இரும்பு(II,III) சல்பைடு
இரும்பு(II,III) சல்பைடு (Iron(II,III) sulfide) என்பது FeS·Fe2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். Fe3S4 என்ற வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். இரும்பு(II,III) ஆக்சைடுடன் இரும்பு(II,III) சல்பைடு சேர்மம் மிகவும் ஒத்திருக்கிறது. இயற்கையில் கிரெய்கைட்டு என்ற சல்பைடு கனிமமாக காணப்படுகிறது. காந்தத்தன்மை கொண்ட இச்சேர்மம் காந்தநாட்ட பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அவற்றில் காணப்படும் ஓர் உயிரி-கனிமமாகவும் கருதப்படுகிறது. கலப்பு இணைதிறன் சேர்மமான , இதில் Fe2+ மற்றும் Fe3+ மையங்கள் 1:2 என்ற விகிதத்தில் உள்ளன.
படிகக் கட்டமைப்பு
[தொகு]இரும்பு(II,III) சல்பைடின் படிகவியல் அலகு செல் Fd3m இடக்குழுவுடன் கூடிய கனசதுர வடிவமானதாகும். S எதிர்மின் அயனிகள் ஒரு கனசதுர நெருக்கப் பொதிவுக் கட்டமைப்பு அணிக்கோவையை உருவாக்குகின்றன. Fe நேர்மின் அயனிகள் நான்முகி மற்றும் எண்முகி தளங்களை ஆக்கிரமித்துள்ளன.[1][2]
காந்த மற்றும் மின்னணு பண்புகள்
[தொகு]தொடர்புடைய ஆக்சைடான மேக்னடைட்டைப் (Fe3O4) போலவே, இரும்பு(II,III) சல்பைடும் ஒரு பெர்ரி காந்தப் பொருளாகும். இதில் நான்முகி தளங்களில் உள்ள FeIII மையங்களின் சுழல் காந்தத் திருப்புத்திறன்கள், எண்முகி தளங்களில் உள்ளவற்றிற்கு எதிர் திசையில் அமைந்து, ஒரு நிகர காந்தமயமாக்கலை உருவாக்குகின்றன. இரண்டு உலோகத் தளங்களிலும் உயர் சுழல் குவாண்டம் எண்கள் உள்ளன. கிரெய்கைட்டின் மின்னணு அமைப்பு ஓர் அரை உலோகத்தின் அமைப்பைக் கொண்டுள்ளது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W.; Nichols, Monte C., eds. (1990). "Greigite" (PDF). Handbook of Mineralogy. Vol. I (Elements, Sulfides, Sulfosalts). Chantilly, VA, US: Mineralogical Society of America. ISBN 978-0-9622097-0-3. Retrieved December 5, 2011.
- ↑ Vaughan, D. J.; Craig, J. R. "Mineral Chemistry of Metal Sulfides" Cambridge University Press, Cambridge: 1978. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-21489-0.
- ↑ Devey, Anthony; Grau-Crespo, R.; De Leeuw, N.H. (2009). "Electronic and magnetic structure of Fe3S4: GGA+U investigation". Physical Review B 79 (19). doi:10.1103/PhysRevB.79.195126. Bibcode: 2009PhRvB..79s5126D.
- ↑ Wang, Jun; Cao, Shi-He; Wu, Wei; Zhao, Guo-Meng (2011). "The Curie temperature and magnetic exchange energy in half-metallic greigite Fe3S4". Physica Scripta 83 (4). doi:10.1088/0031-8949/83/04/045702. Bibcode: 2011PhyS...83d5702W.
மேலும் வாசிக்க
[தொகு]- Mann, Stephen; Sparks, Nicholas H. C.; Richard B. Frankel; Bazylinski, Dennis A.; Jannasch, Holger W. (1990). "Biomineralization of ferrimagnetic greigite (Fe3S4) and iron pyrite (FeS2) in a magnetotactic bacterium". Nature 343 (6255): 258. doi:10.1038/343258a0. Bibcode: 1990Natur.343..258M. https://digitalcommons.calpoly.edu/phy_fac/269.
- Roberts, A (1995). "Magnetic properties of sedimentary greigite (Fe3S4)". Earth and Planetary Science Letters 134 (3–4): 227–236. doi:10.1016/0012-821X(95)00131-U. Bibcode: 1995E&PSL.134..227R.
- Heywood, B. R.; Bazylinski, D. A.; Garratt-Reed, A.; Mann, S.; Frankel, R. B. (1990). "Controlled biosynthesis of greigite (Fe3S4) in magnetotactic bacteria". Naturwissenschaften 77 (11): 536–538. doi:10.1007/BF01139266. Bibcode: 1990NW.....77..536H. https://digitalcommons.calpoly.edu/phy_fac/134.
- Reynolds, R. L.; Tuttle, M. L.; Rice, C. A.; Fishman, N. S.; Karachewski, J. A.; Sherman, D. M. (1994). "Magnetization and geochemistry of greigite-bearing Cretaceous strata, North Slope basin, Alaska". American Journal of Science 294 (4): 485–528. doi:10.2475/ajs.294.4.485.
- Snowball, Ian; Thompson, Roy (1988). "The occurrence of Greigite in sediments from Loch Lomond". Journal of Quaternary Science 3 (2): 121–125. doi:10.1002/jqs.3390030203. Bibcode: 1988JQS.....3..121S.
- Stanjek, H.; Fassbinder, J. W. E.; Vali, H.; Wagele, H.; Graf, W. (1994). "Evidence of biogenic greigite (ferrimagnetic Fe3S4) in soil". European Journal of Soil Science 45 (2): 97–103. doi:10.1111/j.1365-2389.1994.tb00490.x. https://archive.org/details/sim_european-journal-of-soil-science_1994-06_45_2/page/96.
- Hoffmann, V (1992). "Greigite (Fe3S4): magnetic properties and first domain observations". Physics of the Earth and Planetary Interiors 70 (3–4): 288–301. doi:10.1016/0031-9201(92)90195-2. Bibcode: 1992PEPI...70..288H.
- Fassbinder, Jörg W. E.; Stanjek, Helge (1994). "Magnetic properties of biogenic soil greigite (Fe3S4)". Geophysical Research Letters 21 (22): 2349–2352. doi:10.1029/94GL02506. Bibcode: 1994GeoRL..21.2349F.