இருப்பு மேலாண்மை மென்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இருப்பு மேலாண்மை மென்பொருள் என்பது இருப்பில் இருக்கும் பொருட்கள், வாங்குவதற்கான கட்டளைகள், விற்பனைகள், விநிநோயோகிக்கப்படவேண்டியவை போன்ற தகவல்களை மேலாண்மை செய்ய உதவும் மென்பொருள் ஆகும். இருப்பு மேலாண்மை மென்பொருட்கள் பொதுவாக கணக்கியல் வசதிகளைக் கொண்டிருக்கும், அல்லது கணக்கியல் மென்பொருட்களோடு சேர்ந்தியங்க வல்லவையாக இருக்கும். எளிமையான அட்டவணைச் செயலியில் இருந்து வணிக நுண்ணறிவு மிக்க மென்பொருட்கள் என பலதரப்பட்ட இருப்பு மேலாண்மை மென்பொருட்கள் உள்ளன.