இரும்பு ஐதரைடு

இரும்பு ஐதரைடு (Iron hydride) என்பது இரும்பும் ஐதரசனும் ஏதோ ஒரு தொடர்புடைய வடிவத்தில் சேர்ந்து உருவாகும் வேதியியல் அமைப்பாகும். FeH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது விவரிக்கப்படுகிறது.[1][2]
பிரபஞ்சத்தில் இந்த இரண்டு தனிமங்களும் பொதுவாகக் காணப்படுவதால், ஐதரசன் மற்றும் இரும்பின் சாத்தியமான சேர்மங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. நட்சத்திர வளிமண்டலங்கள் போன்ற சூழல்களில் அல்லது மிகக் குறைந்த வெப்பநிலையில் சிறிய அளவில் ஒரு சில மூலக்கூற்று சேர்மங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டு தனிமங்களும் 35,000 நிலையான வளிமண்டலங்களுக்கு (3.5 கிகா பாசுக்கல்) அளவுக்கு மேலான அழுத்தத்தில் ஓர் உலோகக் கலவையை உருவாக்குகின்றன. இது பூமியின் "இரும்பு" உள்ளகத்தின் குறைந்த அடர்த்திக்கான சாத்தியமான விளக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.[2][3] இருப்பினும், அந்த சேர்மங்கள் சுற்றுப்புற நிலைமைகளுக்கு கொண்டு வரப்படும்போது நிலையற்றவையாக உள்ளன. இறுதியில் தனித்தனி தனிமங்களாக சிதைவடைகின்றன.
எடையில் சுமார் 0.08% வரையிலான சிறிய அளவிலான ஐதரசன் இரும்பு அதன் உருகிய நிலையில் இருந்து திணமமாக்கப்படும்போது இரும்புடன் உறிஞ்சப்படுகிறது.[4] H2 என்பது வெறுமனே தூய்மையற்றது என்றாலும், இதன் இருப்பு பொருளின் இயந்திர பண்புகளை பாதிக்கும்.
இருபடி இரும்பு ஐதரைடுகள் விரைவாகக் கடந்து செல்லும் தன்மை கொண்டவை என்றாலும், இரும்பு-பிணைப்பு ஐதரசன்கள் (மற்றும் பிற தனிமங்கள்) கொண்ட பல நிலையான அணைவுச் சேர்மங்கள் உள்ளன.[5][6]
மீள்பார்வை
[தொகு]திண்மக் கரைசல்கள்
[தொகு]இரும்பு மற்றும் இரும்பு சார்ந்த உலோகக் கலவைகளும் ஐதரசனுடன் சேர்ந்து திண்மக் கரைசல்களை உருவாக்க முடியும். இவை தீவிர அழுத்தத்தின் கீழ் விகிதவியலுக்கு உகந்த விகிதாச்சாரத்தை அடையலாம். அதிக வெப்பநிலையில் கூட இவை நிலையாக இருக்கும். மற்றும் 150கெல்வின் வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில் சுற்றுப்புற அழுத்தத்தின் கீழ் சிறிது காலம் நிலைத்திருக்கும்.[7]
இருதனிமச் சேர்மங்கள்
[தொகு]மூலக்கூற்றுச் சேர்மங்கள்
[தொகு]- ஐதரிடோ இரும்பு (FeH) - இந்த மூலக்கூறு சூரியனின் வளிமண்டலத்திலும் சில சிவப்பு குள்ள நட்சத்திரங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. இரும்பின் கொதிநிலைக்கு மேலே ஒரு வாயுவாகவோ அல்லது 30 கெல்வின் வெப்பநிலைக்குக் குறைவான உறைந்த மந்த வாயுக்களில் தடயங்களாகவோ மட்டுமே நிலையாக இருக்கும். அங்கு இது FeH·H2 போன்ற மூலக்கூறு ஐதரசனுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களை உருவாக்கலாம்.[8]
- ஈரைதரிடோ இரும்பு (FeH2) - இந்தச் சேர்மம் அரிதான வாயுக்களில் அல்லது 30 கெல்வின் (−243 °செல்சியசு) வெப்பநிலைக்கும் குறைவான உறைந்த வாயுக்களில் மட்டுமே பெறப்பட்டுள்ளது. வெப்பமடையும் போது தனிமங்களாக சிதைவடைகிறது.[9][10] ஓர் இருபடி Fe2H4 சேர்மத்தையும் FeH2(H2)2 மற்றும் FeH2(H2)3 போன்ற மூலக்கூறு ஐதரசன்களுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களையும் உருவாக்கும்.[8][11]
- ஒரு காலத்தில் மூவைதரிடோ இரும்பு (FeH3) இருப்பதாக நம்பப்பட்டது. பின்னர் FeH மூலக்கூறு ஐதரசன் H2 உடன் பிணைக்கப்பட்டுள்ளது என்று காட்டப்பட்டது.
பலபடி வலைப்பின்னல் சேர்மங்கள்
[தொகு]- இரும்பு(I) ஐதரைடு - 3.5 கிகா பாசுக்கலுக்கும் அதிகமான அழுத்தங்களில் நிலையானது.
- இரும்பு(II) ஐதரைடு - பெரசு ஐதரைடு என்றும் அழைக்கப்படுகிறது. 45 மற்றும் 75 கிகா பாசுக்கலுக்கு இடைப்பட்ட அழுத்தங்களில் நிலையானது.
- இரும்பு(III) ஐதரைடு - பெரிக் ஐதரைடு என்றும் அழைக்கப்படுகிறது. 65 கிகா பாசுக்கலுக்கும் அதிகமான அழுத்தங்களில் நிலையானது.
- இரும்பு பெண்டா ஐதரைடு- FeH5 ஒரு பல் ஐதரைடு ஆகும். இணைதிறன் விதிகளால் எதிர்பார்க்கப்படுவதை விட அதிக ஐதரசன்கல் இதில் உள்ளன. 85 கிகா பாசுக்கலுக்கும் அதிகமான அழுத்தங்களின் கீழ் நிலையானது. FeH3 மற்றும் அணு ஐதரசன் ஆகியன மாறி மாறியுள்ள தாள்களைக் கொண்டுள்ளது.[12]
இரும்பு ஐதரசன் அணைவுச் சேர்மங்கள்
[தொகு]இரும்பு ஐதரசன் அணைவுச் சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டுகள்:
- இரும்பு டெட்ராகார்பனைல் ஐதரைடு - FeH2(CO)4 - 1931ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட முதல் சேர்மம்.[6]
- FeH2(CO)2[P(OPh)3]2
- மக்னீசியம் மற்றும் இரும்புத் தூள்களின் சேர்மங்களை ஐதரசனுடன் சேர்த்து உயர் அழுத்தத்தில் சூடுபடுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மக்னீசியம் இரும்பு எக்சா ஐதரைடு (Mg2FeH6) போன்ற FeH64− அயனியின் உப்புகள்.
- இரண்டு மற்றும் பல்லிரும்பு ஐதரைடு [HFe2(CO)8]− மற்றும் [HFe3(CO)11]− கொத்து.
- மூலக்கூற்று ஐதரசன் ஈந்தணைவிகளைக் கொண்ட அணைவுச் சேர்மங்களும் அறியப்படுகின்றன.
உயிரியல் தோற்றம்
[தொகு]மெத்தனோசன்கள், ஆர்க்கீயா, பாக்டீரியாக்கள் மற்றும் சில ஒருசெல்லுலார் யூகாரியோட்டுகள் ஐதரசனேசு நொதிகளைக் கொண்டுள்ளன. இவை தனி ஐதரசனை உள்ளடக்கிய வளர்சிதை மாற்ற வினைகளை ஊக்குவிக்கின்றன. இதன் செயலில் உள்ள தளம் Fe–H பிணைப்புகள் மற்றும் பிற ஈந்தணைவிகளைக் கொண்ட இரும்பு அணுவாகும்.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. ISBN 0080379419.
- ↑ 2.0 2.1 J.V. Badding, R.J. Hemley, and H.K. Mao (1991), "High-pressure chemistry of hydrogen in metals: in situ study of iron hydride." Science, American Association for the Advancement of Science, volume 253, issue 5018, pages 421–424 எஆசு:10.1126/science.253.5018.421
- ↑ Saxena, Surendra K.; Liermann, Hanns-Peter; Shen, Guoyin (2004). "Formation of iron hydride and high-magnetite at high pressure and temperature". Physics of the Earth and Planetary Interiors 146 (1–2): 313–317. doi:10.1016/j.pepi.2003.07.030. Bibcode: 2004PEPI..146..313S.
- ↑ A. S. Mikhaylushkin, N. V. Skorodumova, R. Ahuja, B. Johansson (2006), "Structural and magnetic properties of FeHx (x=0.25; 0.50;0.75)" பரணிடப்பட்டது 23 பெப்ரவரி 2013 at Archive.today. In: Hydrogen in Matter: A Collection from the Papers Presented at the Second International Symposium on Hydrogen in Matter (ISOHIM), AIP Conference Proceedings, volume 837, pages 161–167 எஆசு:10.1063/1.2213072
- ↑ Hiroshi Nakazawa, Masumi Itazaki "Fe–H Complexes in Catalysis" Topics in Organometallic Chemistry (2011) 33: 27–81. எஆசு:10.1007/978-3-642-14670-1_2
- ↑ 6.0 6.1 Hieber, W.; F. Leutert (1931). "Zur Kenntnis des koordinativ gebundenen Kohlenoxyds: Bildung von Eisencarbonylwasserstoff". Naturwissenschaften 19 (17): 360–361. doi:10.1007/BF01522286. Bibcode: 1931NW.....19..360H. https://archive.org/details/sim_naturwissenschaften_1931-04-24_19_17/page/360.
- ↑ Antonov, V. E.; Cornell, K.; Fedotov, V.K.; Ponyatovsky, A. I. Kolesnikov E.G.; Shiryaev, V.I.; Wipf, H. (1998). "Neutron diffraction investigation of the dhcp and hcp iron hydrides and deuterides". Journal of Alloys and Compounds 264 (1–2): 214–222. doi:10.1016/S0925-8388(97)00298-3. http://issp3.issp.ac.ru/lhpp/PapersAntonov/114.pdf.
- ↑ 8.0 8.1 Wang, Xuefeng; Andrews, Lester (2009). "Infrared Spectra and Theoretical Calculations for Fe, Ru, and Os Metal Hydrides and Dihydrogen Complexes". The Journal of Physical Chemistry A 113 (3): 551–563. doi:10.1021/jp806845h. பப்மெட்:19099441. Bibcode: 2009JPCA..113..551W.
- ↑
Helga Körsgen, Petra Mürtz, Klaus Lipus, Wolfgang Urban, Jonathan P. Towle, John M. Brown (1996), "The identification of the FeH
2 radical in the gas phase by infrared spectroscopy". The Journal of Chemical Physics volume 104(12) page 4859 எஆசு:10.1063/1.471180 - ↑ George V. Chertihin and Lester Andrews (1995), "Infrared spectra of FeH, FeH
2, and FeH
3 in solid argon" Journal of Physical Chemistry volume 99, issue 32, pages 12131–12134 எஆசு:10.1021/j100032a013 - ↑ Andrews, Lester (2004). "Matrix infrared spectra and density functional calculations of transition metal hydrides and dihydrogen complexes". Chemical Society Reviews 33 (2): 123–132. doi:10.1039/B210547K. பப்மெட்:14767507. https://archive.org/details/sim_chemical-society-great-britain-chemical-society-reviews_2004-02-20_33_2/page/122.
- ↑ Pépin, C. M.; Geneste, G.; Dewaele, A.; Mezouar, M.; Loubeyre, P. (27 July 2017). "Synthesis of FeH5 : A layered structure with atomic hydrogen slabs". Science 357 (6349): 382–385. doi:10.1126/science.aan0961. பப்மெட்:28751605. Bibcode: 2017Sci...357..382P.
- ↑ Fontecilla-Camps, J. C.; Amara, P.; Cavazza, C.; Nicolet, Y.; Volbeda, A. (2009). "Structure-function relationships of anaerobic gas-processing metalloenzymes". Nature 460 (7257): 814–822. doi:10.1038/nature08299. பப்மெட்:19675641. Bibcode: 2009Natur.460..814F. https://archive.org/details/sim_nature-uk_2009-08-13_460_7257/page/814.