உள்ளடக்கத்துக்குச் செல்

இருபீனைல் இருசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபீனைல் இருசல்பைடு
Diphenyl disulfide
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1'-டைசல்பேன்டைல்டைபென்சீன்
வேறு பெயர்கள்
டைசல்பேனைல்டைபென்சீன்
டைபீனைல் டைசல்பைடு
பீனைல் டைசல்பைடு
இனங்காட்டிகள்
882-33-7 Y
ChEMBL ChEMBL462861 Y
ChemSpider 12861 Y
InChI
  • InChI=1S/C12H10S2/c1-3-7-11(8-4-1)13-14-12-9-5-2-6-10-12/h1-10H Y
    Key: GUUVPOWQJOLRAS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C12H10S2/c1-3-7-11(8-4-1)13-14-12-9-5-2-6-10-12/h1-10H
    Key: GUUVPOWQJOLRAS-UHFFFAOYAY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13436
வே.ந.வி.ப எண் SS6825000
  • c1ccc(cc1)SSc2ccccc2
UNII 7P54H519IJ Y
பண்புகள்
C12H10S2
வாய்ப்பாட்டு எடை 218.33 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
உருகுநிலை 61 முதல் 62 °C (142 முதல் 144 °F; 334 முதல் 335 K)
கரையாது
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் டை எத்தில் ஈதர், பென்சீன், கார்பன் டைசல்பைடு, மற்றும் டெட்ரா ஐதரோ பியூரான் போன்றவற்ரில் கரையும்
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றி எரியும்
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S26
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இருபீனைல் இருசல்பைடு (Diphenyl disulfide) (C6H5S)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இப்படிகச் சேர்மம் பெரும்பாலும் Ph2S2 என்ற சுருக்கக் குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. கரிமத்தொகுப்பு வினைகளில் பொதுவாகத் தோன்றும் பல கரிம இருசல்பைடுகளில் இதுவும் ஒன்றாகும். தயோபீனாலின் சிறிய மாசுபாடு இந்த சேர்மத்துடன் தொடர்புடைய உடன்படாத வாசனையை ஏற்படுத்துகிறது.

தயாரிப்பு

[தொகு]

தயோபீனாலை ஆக்சிசனேற்றம் செய்து பொதுவாக இருபீனைல் இருசல்பைடு தயாரிக்கப்படுகிறது.

2 PhSH + I2 → Ph2S2 + 2 HI

ஐதரசன் பெராக்சைடையும் ஆக்சிசனேற்றம் செய்யப் பயன்படுத்தி இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது.[1] ஆய்வகங்களிலும் Ph2S2 அரிதாக தயாரிக்கப்படுகிறது. ஏனெனில் தயாரிக்கப்படும் முன்னோடிச் சேர்மம் விரும்பத்தகாத மணத்தைப் பெற்றுள்ளது.

கட்டமைப்பு

[தொகு]

பெரும்பாலான கரிம இருசல்பைடுகளைப் போலவே இருபீனைல் இருசல்பைடும் சமதளமல்லாத இருமுக கோணத்துடன் 85 பாகையை நெருங்குகிறது. இருபீனைல் இருசல்பைடு விரைவாக இடைமாற்றமடையும் ஆடியெதிர் உரு சுழல்வடிவமைப்பு கலவையாகக் காணப்படுகிறது.

இருபீனைல் இருசல்பைடின் ஆடியெதிர் மாற்றியம் மாதிரி

வினைகள்

[தொகு]

கரிமத் தொகுப்பு வினைகளில் இருபீனைல் இருசல்பைடு PhS மூலமாகப் பயன்படுத்தப்படுகிறது. [2] ஒரு பொதுவான ஈனோலேட்டு வினை வழியாக PhS பதிலீடு செய்யப்பட்ட கார்போனைல் சேர்மங்களை உருவாக்குவதைக் இது குறிக்கிறது.

RC(O)CHLiR’ + Ph2S2 → RC(O)CH(SPh)R’ + LiSPh

ஒடுக்கம்

[தொகு]

இருசல்பைடுகளுக்கான அடையாள வினையாகக் கருதப்படும் ஒடுக்க வினையை Ph2S2 சேர்மமும் ஈடுபடுகிறது.

Ph2S2 + 2 M → 2 MSPh (M = Li, Na, K)

சோடியம் போரோ ஐதரைடு, சோடியம் மூவெத்தில்போரோ ஐதரைடு போன்ற ஐதரைடு வினையாக்கிகளும் ஒடுக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

குளோரினேற்றம்

[தொகு]

இருபீனைல் இருசல்பைடு குளோரினுடன் வினைபுரிந்து பீனைல்சல்பீனைல் குளோரைடு உருவாகிறது. தனித்துப் பிரிப்பது கடினம் என்பதால் இது தளத்திலேயே தயாரித்துக் கொள்ளப்படுகிறது.

வினையூக்கி

[தொகு]

புற ஊதா ஒளியில் நிகழும் ஆல்கீன்களின் ஒருபக்க-மறுபக்க மாற்றிய வினையை வினையூக்கம் செய்கிறது. [3]

ஆக்சிசனேற்றம்

[தொகு]

மெத்தனாலில் உள்ள ஈய டெட்ரா அசிட்டேட்டுடன் இருபீனைல் இரு அசிட்டேட்டு ஆக்சிசனேற்றம் அடைந்து சல்பினைட்டு எசுத்தர் உருவாகிறது. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ravikumar,K. S.; Kesavan, V.; Crousse, B.; Bonnet-Delpon, D.; Bégué, J.-P. (2003). "Mild and Selective Oxidation of Sulfur Compounds in Trifluoroethanol: Diphenyl Disulfide and Methyl Phenyl Sulfoxide". Organic Syntheses 80: 184. http://www.orgsyn.org/demo.aspx?prep=v80p0184. 
  2. Byers, J. H. "Diphenyl Disulfide" in Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette) 2004, J. Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289X.
  3. Thalmann, A. Oertle, K.; Gerlach, H. (1990). "Ricinelaidic Acid Lactone". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv7p0470. ; Collective Volume, vol. 7, p. 470
  4. Field, L.; Locke, J. M. (1973). "Methyl Benzenesulfinate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p0723. ; Collective Volume, vol. 5, p. 723
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபீனைல்_இருசல்பைடு&oldid=3081902" இலிருந்து மீள்விக்கப்பட்டது