இரேச்சல் மாந்தெல்பாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரேச்சல் மாந்தெல்பாம் (Rachel Mandelbaum) கார்னிகி மெல்லான் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியர் அவார். இவர் அண்டவியலிலும் பால்வெளிகளின் படிமலர்ச்சியிலும் கரும்பொருண்மம், கருப்பு ஆற்றல் முன்வைத்து பால்வெளிகளின் ஈர்ப்பு வில்லையாக்க நிகழ்வைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்கிறார். இவர் வில்லையாக்க அளபுருக்களின் மேம்பாட்டில் கணிசமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

கல்வி[தொகு]

இவர் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் இருந்து இயற்பியலில் உயர்தகவுடன் 2000 இல் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். இவர் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் இருந்து இயற்பியலில் உயர்தகவுடன் 2006 இல் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[1] இவர் இப்போது கார்னிகி மெல்லான் பல்கலைக்கழகத்தில்ஐயற்பியல் துறையில் உதவிப் பேரசிரியராக உள்ளார்.[2]

ஆராய்ச்சி[தொகு]

இவர் ஈர்ப்பு வில்லையாக்க நுட்பத்தைப் பயன்படுத்தி அண்டவியல் ஆய்வு செய்கிறார். இவர் 2011 இல் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[3]

விருதுகள்[தொகு]

இவர் ஆல்பிஎர்டு பி. சுலோவான் அய்வுநல்கை (2013), ஆற்றல் துறையின் தொடக்கநிலை வாழ்க்கைப் பணி விருது (2012) உட்பட, பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[4] இவர் 2011 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]