உள்ளடக்கத்துக்குச் செல்

இரெ. இளம்வழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரெ. இளம்வழுதி
Ere. Elamvazhuthi
பிறப்புஇரெ. தண்டபாணி
5 செப்டம்பர் 1925
சங்கிலிகுப்பம்,
தென் ஆற்காடு மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு22 அக்டோபர் 1970(1970-10-22) (அகவை 45)
கடலூர், தமிழ்நாடு, இந்தியா
பணிஅரசியலர்
வாழ்க்கைத்
துணை
விசாலாட்சி
அண்ணப்பூரணி
பிள்ளைகள்மேகலா
புகழேந்தி
உதயராணி
கலையரசி
மாலதி
பன்னீர்செல்வம்
உறவினர்கள்வெற்றிமாறன்
(மகள்வழிப் பேரன்)

இரெ. இளம்வழுதி (Ere. Elamvazhuthi) (பிறப்பு: 5 செப்டம்பர் 1925) என்பவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார்.

தொடக்க வாழ்க்கை[தொகு]

கடலூருக்கு அருகிலுள்ள சங்கிலிகுப்பம் என்ற சிற்றூரில் இரெங்கசாமி மற்றும் செளந்தரம் இணையரின் மகனாகப் பிறந்தார்.

கல்வி[தொகு]

இவர் தனது பள்ளிப்படிப்பை கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் (ஒரு பள்ளிக்கூடம் என்றாலும், கல்லூரி என்று அழைக்கப்பட்டது) கற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

தொழில்[தொகு]

தமிழ், ஆங்கில மொழிகளில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருந்தார்.

அரசியல்[தொகு]

இளம்வழுதி 1967 முதல் 1970 வரை தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் கடலூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வெற்றிபெற்றவர்.[1] பெரியார் ஈ.வி.ராமசாமி மற்றும் கா. நா. அண்ணாதுரை ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார். திராவிடக் கொள்கையில் கொண்டிருந்த இடைவிடாத நம்பிக்கையும் ஆதரவும் காரணமாகத் தனது பெற்றோர் வைத்த தண்டபாணி என்ற பெயரினை இளம்வழுதி என மாற்றிக்கொண்டார்.

தனி வாழ்க்கை[தொகு]

இவர் விசாலாட்சியை மணந்தார். விசாலாட்சி ஒரு விபத்தில் மரணமடைந்ததையடுத்து அன்னபூரணி என்பவரை மணந்தார்.

தமிழ்ப் பற்றின் காரணமாக தன் குழந்தைகளுக்கு மேகலா, புகழேந்தி, உதயராணி, கலையரசி, மாலதி மற்றும் பன்னீர் செல்வம் என தனித் தமிழில் பெயரிட்டார்.

மறைவு[தொகு]

இளம்வழுதி 22 அக்டோபர் 1970 அன்று மாரடைப்பால் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெ._இளம்வழுதி&oldid=3917810" இலிருந்து மீள்விக்கப்பட்டது