உள்ளடக்கத்துக்குச் செல்

இருவாழ்வியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல நச்சு அம்புத் தவளை

இருவாழ்வியியல் (herpetology) என்பது, "ஊர்வன" அல்லது "ஊர்ந்து செல்லும் விலங்கு இயல்" என்று பொருள்படும், விலங்கியல் துறையின் ஒரு கிளை ஆகும், இது நீர்நிலவாழ் உயிரினங்களைப் (தவளைகள், சாலமண்டர்கள் மற்றும் சீசிலியர்கள் (Gymnophiona) மற்றும் ஊர்வன (பாம்புகள், பல்லிகள், ஆமைகள், முதலைகள் மற்றும் துவடாராஸ் உட்பட) பற்றிய ஆய்வுகளை உள்ளடக்கியது ஆகும்.[1][2] ஊர்வனவற்றில் உட்படுத்தப்பட்ட பறவைகள் இவ்வியலில் சேர்க்கப்படவில்லை. பறவைகள் பற்றிய தனி அறிவியல் ஆய்வு பறவையியல் எனப்படும். [3]

இருவாழ்வியியல் என்பதன் துல்லியமான வரையறையானது நான்கு கால்களுடைய குளிர்-இரத்த முதுகெலும்பி உயிரினங்கள் பற்றிய ஆய்வு என்பதாகும். "ஹெர்பிஸ்" என்பதன் இந்த வரையறையில் ( "ஹெர்ப்டைல்ஸ்" அல்லது "ஹெர்பெடோஃபானா" என்று அழைக்கப்படுகிறது) மீன் இனங்கள் சேர்க்கப்படவில்லை, இருப்பினும், இருவாழ்வியியல் மற்றும் மீன் இயல் சார்ந்த அறிவியல் சங்கங்கள் ஒத்திசைவு கொண்டு இயங்குவதை பொதுவாக காணலாம். உதாரணமாக, அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் இக்தியாலஜிஸ்ட்ஸ் மற்றும் ஹெர்பெடாலஜிஸ்ட்ஸ் போன்ற குழுக்கள் பத்திரிகைகளை இணைந்து வெளியிட்டுள்ளன மற்றும் தத்தம் துறைகளுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றத்தை வளர்ப்பதற்காக மாநாடுகளை நடத்தியுள்ளன.[4] (வீடுகள், பண்ணைகள், காட்சிச்சாலைகள் மற்றும் ஆய்வகங்களில்) வளர்க்கப்படும் மற்றும் காட்டில் வாழும் ஊர்வன மற்றும் நீர்நிலவாழ் உயிரினங்களில் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக இருவாழ்வியியல் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய சூழலியலில் நீர்நிலவாழ் உயிரினங்கள் மற்றும் ஊர்வனவற்றின் பங்கு குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதன் மூலம் பிற துறைகளுக்கு பொருத்தமான நன்மைகளை இருவாழ்வியியல் ஆய்வுகள் வழங்க முடியும். எடுத்துக்காட்டாக, சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு மிகவும் உணர்திறன் கொண்ட நீர்நிலவாழ் உயிரினங்களைக் கண்காணிப்பதன் மூலம், குறிப்பிடத்தக்க காலநிலை மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பதைக் காணக்கூடிய எச்சரிக்கைகளை இருவாழ்வியலாளர்கள் பதிவு செய்கிறார்கள்.[5][6] ஆபத்தானவையாக இருந்தாலும், ஊர்வன மற்றும் நீர்வாழ் உயிரினங்களால் உற்பத்தி செய்யப்படும் சில நச்சுகள் மற்றும் விஷங்கள் மனிதர்களுக்கான மருத்துவத்தில் பயனுள்ளதாக இருக்கின்றன. தற்போது, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு சிகிச்சையளிக்க உதவும் மருந்துகளை உருவாக்க சில பாம்புகளின் விஷம் பயன்படுத்தப்படுகிறது.[7]

பெயரிடுதல் மற்றும் சொற்பிறப்பியல்

[தொகு]

herpetology என்ற சொல் கிரேக்க மொழியில் இருந்து வந்தது. ஹெர்பெடன் - "ஊர்ந்து செல்லும் விலங்கு" மற்றும் -λογία,- லாஜியா (logia), "அறிவு".[8]

"ஹெர்ப்" என்பது ஏவியன் அல்லாத ஊர்வன மற்றும் நீர்நிலவாழ் உயிரினங்களுக்கான ஒரு வட்டாரச் சொல். இது பழங்காலச் சொல்லான "ஹெர்பெடைல்" என்பதிலிருந்து பெறப்பட்டது, இதன் வேர்கள் லின்னேயஸின் விலங்குகளின் வகைப்பாட்டிலிருந்து பெறப்பட்டது. இதில் அவர் ஊர்வன மற்றும் நீர்நிலவாழ் உயிரினங்களை ஒரே வகுப்பில் தொகுத்தார். 6700 க்கும் மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்களும் 9000 க்கும் மேற்பட்ட ஊர்வன இனங்களும் உள்ளன.[9][10] நவீன வகைபிரித்தல் நோக்கில் பொருத்தமற்றதாக இருந்தபோதிலும், குறிப்பாக ஹெர்பெடாலஜி, ஏவியன் அல்லாத ஊர்வன மற்றும் நீர்நிலவாழ் உயிரினங்கள் பற்றிய அறிவியல் ஆய்வு மற்றும் ஹெர்பெடோகல்ச்சர், ஊர்வன மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் பராமரிப்பு மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றில் இந்த சொல் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது.

துணைத் துறைகள்

[தொகு]

இருவாழ்வியியல் துறையை தவளைகள் மற்றும் பிற நீர்நிலவாழ் உயிரினங்கள் (Patrachology) பாம்புகள் (ophiology or opidiology) பல்லிகள் (sauroology) மற்றும் ஆமைகள் (cheloniology, chelonology, அல்லது testudinology) போன்ற குறிப்பிட்ட வகைப்பாட்டு குழுக்களைக் கையாளும் பகுதிகளாகப் பிரிக்கலாம்.[11][12][13][14]

பொதுவாக, இருவாழ்வியியலாளர்கள் சூழலியல், பரிணாமம், உடலியல், நடத்தை, வகைபிரித்தல் அல்லது நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் ஊர்வனவற்றின் மூலக்கூறு உயிரியலில் செயல்பாட்டு சிக்கல்களில் ஆய்வுகளை செய்கிறார்கள். ஈரநில சூழலியலில் தவளைகளின் பங்கு போன்ற குறிப்பிட்ட கேள்விகளுக்கு நீர்நிலவாழ் உயிரினங்கள் அல்லது ஊர்வன போன்றவை மாதிரி உயிரிகளாக பயன்படுத்தப்படலாம். இந்த பகுதிகள் அனைத்தும் அவற்றின் பரிணாம வரலாற்றின் ஊடாகத் தொடர்புடையவை, இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உயிர்ப்புத்தன்மையின் பரிணாமம் (நடத்தை மற்றும் இனப்பெருக்கம் உட்பட). என்பதை கொள்ளலாம்[15]

தொழில் வாய்ப்புகள்

[தொகு]

ஆய்வக ஆராய்ச்சி, கள ஆய்வுகள் மற்றும் அளக்கை (அல்லது) கணக்கெடுப்பு ஆய்வுகள், கால்நடை மற்றும் மருத்துவ நடைமுறைகளில் உதவி, விலங்கியல் ஊழியர்கள், அருங்காட்சியக ஊழியர்கள் மற்றும் கல்லூரி கற்பித்தல் ஆகியவை இருவாழ்வியியல் துறையில் தொழில் விருப்பங்களில் அடங்கும்.[16]

நவீன கல்வி அறிவியலில், ஒரு தனிநபர் தங்களை ஒரு இருவாழ்வியியலாளராக மட்டுமே கருதுவது அரிது. பெரும்பாலான ஆய்வாளர்கள் சூழலியல், பரிணாமம், வகைபிரித்தல், உடலியல் அல்லது மூலக்கூறு உயிரியல் போன்ற ஒரு குறிப்பிட்ட துறையில் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் அந்த துறையில் ஊர்வன மற்றும் நீர்நிலவாழ் உயிரினங்களைப் பற்றி புதிய ஆய்வுகளைச் செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு பரிணாம உயிரியலாளர், இயங்கிவரும் ஒரு இருவாழ்வியியலாளர், பவள பாம்புகளில் எச்சரிக்கை நிறமாற்றத்தின் பரிணாமம் என்பது போன்ற ஒரு கருத்தினை தனது ஆய்வுக்காகத் தேர்வு செய்யலாம்.[17]

நவீன இருவாழ்வியியல் எழுத்தாளர்களில் மார்க் ஓ 'ஷியா மற்றும் பிலிப் பர்சர் ஆகியோரும்.[18] நவீன இருவாழ்வியியல் விலங்கு காட்சி நிபுணர்களில் ஜெஃப் கோர்வின், ஸ்டீவ் இர்வின் (பொதுவாக "முதலை வேட்டைக்காரன்" என்று அழைக்கப்படுபவர்) மற்றும் (ஆஸ்டின் ஸ்டீவன்ஸ் : ஸ்னேக் மாஸ்டர் என்ற தொலைக்காட்சி தொடரில் "ஆஸ்டின் ஸ்னேக்மேன்" என்று பிரபலமாக அறியப்பட்ட) ஆஸ்டின் ஸ்டீவன்ஸ் ஆகியோரும் அடங்குவர்.

இருவாழ்வியியல் என்பது உலகெங்கிலும் ஒரு நிறுவப்பட்ட பொழுதுபோக்காகும். பல இருவாழ்வியியல் ஆர்வலர்கள் தங்களை "ஹெர்பர்ஸ்" என்று அழைத்துக்கொள்கிறார்கள்.[19]

படிப்பு

[தொகு]

பெரும்பாலான கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் இளங்கலை அல்லது முதுகலை மட்டத்தில் இருவாழ்வியியல் துறையில் படிப்புகளை வழங்குவதில்லை. அதற்கு பதிலாக, இருவாழ்வியியலில் ஆர்வமுள்ள நபர்கள் உயிரியல் துறையை தேர்ந்தெடுக்கிறார்கள். விலங்குகளின் உயிரியல் துறையில் பெறப்பட்ட அறிவு பின்னர் இருவாழ்வியியல் பற்றிய தனிப்பட்ட ஆய்வுக்கு உதவுகிறது.[20]

இருவாழ்வியியல் பற்றியஆராய்ச்சி கட்டுரைகள் 1913 இல் நிறுவப்பட்ட இக்தியாலஜி & ஹெர்பெடோலஜி உள்ளிட்ட கல்வி இதழ்களில் வெளியிடப்பட்டது (1936 இல் நிறுவப்பட்ட ஹெர்பெடலோஜிக்கா எட்வர்ட் டிரிங்கர் கோப் ன் நினைவாக கோபியா என்ற பெயரில்) 1990 இல் நிறுவப்பட்ட ஊர்வன மற்றும் நீர்நிலவாழ் உயிரினங்கள் மற்றும் 1997 இல் நிறுவப்பட்ட சமகால ஹெர்பெட்டாலஜி 2009 இல் வெளியிடுவதை நிறுத்தியது.[21][22][23][24]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Herpetology - Reptiles, Amphibians, Conservation - Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). Retrieved 2023-11-24.
  2. "Herpetology - Latest research and news - Nature". www.nature.com. Retrieved 2023-11-24.
  3. "Ornithology - Bird Identification, Behavior & Conservation - Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). Retrieved 2023-09-06.
  4. "Recent Meetings". American Society of Ichthyologists and Herptetologists (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-09-06.
  5. "Why are amphibian populations declining? - U.S. Geological Survey". www.usgs.gov. Retrieved 2023-09-06.
  6. "Amphibians as indicators of environmental health". Amphibian Ark (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-09-27.
  7. "How venoms are shaping medical advances - BBC Earth". www.bbcearth.com (in ஆங்கிலம்). Retrieved 2023-09-06.
  8. "herpetology | Etymology of herpetology by etymonline". www.etymonline.com (in ஆங்கிலம்). Retrieved 2024-03-05.
  9. "AmphibiaWeb". AmphibiaWeb. Retrieved 2012-08-13.
  10. "Species Statistics February 2012". Reptile-database.org. Retrieved 2012-08-13.
  11. D.C. Wareham (2005). Elsevier's Dictionary of Herpetological and Related Terminology. Elsevier. ISBN 978-0-08-046017-8.
  12. Francesco M. Angelici (2015). Problematic Wildlife: A Cross-Disciplinary Approach. Springer. pp. 584–585. ISBN 978-3-319-22246-2.
  13. Rhodin, Anders G. J. (2 August 2017). "Turtles of the World: Annotated Checklist and Atlas of Taxonomy, Synonymy, Distribution, and Conservation Status (8th Ed.)". Chelonian Research Foundation and Turtle Conservancy. https://www.academia.edu/53519041. 
  14. Inger, Robert F. (1992). "A Bimodal Feeding System in a Stream-Dwelling Larva of Rhacophorus from Borneo". Copeia 1992 (3): 887–890. doi:10.2307/1446167. பன்னாட்டுத் தர தொடர் எண்:0045-8511. https://www.jstor.org/stable/1446167. 
  15. Blackburn, Daniel G. (December 2006). "Squamate Reptiles as Model Organisms for the Evolution of Viviparity". Herpetological Monographs 20 (1): 131–146. doi:10.1655/0733-1347(2007)20[131:SRAMOF]2.0.CO;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0733-1347. 
  16. "Herpetologist Job Description [Updated for 2023]". www.indeed.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-09-06.
  17. Rojas, Bibiana; Valkonen, Janne; Nokelainen, Ossi (2015-05-04). "Aposematism" (in en). Current Biology 25 (9): R350–R351. doi:10.1016/j.cub.2015.02.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:0960-9822. பப்மெட்:25942542. Bibcode: 2015CBio...25.R350R. 
  18. "Mark O'Shea - The Official Website". www.markoshea.info. Retrieved 2023-09-06.
  19. jlp342 (2020-04-21). "What the Heck is Herping?". cwhl.vet.cornell.edu (in ஆங்கிலம்). Retrieved 2023-09-05.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  20. "How to Become a Herpetologist - EnvironmentalScience.org". www.environmentalscience.org. Retrieved 2023-11-16.
  21. "Ichthyology & Herpetology". Ichthyology & Herpetology (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-09-06.
  22. "Herpetologica on JSTOR". www.jstor.org (in ஆங்கிலம்). Retrieved 2023-11-16.
  23. "About the Journal - Reptiles & Amphibians". journals.ku.edu. Retrieved 2023-09-06.
  24. "Contemporary Herpetology". journals.ku.edu. Retrieved 2023-09-06.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருவாழ்வியியல்&oldid=4200980" இலிருந்து மீள்விக்கப்பட்டது