உள்ளடக்கத்துக்குச் செல்

இருமெத்தில் மலோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருமெத்தில் மலோனேட்டு[1]
Skeletal formula of dimethyl malonate
Ball-and-stick model of the dimethyl malonate molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இருமெத்தில் புரோப்பேன் டையோயேட்டு
வேறு பெயர்கள்
மலோனிக் அமில இர்மெத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
108-59-8 Y
ChemSpider 21106102 Y
InChI
 • InChI=1S/C5H8O4/c1-8-4(6)3-5(7)9-2/h3H2,1-2H3 Y
  Key: BEPAFCGSDWSTEL-UHFFFAOYSA-N Y
 • InChI=1/C5H8O4/c1-8-4(6)3-5(7)9-2/h3H2,1-2H3
  Key: BEPAFCGSDWSTEL-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7943
 • COC(=O)CC(=O)OC
UNII EM8Y79998C Y
பண்புகள்
C5H8O4
வாய்ப்பாட்டு எடை 132.12 g·mol−1
தோற்றம் Colorless liquid
அடர்த்தி 1.154
உருகுநிலை −62 °C (−80 °F; 211 K)
கொதிநிலை 180 முதல் 181 °C (356 முதல் 358 °F; 453 முதல் 454 K)
சிறிதளவு கரையும்
-69.69·10−6 செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இருமெத்தில் மலோனேட்டு (Dimethyl malonate) என்பது C5H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பார்பிட்டூரிக் அமிலம் போன்ற கரிமச் சேர்மங்களைத் தயாரிக்க உதவும் பொது வினையாக்கியாக இது பயன்படுகிறது. மலோனிக் அமிலத்தின் ஈரெசுத்தர் வழிப்பெறுதியான இருமெத்தில் மலோனேட்டு மலோனிக் எசுத்தர் தயாரிப்பில் பயன்படுகிறது. இருமெத்தாக்சிமெத்தேனையும் கார்பனோராக்சைடையும் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இருமெத்தில் மலோனேட்டு உருவாகிறது.

இருமெத்தில் மலோனேட்டு வாசனைத் தொழிலில் இயாசுமோனேட்டுகளின் தொகுப்பில் ஒரு மூலப்பொருளாக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மெத்தில் ஈரைதரோயாசுமோனேட்டு தயாரிப்பு இதற்கு உதாரணமாகும். வளைய பெண்டனோன், பெண்டனால் இருமெத்தில் மலோனேட்டு ஆகிய மூன்றும் இத்தயாரிப்பில் பயன்படுகின்றன.[2] எடியோன் கிட்டத்தட்ட அனைத்து நல்ல வாசனை திரவியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு வரை, பிர்மெனிச்சு நிறுவனத்தின் அதிக விற்பனையான சேர்மமாக எடியோன் இருந்தது.[3]

எபெய் செங்சின் நிறுவனம் இருமெத்தில் மலோனேட்டின் கனஅளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராகும். மேலும் இந்நிறுவனம் 1940 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட குளோரோ அசிடிக் அமிலம் / சோடியம் சயனைடு செயல்முறையைப் பயன்படுத்துகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

 1. Merck Index, 11th Edition, 6009.
 2. Schaefer, Bernd (2014). Natural Products in the Chemical Industry. Springer. p. 91–92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-54461-3.
 3. Davies, E. (2009). "The sweet scent of success". Chemistry World: 40–44. http://www.rsc.org/images/Fragrance_tcm18-142947.pdf. 
 4. Stoesser, WC. "Preparation of malonic esters," US Patent 2337858
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமெத்தில்_மலோனேட்டு&oldid=3419016" இலிருந்து மீள்விக்கப்பட்டது