இருமக்கோப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் அணிவரிசை முதல் வரிசையின் தொடக்க முகவரியைக் குறிக்கிறது * என்ற குறியீடு, 'திரும்ப திரும்ப' அமைவதைக் குறிக்கிறது
'எக்சு'த்(hex) தொகுப்பியின் திரைப்புலப்படம்

இருமக்கோப்பு (Binary file) என்பது கணினிவடிவக் கோப்புகளில் ஒன்றாகும். உரைக்கோப்பினைப் போன்று, மின்னணு வடிவினை அடிப்படையாகக் கொண்டு, கிடைமட்ட நேர்கோட்டு வடிவில் அமைந்து இருக்கும். ஆனால், நிரலாக்க உதவியோடு தான் படித்தறிய முடியும். மனித புலன்களால் அறியமுடியாது. தோற்ற அடிப்படையில், இவை இரண்டுமே கணினிக்கோப்புகள் ஆகும்.[1] எனவே, இருமக்கோப்பும், உரைக்கோப்பும் வேறுபட்டவை ஆகும்.[2] சிலர் இதனை உரையிலாக் கோப்பு ('non-text file')என்றும் அழைப்பர்.[3] பல இருமக்கோப்பு வடிவங்கள் உரையைப் போன்ற பகுதிகளைப் பெற்று, உரைக்கோப்புப் போன்று புரிந்து கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சில மைக்ரோசாப்டு நிறுவனத்தின் இருமக்கோப்புகள்(RTF,DOC) உரைவடிவம் போன்ற, ஆவணக்கோப்பு வடிவங்களைப்பெற்று விளங்குகின்றன. இவை ஆவணத்தின் உரைப்பகுதியையும், அந்த ஆவணத்தின் வடிவக் குறிப்புகளை, இருமக்கோப்புக் குறியீடுகளாகவும் அமையப் பெற்று இருக்கின்றன. [3] இக்கோப்புகளைத் தொகுக்க, இருமக்கோப்புத் தொகுப்பிகள்(hex editor or byte editor) உள்ளன. அவை இக்கோப்புகளை, 16(hexadecimal) எண்களாக மாற்றி காட்டும் திறன் கொண்டவை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமக்கோப்பு&oldid=2470927" இருந்து மீள்விக்கப்பட்டது