இரு கணங்களின் வித்தியாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டு கணங்களின் வித்தியாசம் (Difference of Two Sets) அல்லது சார் நிரப்பி (Relative Compliment) என்பது A மற்றும் B என்ற வெற்றற்ற கணங்களில், A இல் உள்ள ஆனால் B அல்லாத அனைத்து உறுப்புகளின் தொகுப்பு ஆகும். இரண்டு கணங்களின் வித்தியாசம் என்பது A - B அல்லது A \ B ஆல் குறிக்கப்படும்.

குறியீட்டில் படித்தல்[தொகு]

குறியீட்டில்,

  • A - B = {x : x Є A and x € B}
  • B - A = {x : x Є B and x € A}

இங்கு "Є" என்பது ” இல் உள்ளது” (belongs to) என்ற பொருளிலும் "€" என்பது ”இல் இல்லை” என்ற பொருளிலும் அமைந்துள்ளது.

எடுத்துக்காட்டு[தொகு]

A = {2, 3, 5, 7, 11} மற்றும் B = {5, 7, 9, 11, 13} எனில், A - B = {2, 3}

பண்புகள்[தொகு]

  1. A - B = B - A
  2. A - B = B - A iff A = B
  3. U - A = A'
  4. U - A' = A [1]

இங்கு "U" என்பது அனைத்து கணம் என்ற பொருளிலும் A' என்பது A இன் நிரப்பு கணம் என்ற பொருளிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dr.A.Chandrasekaran (2011). காப்பகப்படுத்தப்பட்ட நகல். Chennai: Tamilnadu textbook corporation. பக். 22 இம் மூலத்தில் இருந்து 2017-07-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170712125718/http://www.textbooksonline.tn.nic.in/Books/Std09/Std09-I-Maths-EM.pdf. பார்த்த நாள்: 2017-07-07. 

இதனையும் காண்க[தொகு]