே இத்திறப்பின் வழியாக வந்திருக்கும். அரிதான சூழ்நிலைகளில், கல்லீரல் மற்றும் வயிறு போன்றவை இவ்வயிற்று சுவர் திறப்பு வழியாக வரக்கூடும்[6]. பிறப்புக்குப் பிறகு இந்த உள் உறுப்புகள் நேரடியாக காற்றில் வெளிப்படும்[4].
காரணங்கள்
[தொகு]இரைப்பை புடைப்பு நோய்க்கான காரணங்கள் அறியப்படவில்லை. சில சந்தர்ப்பங்களில் மரபணு காரணங்கள் இதற்கான காரணங்களாக இருக்கலாம், மேலும் கர்ப்ப காலத்தில் தாய் வெளிப்படும் சுற்றுச்சூழல் காரணிகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்[7].
பெண்கள் இளமையில் குழந்தைப் பெற்றுக் கொள்வது, மது அல்லது புகையிலை பயன்படுத்துதல் போன்ற பழக்கங்களும் இதற்கான காரணங்களாக இருக்கலாம்[7]
உடல்கூறு நோயியல்
[தொகு]மனித கரு வளர்ச்சியின் நான்காவது வாரத்தில், கருவின் பக்கவாட்டு உடல் சுவர் மடிப்புகள் நடுப்பகுதியில் சந்தித்து ஒன்றிணைந்து முன்புற உடல் சுவரை உருவாக்குகின்றன. [8]. இரைப்பை புடைப்பு மற்றும் பிற முன்புற உடற்சுவர் குறைபாடு உள்ளவர்களில் ஒன்று அல்லது இரண்டு பக்கவாட்டு உடல் சுவர் மடிப்புகளும் ஒன்று மற்றொன்றைச் சந்திக்க சரியாக நகராமல் ஒன்றாக ஒன்றிணையாமல் உள்ளதால் முன்புற உடல்சுவர் ஏற்படாத நிலை தோன்றுகிறது[9] இந்த முழுமையற்ற இணைவு ஒரு குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இது வயிற்று உள் உறுப்புகள் வயிற்று சுவர் வழியாக வெளியேற அனுமதிக்கிறது. மேலும் மலக்குடல் அடிவயிற்று தசை வழியாக குடலிறக்கம் தொப்புளின் வலதுபுறத்தின் வழியாக வெளியே வருகின்றன..[8]. பக்கவாட்டு உடல் சுவர் மடிப்புகளின் இயக்கத்திற்கு காரணமான சக்திகள் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை, மேலும் இந்த சக்திகளைப் பற்றிய சிறந்த புரிதல் மட்டுமே தொப்புளின் வலதுபுறத்தில் இரைப்பை புடைப்பு ஏன் ஏற்படுகிறது என்பதை விளக்க உதவும்[8],
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gastroschisis". Genetic and Rare Diseases Information Center (GARD) (in ஆங்கிலம்). 2017. Archived from the original on 5 July 2017. பார்க்கப்பட்ட நாள் 14 July 2017.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 "Facts about Gastroschisis". National Center on Birth Defects and Developmental Disabilities Home | NCBDDD | CDC (in அமெரிக்க ஆங்கிலம்). 27 June 2017. Archived from the original on 18 July 2017. பார்க்கப்பட்ட நாள் 14 July 2017.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Reference, Genetics Home (August 2016). "Abdominal wall defect". Genetics Home Reference (in ஆங்கிலம்). Archived from the original on 10 July 2017. பார்க்கப்பட்ட நாள் 14 July 2017.
- ↑ 4.0 4.1 Conn's current therapy 2017. Bope, Edward T., Kellerman, Rick D. Philadelphia: Elsevier. 2017. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323443203. இணையக் கணினி நூலக மைய எண் 961064076.
{{cite book}}
: CS1 maint: others (link) - ↑ Sadler, Thomas W. (August 2010). "The embryologic origin of ventral body wall defects". Seminars in Pediatric Surgery 19 (3): 209–214. doi:10.1053/j.sempedsurg.2010.03.006. பன்னாட்டுத் தர தொடர் எண்:1532-9453. பப்மெட்:20610194.
- ↑ W., Bianchi, Diana (2000). Fetology: diagnosis & management of the fetal patient. Bianchi, Diana W., Crombleholme, Timothy M., D'Alton, Mary E. New York: McGraw-Hill, Medical Pub. Division. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0838525709. இணையக் கணினி நூலக மைய எண் 44524363.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ 7.0 7.1 "Facts about Gastroschisis". CDC. June 27, 2017. Archived from the original on July 18, 2017.
- ↑ 8.0 8.1 8.2 Sadler, T. W.; Feldkamp, Marcia L. (2008-08-15). "The embryology of body wall closure: relevance to gastroschisis and other ventral body wall defects". American Journal of Medical Genetics Part C: Seminars in Medical Genetics 148C (3): 180–185. doi:10.1002/ajmg.c.30176. பன்னாட்டுத் தர தொடர் எண்:1552-4876. பப்மெட்:18655098.
- ↑ Feldkamp, Marcia L.; Carey, John C.; Sadler, Thomas W. (2007). "Development of gastroschisis: Review of hypotheses, a novel hypothesis, and implications for research". American Journal of Medical Genetics Part A 143A (7): 639–652. doi:10.1002/ajmg.a.31578. பப்மெட்:17230493.