இரு பெண்கள் (பண்டைய எகிப்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கழுத்து அணிகலன் பதக்கத்தில் அரியணையில் அமர்ந்திருக்கும் போர்க் கடவுள் செக்மெத் சிலைக்கு (நடுவில்) பெண் கடவுளர்களான பாம்பு உருவத்துடன் கூடிய வத்செத் மற்றும் கழுகு உருவத்துடன் கூடிய நெக்பெத் பூஜை சடங்குகள் நடத்தும் காட்சி, ஆண்டு கிமு 870

இரு பெண்கள் , மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்துக்கான பெண் காவல் தெய்வங்களான நெக்பெத் மற்றும் வத்செத்ஐ குறிக்கும்.[1] முதல் வம்சத்தை (கிமு 3100) நிறுவிய மன்னர் நார்மெர் காலத்தில் தெற்கு எகிப்து மற்றும் வடக்கு எகிப்தை ஒன்றிணைத்து ஆட்சி செய்தார். அது முதல் இவ்விரு பெண் தெய்வங்களை பண்டைய எகிப்தின் காவல் தெய்வங்களாக பண்டைய எகிப்திய அரசமரபினரும், மக்களும் தொடர்ந்து வழிபட்டனர்.

இவ்விரு பெண் தெய்வங்களின் உருவங்கள் மற்றும் சிலைகள் ஒன்றாக நிறுவி வழிபட்டனர். இவ்விரு பெண் தெய்வங்கள் பண்டைய எகிப்தில் சட்டங்களின் மாட்சிமைக்கும், ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்கும், நாட்டின் அமைதிக்கும் பொறுப்பானர்கள்.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Wilkinson, Toby A. H. (1999). Early Dynastic Egypt. Routledge. பக். 292. 

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vulture and cobra (hieroglyphs)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.