இரேனியம் பெண்டாகுளோரைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
இரேனியம் பெண்டாகுளோரைடு
| |
| வேறு பெயர்கள்
இரேனியம்(V) குளோரைடு, இரேனியம் குளோரைடு, பெண்டாகுளோரோ இரேனியம்
| |
| இனங்காட்டிகள் | |
| 13596-35-5 | |
| ChemSpider | 75428 |
| EC number | 237-042-6 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 83602 |
| பண்புகள் | |
| ReCl5 | |
| வாய்ப்பாட்டு எடை | 363.471 கி/மோல் |
| தோற்றம் | செம்-பழுப்பு |
| அடர்த்தி | 4.9 கி/செ.மீ3, திண்மம் |
| உருகுநிலை | 220 °C (428 °F; 493 K) |
| கொதிநிலை | கிடைக்கவில்லை |
| வினையில் ஈடுபட்டு சிதைவடையும் HCl (வாயு) வெளிப்படும் | |
| +1225.0·10−6 செ.மீ3/மோல் | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு, mP48; a = 0.924 நானோமீட்டர், b = 1.154 நானோமீட்டர், c = 1.203 நானோமீட்டர், α = 90°, β = 109.1°, γ = 90° [1] |
| புறவெளித் தொகுதி | P21/c, எண். 14 |
| மூலக்கூறு வடிவம் | |
| தீங்குகள் | |
| முதன்மையான தீநிகழ்தகவுகள் | நீராற்பகுப்படைந்து HCl வாயுவை வெளியிடும் |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS |
| GHS pictograms | |
| GHS signal word | எச்சரிக்கை |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | இரேனியம் பெண்டாபுளோரைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | ஓசுமியம்(V) குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரேனியம் பெண்டாகுளோரைடு (Rhenium pentachloride) என்பது Re2Cl10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செம்பழுப்பு நிறத்தில் திண்மமாகக் கானப்படுகிறது.[3] பாரா காந்தப் பண்பை வெளிப்படுத்துகிறது.[4]
கட்டமைப்பு
[தொகு]இரேனியம் பெண்டாகுளோரைடு ஓர் எண்முகக் கட்டமைப்பைக் கொண்டதாகும். Cl4Re(μ-Cl)2ReCl4 என்ற வாய்ப்பாட்டால் இதை விவரிக்கலாம். இந்த வாய்ப்பாட்டிலுள்ள (μ-Cl)2 பகுதி இரண்டு குளோரைடு ஈந்தணைவிகள் பாலம் அமைக்கும் ஈந்தணைவிகள் என்பதைக் குறிக்கிறது. அதாவது இவை இரண்டு Re அணுக்களுடன் இணைகின்றன. Re-Re பிணைப்பு தூரம் 3.74 Å ஆகும்.[1] தான்டலம் பெண்டாகுளோரைடுக்குக் காணப்படுவதைப் போன்ற மையக்கருவைக் கொண்டுள்ளது.
தயாரிப்பு
[தொகு]இரேனியம் கண்டுபிடிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு இரேனியம் பெண்டாகுளோரைடு சேர்மம் முதன்முதலில் 1933 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.[5] இந்த தயாரிப்பில் 900 °செல்சியசு வெப்பநிலை வரை வெப்பநிலையில் இரேனியத்தை குளோரினேற்றம் செய்வதும் அடங்கும்.[3] பதங்கமாதல் மூலம் இச்சேர்மத்தை சுத்திகரிக்க முடியும்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Mucker, K. F.; Smith, G. S.; Johnson, Q. (1968). "The crystal structure of ReCl5". Acta Crystallographica Section B 24 (6): 874. doi:10.1107/S0567740868003316. Bibcode: 1968AcCrB..24..874M. http://journals.iucr.org/b/issues/1968/06/00/a06172/a06172.pdf.
- ↑ GHS: PubChem 83602
- ↑ 3.0 3.1 Roger Lincoln, Geoffrey Wilkinson "Rhenium Pentachloride and Volatile Metal Chlorides by Direct Chlorination Using a Vertical-Tube Reactor" Inorganic Syntheses, 1980, Volume 20, Pages 41–43. எஆசு:10.1002/9780470132517.ch11.
- ↑ Shaik, Sason; Hoffmann, Roald; Fisel, C. Richard; Summerville, Richard H. (1980). "Bridged and Unbridged M2L10 Complexes". Journal of the American Chemical Society 102 (14): 4555–4572. doi:10.1021/ja00534a001.
- ↑ Geilmann, Wilhelm; Wrigge, Friedrich W.; Biltz, Wilhelm. (1933). "Rheniumpentachlorid" (in German). Z. Anorg. Allg. Chem. 214 (3): 244. doi:10.1002/zaac.19332140304.