இருமையப் பண்பகத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருமையப் பண்பகத்திரி (dicentric chromosome) என்பது கதிர் வீச்சின் தாக்கத்தால் ஏற்படும் பல விளைவுகளில் ஒன்று. பண்பகத்திரியில் ஏற்படும் முறிவு காரணமாக அடுத்தடுத்து காணப்படும் குரோமசோம்களின் முறிந்த பகுதிகள் இணைவதால் இப்படிப்பட்ட இரு மையங்களுடன் கூடிய அசாதாரண பண்பகத்திரிகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இவ்வாறு தோன்றும் இரு மையப் பண்பகத்திரிகள் அயனியாக்கும் கதிர்களின் ஆற்றலையும் ஆற்றல் வீதத்தினையும் பொறுத்திருக்கின்றன. ஆற்றல் கூடும் போது இரு மையப் பண்பகத்திரிகளும் அதிகரிக்கின்றன. ஏற்பளவு வீதம் கூடும் போதும் இது அதிகரிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமையப்_பண்பகத்திரி&oldid=1830664" இலிருந்து மீள்விக்கப்பட்டது