உள்ளடக்கத்துக்குச் செல்

இரேச்சல் கோரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேச்சல் கோரீ
Rachel Corrie
பிறப்புஇரேச்சல் அல்லியென் கோரீ
Rachel Aliene Corrie

(1979-04-10)ஏப்ரல் 10, 1979
ஒலிம்பியா, வாசிங்டன், ஐக்கிய அமெரிக்கா
இறப்புமார்ச்சு 16, 2003(2003-03-16) (அகவை 23)
இரஃபா, காசாப் பகுதி
இறப்பிற்கான
காரணம்
இசுரேலிய இடிப்புந்தின் (புல்டோசர்) கீழ் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
தேசியம்அமெரிக்கா
அறியப்படுவதுஅனைத்துலக ஒற்றுமை இயக்கம் (International Solidarity Movement) செயற்பாடு
சொந்த ஊர்ஒலிம்பியா, வாசிங்டன், ஐக்கிய அமெரிக்கா
பெற்றோர்கிரேய்கு (Craig), சிண்டி (Cindy)

இரேச்சல் கோரீ (Rachel Corrie) (ஏப்பிரல் 10, 1979 – மார்ச்சு 16, 2003) ஓர் அமெரிக்க அமைதிக்காக உரிமைப்போராட்டம் நடத்திய ஆர்வலர்[1]; இவர் அனைத்துலக ஒற்றுமை இயக்கம் (International Solidarity Movement) என்னும் அமைதிசார் நிறுவனத்தின் உறுப்பினராகவும் இருந்தார். அமெரிக்காவின் வடமேற்கே அமைந்த வாசிங்டன் மாநிலத்தில் உள்ள ஒலிம்பியா என்னும் ஊரில் பிறந்த இவர் இசுரேலில் காசா நிலப்பகுதியில் இசுரேலியப் தற்காப்புப் படையினர் பாலத்தீன மக்களின் வீடுகளை இடித்துத்தள்ளும் நடவடிக்கையை எதிர்க்கும் முகமாக அங்கிருந்த அனைத்துலக ஒற்றுமை இயக்கத்தினருடன் சேர்ந்து இயங்கிய பொழுது, அங்கே இடித்துத் தள்ளிக்கொண்டிருந்த அரண்காப்பு இடிப்புந்தின் கீழ் நசுக்கப்பட்டு இறந்தார். அப்பொழுது இவருக்கு அகவை 23. இவர் இடிப்புந்தின் கீழ் நசுக்கப்பட்டு இறந்ததை ஓர் தன்னேர்ச்சி (எதிர்பாரத நேர்ச்சி) என்று இசுரேலிய அறமன்ற நடுவர்கள் தீர்ப்பளித்தனர்)[2]. அண்மையில் கோரீயின் குடும்பத்துக்கு இழப்பீடு தரவும் இசுரேல் நடுவர்கள் மறுத்துள்ளனர்[3]

மேலும் படிக்க

[தொகு]

அடிக்குறிப்புகளும் மேற்கோளும்

[தொகு]
  1. "Profile: Rachel Corrie". BBC News. August 28, 2012. http://www.bbc.co.uk/news/world-middle-east-19395651. பார்த்த நாள்: September 13, 2012. 
  2. Harriet Sherwood (August 28, 2012). "Rachel Corrie's death was an accident, Israeli judge rules". The Guardian. http://www.guardian.co.uk/world/2012/aug/28/rachel-corrie-verdict-accident-judge. பார்த்த நாள்: September 8, 2012. 
  3. "Court dismisses damages claim in Rachel Corrie case". The Times of Israel. August 28, 2012. http://www.timesofisrael.com/rachel-corries-death-ruled-accidental-by-haifa-high-court/. பார்த்த நாள்: September 16, 2012. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேச்சல்_கோரீ&oldid=3593481" இலிருந்து மீள்விக்கப்பட்டது